இடுகைகள்

கோகுலக்கண்ணன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

காலமும் நெருப்புத்துண்டங்களும் - கோகுலக்கண்ணன்

தோளில் தொங்கும் பையுடன் அவன் பள்ளிக்கூடத்திற்குக் கிளம்பினான். தெருமுனையில் ஆறுமுகத்தின் வாடகை சைக்கிள் கடை. பக்கத்தில் பிள்ளையார் கோயில். அங்கேதான் சதுர்த்திக்கு நாடகம் போடுவார்கள். சிவனுக்கும், நக்கீரனுக்கும் நடக்கும் விவாதம்தான் போன சதுர்த்தியிரவு போட்ட நாடகம். கோயிலைத் தாண்டி சற்றே சாயும் தெருவில் இறங்கினால் அங்கு சாமியின் கடை. வண்ண மிட்டாய்களும் பட்டர் பிஸ்கெட்களும் இருக்கும். அங்குசாமியின் பையன் பெருமாளும், அவனும் முதலாம் கிளாஸில் சேர்ந்து படித்தார்கள். ஆனால் ஸ்கூல் முழுவதுமே முஸ்லிம்களாக இருக்கிறார்கள் என்று பெருமாளை வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார் அங்குசாமி. பெருமாள் ஸெயிண்ட் மேரீஸுக்குப் போய்விட்டான். கான்வெண்ட். அவனுக்குக்கூட அந்தப் பெயர் பிடித்திருந்தது. கான்வெண்ட் பள்ளிகளின் பெயர்கள் எல்லாமே சொல்லுவதற்கே நன்றாக இருந்தது. ஸெயிண்ட் ஜோஸப். ஸெயிண்ட் இக்னேஷியஸ். அப்புறம் அங்குசாமி கடைக்குப் பக்கத்தில் முதலியார் வீடு. அங்கேதானே முதன்முதலாக டி.வி. வாங்கினார்கள். ஒளியும் ஒலியும் பார்க்க நாலணா, ஞாயிறு சாயந்திரம் படம் பார்க்க எட்டணா. அம்மா சில படங்களுக்கு அவனை அனுப்பமாட்டாள். கல்யாணர

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ