தளத்தைப் பற்றி

ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன். அவற்றில் ஏதேனும் குறையோ பிழையோ இருந்தால் அவை நீக்கப்படும்.


நன்றிகள்

தமிழ் இலக்கியத்தின் செழுமையான படைப்புகளை ஒருங்கிணைத்து உருவாக்கபட்டுள்ள இந்த வலைப்பக்கம் மிகச்சிறப்பாக உள்ளது, கட்டுரைகள், சிறுகதைகள். ஆய்வுரைகள் என்று விரிவான பகுப்புமுறை இதன் தனிச்சிறப்பு, இம்முயற்சிக்கு காரணமாக இருந்த சிங்கமணிக்கு மனம் நிறைந்த பாராட்டுகள்.

எஸ்.ராமகிருஷ்ணன்

http://www.sramakrishnan.com/?p=2549

••••••••••••••••

இலக்கியம் பற்றிய கட்டுரைகளைப் பல்வேறு இணையதளங்களில் இருந்து தொகுத்தளிக்கும் இணையப்பக்கம் இது

ஜெயமோகன்

http://www.jeyamohan.in/?p=19945

•••••••••••••••

தமிழ் புனைவுகளைத் தொகுக்கும் இன்னொரு சிறப்பான தளம். கட்டாயம் உங்கள் லிஸ்டில் இருக்க வேண்டும்.

தொகுப்பாளர் சிங்கமணியின் வார்த்தைகளில்:
ஏராளமான தளங்கள் தமிழில் உள்ளன. அவற்றிலிருந்து காலத்தால் அழிக்க முடியாதவை சிலவற்றை இங்கே இந்த இடத்தில் தொகுக்கின்றேன்.

அவருக்கு என் வாழ்த்துக்கள்!

RV (சிலிகான் ஷெல்ஃப்)

http://siliconshelf.wordpress.com

••••••••••••••••


அழியாசுடர்கள் தளம் போல தமிழ்த்தொகுப்புகளும் அருமையான தளம். கட்டாயம் நாம் வாசிக்க வேண்டிய தளங்களில் ஒன்று. சங்க இலக்கியம், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கவிதைகள் எனப் பலவற்றையும் அருமையாக தொகுத்த சிங்கமணிக்கு தமிழ்வாசகனின் நன்றிகள் பல. பகிர்விற்கு நன்றி.


•••••••••••••••••


Oh my god.. Lot of short stories here... All popular writes....

I request u also can put the links here for all..So everyone can read,,,,,..

http://www.penmai.com/forums/stories-novels/5257-links-famous-books-enjoyyyy-reading.html

•••••••••••••••

தமிழ்த் தொகுப்புகள் வலைப்பதிவு ஒரு பயனுள்ள திரட்டியாக உள்ளது. எங்களைப் போன்ற பேராசிரியர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இத் தமிழ்த் தொகுப்புகள் ஒரு கொடை என்றே சொல்லலாம்.

http://munaivarilango.blogspot.in/

http://nailango.blogspot.in/

இவை என்னுடைய தமிழாய்வுக் கட்டுரைகளுக்கான வலைப்பதிவுகள். உங்களின் தமிழ்த் தொகுப்புகள் வலைப்பதிவில் இடம்பெறத் தக்க பல ஆய்வுக் கட்டுரைகள் இவ்வலைப்பதிவுகளில் உள்ளன.



முனைவர் நா.இளங்கோ
தமிழ் இணைப் பேராசிரியர்
பட்டமேற்படிப்பு மையம்
புதுச்சேரி-8

••••••••••••••••••••


நவீன தமிழிலக்கியத்தின் முன்னணி எழுத்தாளர்கள் மட்டுமின்றி இன்றைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளான சிறுகதைகள் பல்வேறு கட்டங்களில் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகியவை அடங்கிய முக்கியமான இணையதளம்.முக்கிய சிறுகதைகள் அனைத்தையும் இதில் படிக்கலாம்.



தொகுப்புகள் - பல தரப்பட்ட முக்கிய படைப்புகளை நமக்கு தருகின்றது.

நவீன இலக்கிய படைப்புகள் மட்டுமின்றி பல்வேறு மரபிலக்கியங்களையும்

இதில் வலையேற்றியுள்ளார்கள்.அனைவரும் தவறாமல் தொடரவேண்டிய இணையதளம் இது.

கிருஷ்ணகுமார் ஆதவன்


•••••••••••••••••••••••

தமிழில் எழுதப்பட்ட சிறுகதைகளை, மிக அகன்ற அளவுகோல்களை வைத்து அளந்தாலும் அவசியம் படித்தாகவேண்டியவை என ஓராயிரம் சிறுகதைகளை மட்டுமே கூறவேண்டிவரும் (நாவல்கள் எனில் ஒருநூறு) என என் வலைப்பக்கத்தில் ஒரு பதிவை எழுதியிருந்தேன். அந்த சர்வாதிகார தொனி எனக்கே பிடிக்கவில்லைதான் என்றாலும் அந்த எண்ணிக்கை நிறையப் பேருக்கு பிடித்துப்போய்விட்டது. அவற்றைப் பட்டியலிடு என்றார் நண்பர் ஒருவர். பட்டியல் என்ன பட்டியல் ? அவற்றில் 435 சிறுகதைகளை நீங்கள் வாசித்துக்கொள்ளவும் கூட நான் வழி சொல்கிறேன். http://thoguppukal.wordpress.com என்று ஓர் இணைய வலை உள்ளது. அந்த இணைய தளத்தில் 435 சிறுகதைகளையும் நீங்கள்கிளிக்கிப்படிக்கலாம்.

கவிஞர் மகுடேசுவரன்


•••••••••••••••••••••••


தங்கள் வலைப்பதிவை வாசித்தேன். மிகச் சிறந்த பணி. மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அன்புடன்,
வா.மணிகண்டன்.


******************

நன்றி என்.சொக்கன்.....

https://twitter.com/nchokkan

******************

மேலும் இத்தளத்திற்கு இணைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.....

இவையனைத்தும் பல்வேறு தளங்களில் வந்தவை. அனைவரும் படித்துப் பயன் பெறவேண்டும் என்ற நோக்கத்துடனேயே மீள் பதிவிடப்படுகிறது இதில் எந்தவித வணிக நோக்கமும் இல்லை. இவற்றில் யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் தெரியப்படுத்தவும் நீக்கிவிடுகிறேன். நன்றியுடன்...

தொடர்பு கொள்ள...

மின்னஞ்சல் முகவரி - ssingamani@gmail.com

6 கருத்துகள்:

இளமுருகன் சொன்னது…

உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்
மிக்க நன்றி

Unknown சொன்னது…

Great work, keep it up

Jayabarathan சொன்னது…

http://jayabarathan.wordpress.com/

தமிழில் அணுசக்தி பற்றியும், அண்டவெளிப் பயணம் பற்றியும் நான் 400 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். இந்த தொகுப்பில் என் பெயரும், என் வலைப் பெயரும் இடம் பெற வேண்டும்.

சி. ஜெயபாரதன்

Jayabarathan சொன்னது…

http://jayabarathan.wordpress.com/

தமிழில் அணுசக்தி பற்றியும், அண்டவெளிப் பயணம் பற்றியும் நான் 400 மேற்பட்ட விஞ்ஞானக் கட்டுரைகள் எழுதி உள்ளேன். இந்த தொகுப்பில் என் பெயரும், என் வலைப் பெயரும் இடம் பெற வேண்டும்.

சி. ஜெயபாரதன்

R.DEVARAJAN சொன்னது…

மிகவும் சிறந்த தளம்;
அரிய கட்டுரைகளைக் காண
முடிகிறது.பணி மேலும் சிறக்க
வாழ்த்துகள்

அன்புடன்
தேவ்
www.askdevraj.blogspot.com

Unknown சொன்னது…

Great Work