கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

பருவமழை எப்போது? பரிபாடல் கூறுகிறது! - நெல்லை ஆ.கணபதி

ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம் என்று கூறுவர். "கர்ணனுக்குப் பிறகு கொடை இல்லை; கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை' என்பது பழமொழி. கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் மார்கழியிலே, பனிக்காலமாகி மழை குறையும். இது இயற்கை நியதி.

பரிபாடலில், வையை நதியில் மழைநீர் பெருகி ஓடுவது பற்றிப் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், மழை எப்போது பெய்யும் என்பதை நுட்பமாக விளக்கியுள்ளார். பாடல் இதோ:

""விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப

எரிசடை, எழில்வேழம் தலையெனக் கீழ்இருந்து

தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள்

உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர

வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி

புந்தி மிதுனம் பொருந்த, புவர் விடியல் (6)

அங்கி உயர்நிற்ப, அந்தணன் இல்லத்துணைக்கு

உப்பால்எய்த இறைஎமன்

வில்லின் கடை மகரம்மேவ பாம்பு ஒல்லை

மதியம் மறைய வருநாளில்-வாய்ந்த

பொதியில் முனிவன் புரைவரைக்கீறி

மிதுனம் அடைய விரிகதிர் வேனில்

எதிர்வரவு மாரி இயைக! எனஇவ் ஆற்றால் (12)

புரைகெழு சையம் பொழிமழை தாழ,

நெரி தரூஉம் வையைப் புனல்'' (14)

வானம் முழுவதும் விரியும் ஒளிபரப்பி நிற்கும் சந்திரனுடன், கார்த்திகை, திருவாதிரை, பரணி ஆகியவை சேரும் நாட்கள், தீயின் கார்த்திகை மேஷ ராசியில் கால்பங்கும் (பரணியுடன்) முக்கால் பங்கு ரிஷப ராசியிலும் வரும். இவை ரிஷப, மிதுன, மேஷ ராசிகளில் அமையும். இவற்றுடன் உருவமும், நிறமும் உள்ள வெள்ளி (சுக்கிரன்) வந்து ரிஷப ராசியில் சேரும். செவ்வாய் மேஷத்துடன் சேரும். பொருள்களை ஆயும் புந்தி (புதன்) மிதுனத்தில் சேரும். கார்த்திகை இருள் நீங்கி விடியும்; வியாழனோ மகரம், கும்பம் எனும் இரு ராசிகளுக்கும் மேலே உள்ள மீன ராசியைச் சேரும். (அந்தணன், குரு, வியாழன் என்பது ஒரு பொருட்பன்மொழி). மகரம், கும்பம், சனியின் வீடுகள். எமன் சனியின் தமையன். வில்லின் (தனுசு) பின்னே மகரம், கும்பத்தின் அடுத்தும் மீனம் இரண்டும் அந்தண (குரு)னின் வீடுகள். பாம்பு மதிநிறை மறைய ஒல்லை வரும் நாள், சந்திரனும் ராகுவும் மகரத்தில் நிற்கும். கேது, எதிர் வரிசை ஏழாம் வீடு கற்கடகத்தில் நிற்கும் நாள் - இவ்வாறு கோள்கள் அமைந்திருக்கும் கார்காலத்தின் துவக்கமே மழை அதிகம் பொழியச்செய்யும் பருவமழை துவங்கும் நாள் என்பது ஜோதிட வல்லுநர்கள் முடிவு.

""புரை கெழுசையம் உயர்ந்த சைய மழையில் வானிலிருந்து மழைபெய்தது; வையை நதியில் புதுப்புனல் பெருகியது'' என்பது பரிபாடல் கூற்று. காற்றழுத்த தாழ்வு நிலை என வானிலை அறிக்கை கூறுவதும் இதை வைத்துத்தான்.பெய்யாமல் கெடுப்பதும் மாமழை; பெய்து கெடுப்பதும் மாமழையே'' என்று முன்னோர் கூறுவது வழக்கம்.

நன்றி - தமிழ்மணி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ