இடுகைகள்

அந்தாதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

சிந்தனைக்குரிய சிற்றிலக்கியங்கள் - 9 - ப.முருகன்

அந்தாதி அமாவாசையை பவுர்ணமி என்று சொல்பவர் யாராவது உண்டா? அப்படி ஒருவர் சொன்னதாகவும், அப்படியா, அதை நிரூபிக்கவில்லை என்றால் நெருப்பின் மீது நிற்க வைப்பேன் என்று ஒரு மன்னன் கூறியதாகவும் ஒருபுராணக் கதை உண்டு. அப்படிச் சொன்னது அபிராமி பட்டர் என்பார்கள். ஆதி பராசக்தி என்றொரு திரைப்படம் இதைக் காட்சியாக்கி, அபிராமி பட்டர் ஆதி பராசக்தியை வேண்டிப் பாடுவதாக ஒரு பாடலும் இடம் பெற்றிருக்கும். கீழே நெருப்பு எரியும் மேலே ஊஞ்சலில் அபிராமி பட்டர் நின்று கொண்டு பாடுவார். சொல்லடி அபிராமி. வானில் சுடர் வருமோ எனக்கு இடர் வருமோ பதில் சொல்லடி அபிராமி என்ற பாடலை எப்போதாவது கோவில் திருவிழாக்களில் கேட்டிருக்கலாம். அந்தப் பாடல் முடியும் தறுவாயில் பராசக்தி வானில் தோன்றுவதாகவும், அவளது காதணியை கழற்றி எறிவதாகவும், அது நிலவாக ஜொலிப்பதாகவும். அதைக் கண்ட மன்னன் ஆகா, நாம் அபிராமி பட்டரை துன்புறுத்தி விட்டோமே. அவரது பக்திக்காக அமாவாசையே பவுர்ணமியாக மாறிவிட்டதே என்று மனம் மாறி அபிராமி பட்டரை வாழ்த்தி வணங்குவதாகவும் காட்சிகள் விரியும். இவற்றில் நமக்கு வேண்டியது அந்த அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதி

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ