ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெயமோகன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நதிக்கரையில் - ஜெயமோகன்


எரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க, நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப்பேசிக்கொண்டிருந்தது. கரையோர மர நிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்து கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“மகாபலரே, உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான்.
பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான். நீர்வள்ளிக்கிழங்கு சற்றுத் துவர்ப்பு கண்டிருக்கிறது.”

“என்ன செய்வது?.”

“ஓரிரு துண்டுப் பழங்கள் போடு. அடேய் மச்சா, விறகை இழுத்துப் போடு அன்னம் புகைந்து விடப்போகிறது.”

சூதன் ஒருவன் தாழைப்பாயை விரித்துப் பழங்களைக் கழுவ ஆரம்பித்தான்.

பீமன் பெருமூச்சுடன் மீண்டும் நதியைப் பார்த்தான். இனம் புரியாத தவிப்புடன் மனம் தாவித் தாவிச் சென்றது. கோபத்துடன் கைகளை உரசிக் கொண்டு எழுந்தான். அடுப்புப் புகைக்கு அப்பால் பர்ணசாலைகள் நடுங்கின. அங்கிருந்து தருமனின் நெளியும் பிம்பம் வந்தது. பீமன் கோபத்தை திசை மாற்றுபவன் போல மண்ணை உதைத்தான்.

“மந்தா, எதுவரை ஆயிற்று சமையல்?”

“எட்டுவகை சித்ரான்னம். முடிந்து விட்டது. ருசி பார்க்கிறீர்களா?”

“எனக்குப் பசியில்லை” என்றபடி தருமன் பாறை மீது அமர்ந்தான். மருத மரத்தில் சாய்ந்து கைகட்டியபடி பீமன் தழலை உற்றுப்பார்த்தான்.

“மந்தா! பெரிய தந்தையார் உடல்நிலை கவலையூட்டுவதாக இருக்கிறது” என்றான் தருமன்.”எனக்கு ஒரு கணம் கூட நிம்மதியில்லை.”

“சூதன் என்ன சொன்னான்?”

“என்ன சொல்வான். தூக்கமில்லாததுதான் காரணம் என்கிறான். எப்படித் தூங்க முடியும்? புத்திர சோகத்தின் தழல்மீது அல்லவா அவர் படுத்திருக்கிறார்.”

“எல்லோருக்கும்தான் துக்கம்” என்றான் பீமன்.”அவர் சற்று மிகைப்படுத்துகிறார். நமது குற்ற உணர்வைத் தொடர்ந்து தூண்டி விடுவதில்தான் அவருடைய அதிகாரம் இருக்கிறது இப்போது.”
“அநீதியாகப் பேசாதே மந்தா. பர்ணசாலைகளில் இரவும் பகலும் துக்கம் மூடிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா? குந்தியோ, திரெளபதியோ, காந்தாரியோ அனைத்து மாதர் முகங்களும் ஒன்று போல இருக்கின்றன.”

பீமன் கோபம் எழுவதை உணர்ந்தான். அடக்க முயன்று முடியாமல் பெருமூச்சுடன் “நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்?” என்றான்.”நமது நாடும் மக்களும் அங்கே காத்திருக்கிறார்கள். வனப்பிரஸ்தம் வந்தவர்கள் அதை அனுபவிக்கட்டுமே. அடேய் மூடா! பழங்களை வெந்நீரில் போட்டு தோல் களைந்தாயா? தோலை உன் தந்தையா தின்பான்? அண்ணா!  இவையெல்லாமே மூடத்தனம் என்று படுகிறது எனக்கு.”

“நம்மை விட யுயுத்சுவும், தெளமியரும் நன்கு ஆட்சி செய்திருக்கிறார்கள்.”

“அப்படியென்றால் நாட்டை அவர்களுக்குத் தந்து விடலாமே.”

தருமன் பெருமூச்சு விட்டான்.”மந்தா நீ உணவிலும், பார்த்தன் பெண்களிலும், தம்பியர் சோதிடத்திலும், அஸ்வ சாஸ்திரத்திலும், நான் தர்ம நூல்களிலும் தேடுவது என்ன?”
“நான் எதையும் தேடவில்லை.”

“நாம் நம்மைத் தேடுகிறோம். களங்கமில்லாத மனமும் சுதந்திரமான எண்ணங்களும் கொண்ட பழைய பாண்டவர்களை.”

“எனக்கு அலங்காரச் சொற்கள் புரிவதில்லை. அதனால் என்னை எவரும் மன்னனாக எண்ணவில்லை.”
“மந்தா! உண்மையைச் சொல். காட்டில் பதினான்கு வருடம் கையில் கிடைத்ததைத் தின்று நீ வாழ்ந்தபோது இருந்த பசியும், ருசியும் இப்போது உள்ளதா?”

பீமன் முகம் சிவந்தது. சட்டென்று எழுந்து “மூடா! தீயை இழு என்றேனே,  கேட்டாயா? கருகல் வாடை வருகிறது பார்” என்று சீறியபடி கை ஓங்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

சூதன் நடுங்கி அமர்ந்து விட்டான்.”அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு! அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு…”

பீமன் கைகளை உரசிக் கொண்டான். மத யானையின் தசைகள் போல அவன் தோள்கள் இறுகி விரிந்தன. கூண்டு மிருகம் போலச் சுற்றி வந்தான்.

“மந்தா, உன்னைச் சீண்டும் நோக்கம் எனக்கில்லை. சத்யூபரின் சீடர் வந்து தகவல் சொன்னார். 

பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வருகிறாராம்.”

“எதற்கு?”

“நம்மைப் பார்க்க. வேறு எதற்கு?”

“எஞ்சியவர்களை கணக்கிடவா? வேறு வேலை இல்லை கிழவருக்கு.”

“பித்ரு நிந்தை பாபம் மந்தா!”

பீமன்”இது சுயநிந்தை” என்று உருமினான்.

தருமன் எழுந்தான்.”நான் நீராடச் செல்கிறேன். உடல் எரிகிறது. வருகிறாயா?”

“வருகிறேன்.” தண்ணீர் குளிர்விக்கும் என்று பட்டது பீமனுக்கு. இருவரும் நடந்தனர். பீமன் போகும் வழியில் இருந்த மருத மரத்தை ஓங்கி அடித்தான். அது அதிர்ந்து மலர்களும், சருகுகளும் கொட்டின.
“நாம் இங்கு வந்தது ஒரு வகையில் நல்லது. அங்கு அஸ்தினாபுரியில் அதிகாரமும் போகமும் நம்மைச் சூழ்ந்துள்ளன. நம் ஆன்மாவை அவை மூடிவிடக்கூடும். இங்குத் துயரம் அணிகளின்றி, உடைகளின்றி நம்முள் நிற்கிறது. நமது வெற்றியின் விலை என்னவென்று ஒவ்வொரு கணமும் கூறுகிறது.”

“அண்ணா! நாம் வேறு எதையாவது பேசுவோமே?”

“எதைப்பற்றிப் பேசினாலும் இந்த இடத்தில் மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணுவதில்லை மந்தா!. பேசாதபோது துக்கம் உள்ளிருந்து மார்பை அடைக்கிறது.”

கங்கை சிதையென எரிந்து கொண்டிருந்தது. நீர் மீது சரிந்து வளர்ந்த பெரிய சாலமரத்தின் வேர்களில் தருமன் அமர்ந்தான். பீமன் நீரில் இறங்கியதும், மக்கிய மரக்கட்டை போல, நீரில் அசைவன்றி மிதந்து கிடந்த முதலையொன்று உயிர் பெற்று முன்னகர்ந்தது. அதன் வாலையும், வாயையும் பற்றி பீமன் சுழற்றி எடுத்தான். இம்சையின் எழுச்சியில் உடல் அதிர்ந்தது. அதைச் சுழட்டி வேர் மீது ஓங்கி அறைந்து, வளைத்து ஒடித்தான். அவனது பருத்த கரங்களில் முதலை துடித்து, நெளிந்து அடங்கியது. அதன் அசைவுகளில், லயத்தில் அவன் மனமும் அடங்கியது. அதை நீரில் வீசினான். நீர் ஒளியுடன் விரிந்து, வாய்பெற்று முதலையை விழுங்கியது. அந்திரீயத்தைக் கழட்டி கரைமீது போட்டுவிட்டு, நீரில் தாவியிறங்கி மூழ்கினான்.

“இன்னும் ஒரேயொரு நீர்ப்பலி மந்தா!. இன்று மாலை அதுவும் முடிந்து விடும். நாளை மதியம் கிளம்பி விடலாம்.”

“நான் அப்படியே தெற்குத் திசை நோக்கிப் பயணம் செய்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.”

“அர்ச்சுனன் நாகலோகம் போகப்போவதாகச் சொன்னான். நகுலன் காந்தாரத்துப் புரவி விழா ஒன்றுக்குப் போகிறான்.” தருமன் கசப்புடன் சிரித்தான். “நான் தான் எங்கும் போக முடியாது. பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தியாயிற்றே!”

பீமன் நீரில் மூழ்கினான். மீன்களின் பளபளப்பில் நீருக்குள் ஆயிரம் விழிகள் உருக்கொண்டன. பார்வைகள் அவனை மொய்க்க ஒரு கணத்தில் மூச்சு மார்பை இறுக்கியது. உதைத்து மேலே வந்தான். கரை நோக்கி வந்தான். நதி அச்சமூட்டியது.

“எதற்கு வருகிறார் வியாசர்?” என்றான் தருமன் உடைகளை மெல்லக் களைந்து விட்டு நீரில் இறங்கியபடி.

“ஏதாவது தர்மவிசாரம் இருக்கும், உங்களுக்கும் பொழுது போகும். முதியவருக்கு சித்ரான்னம் பிடிக்குமா இல்லை குரங்கு உணவு தானா?”

“மந்தா, உன் கசப்பு அதர்மத்தை நோக்கிப் போகிறது.”

“எனக்கும் சேர்த்து நீங்கள்தான் தர்மவிசாரம் செய்கிறீர்களே!”

தருமன் பிறகு பேசவில்லை. நீராடி முடித்ததும் “வருகிறாயா?” என்றான்.

“எதற்கு?” என்றான் பீமன். “பெண்களின் கண்ணீர் முகங்களைப் பார்க்கவா? அதைவிட இங்கேயே ஏதாவது முதலை முகங்களைப் பார்க்கலாம். நான் உணவை அனுப்புகிறேன்.”

தருமன் குனிந்த தலையுடன் ஒற்றையடிப் பாதையில் செல்வதைப் பார்க்க ஒரு கணம் பரிதாபமும் மறுகணம் துவேஷமும் எழுந்தது.

சித்ரான்னங்கள் உலையிலிருந்து இறங்கிவிட்டிருந்தன. பீமன் தன் வயிற்றுக்குள் இச்சை ஓலமிட்டு எழுவதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் உடலே அவ்விச்சையாக மாறியது. அவன் உடலின் மறுபகுதியே அந்த அன்னம் என்பது போல. அந்த அன்னத்துடன் தன் அன்னமய உடல் இணையும்போதே அது பூரணமடைய முடியும் என்பது போல். நியதியின் பெரும் தருணம் ஒன்றிற்கு முந்தைய தவிப்பு போல.

பர்ணசாலைகளின் நடுவே செம்மண்ணாலான பெரிய முற்றம் இருந்தது. அதில் பழுத்த இலைகள் பரப்பப் பட்டிருந்தன. நடுவில் வியாசர் அமர்ந்திருந்தார். நீண்ட வெண்ணிறத் தாடி காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. கண்கள் அரைவாசி மூடியிருந்தன. எதிரே பாஞ்சாலி அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சதயூபர் மடிமீது பெரியதொரு சுவடிக்கட்டை விரித்து வைத்து கண்களை இடுக்கியபடிக் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். முற்றத்தில் பரவலாக அனைவரும் அமர்ந்திருப்பது போலிருந்தது. தருமன் கவனமின்றி இலையொன்றை கிழித்தபடி அமர்ந்திருந்தான். திருதராஷ்டிர மன்னர் பார்வையிழந்தவர்களுக்கேயுரிய முறையில் மோவாயை விசித்திரமாகத் திருப்பி ஒலிகளைக் கூர்ந்து கேட்டபடி அமர்ந்திருந்தார். சற்றுத்தள்ளி மடியில் காண்டிபத்துடன் அர்ச்சுனன். பெண்கள் கூட்டத்தின் நடுவே இறுக்கமான முகத்துடன் குந்தி. பதுமைபோல காந்தாரி. வெளிறி மெலிந்த உத்தரை. முற்றதிற்கு வெளியே கூட்டம் கூட்டமாக அந்தப்புரத்தின் பிற பெண்கள்.

பீமனின் வருகை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது அவன் உடலசைவுகளில் சங்கடத்தைக் கலந்தது. அவன் வியாசரை “வணங்குகிறேன் பிதாமகரே” என்று தெண்டனிட்டான். “முழு ஆயுளுடன் இரு! புகழுடன் இரு! நிறை வாழ்வு உனக்கு அமையட்டும்” என்று வாழ்த்தினார். சதயூபரை வணங்கிவிட்டுப் பின்வரிசையில் போய் அமர்ந்து கொண்டான்.

பாஞ்சாலி கண்ணீரைத் துடைத்துவிட்டு சிவந்த விழிகளுடன் விலகித் தலைகுனிந்து அமர்ந்தாள். அவள் தோள்கள் விம்மல் கொண்டு அசைந்தன.

தருமன் திரும்பிப்பார்த்து “தம்பி, தாத்தா பெருங்காவியம் ஒன்று எழுதியிருக்கிறார்.”

“ஓகோ!” என்றான் பீமன்.

“குருஷேத்ர மகாயுத்தத்தை மையமாகக் கொண்டு குருவம்சத்தின் வரலாற்றையும் விருஷ்ணிகுலத்தின் வரலாற்றையும் விரிவாகச் சொல்கிற காவியம் இது” என்றான் தருமன்.

சங்கடமான அமைதி நிலவியது. காட்டுக்குள் காற்று ஒன்று ஊடுருவும் ஒலி கேட்டது.

“தந்தையே!” என்று கரடு தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்தான் திருதராஷ்டிரன். “எனக்குப் புரியவில்லை தந்தையே. என் மூடத்தனத்தை தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையைத் தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் காமக்குரோதமோகங்களினால் சண்டையிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?”

அத்தனைபேர் மனதிலும் எழுந்த வினா அது என்பதை, முகங்களில் தெரிந்த தீவிரம் மூலம், பீமன் அறிந்தான்.

வியாசர் பெருமூச்சு விட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பத்துவருஷங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. எங்கும் நிலைத்திருக்க முடியவில்லை. பாரத வர்ஷமெங்கும் அலைந்தேன். எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதைக் கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுட குலத்தின் ஞாபகத்தில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?” வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பிறகு தொடர்ந்தார். “வட தண்டகாருண்யத்தில் நான் ஆதிகவி வான்மீகியைச் சந்தித்து பாதம் பணிந்தேன். ஒரு மண்டலம் அவருடன் இருந்தேன். முதிர்ந்து பழுத்து உதிரும் தருவாயில் இருந்தார் அவர். என் இம்சைகளைக் கூறாமலேயே அறிந்து கொண்டார் போலும். ஒரு சைத்ர பெளர்ணமி நாளில் முன்னிரவில் என்னைப் பின் தொடரும்படி ஆணையிட்டு நடந்தார். நிலவின் ஒளியில் தியானத்தில் விரிந்த ரிஷிமனம் போல வழிந்த கங்கையின் கரையை அடைந்தோம். பாறையொன்றில் அமர்ந்து என்னை அமரச்சொன்னார். ஒரு பெரும் தராசு பற்றிக் கூறினார். நீதியும், அநீதியும், கருணையும், கொடூரமும், அழகும், கோரமும், ஆக்கமும், அழிவும் என அதற்கு இரு தட்டுகள். தராசுமுள் எப்போதும் சஞ்சலம் கொண்டது. கங்கையை சுட்டிக்காட்டியபடி ஆதிகவி கூறினார். ‘மகாகாவியம் என்பது கங்கை போல!. கங்கோத்ரியில் சிறு குடம் போன்ற ஊற்றிலிருந்து அது உற்பத்தியாகிறது. பல நூறு நதிகளும் ஓடைகளும் கலந்து பெரும் பிரவாகமாக மாறிக் கடலில் கலக்கிறது. முள் சமநிலை குலையும் ஒரு சலனத்தில் பிறக்கும் நதி அது. கடலைச் சேர்கையில் மீண்டும் முள் சமநிலை கொள்கிறது.’ என் மனம் ஒளிமயமாயிற்று. எழுந்து அவர் பாதங்களை வருடினேன். ‘உன் சொற்கள் ஒரு நாளும் அழியாமலிருக்கட்டும்’ என்று என்னை வாழ்த்தினார். தன் எழுத்தாணியை எனக்குத் தந்தார். கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டேன். மறுநாள் அங்கிருந்து கிளம்பி உத்தரவனத்தை அடைந்து பர்ணசாலையொன்று எழுப்பினேன். இந்த பெருங்காவியத்தை இயற்ற ஆரம்பித்தேன். ஆறு வருடங்களில் இதை எழுதி முடித்தேன். என் வாழ்வின் நோக்கமே இது என்று தெளிவு அடைந்தேன். இது தர்மாதர்மப் போரின் முடிவில்லாத கதை.”

வியாசர் சதயூபரைப் பார்த்தார். அவர் சுவடிகளைத் திரும்பக் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார். பறவைக்குரல்கள் உரக்க ஒலித்தன என்று தோன்றியது.

வியாசர் தனக்குள் உலவத்தொடங்கி விட்டிருந்தார் போலும். குரல் மங்கியது. “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக்காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒரு சமயம் வியப்புடனும், மறுசமயம் எக்களிப்புடனும், மறுசமயம் செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நின்றேன். கங்கை மீது காற்று பரவும் போது தோன்றும் ஒரு மகத்தான கரம் சுவடிமீது எழுதிச்செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிசைகள். மறுகணம் தோன்றும் காவியம் கங்கைபோல என்றும் மாறாத அர்த்தத்துடன் ஆழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளைக் கணம்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆம் நீர்மேல் எழுத்து” வியாசர் சகஜமடைந்தார்.” ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும் நீரின் பெருவெளி அறியும் சொற்களின் பெருவெளியை. கடல்… ஆம், என்ன விபரீதமான மனப்பயணம். பலசமயம் சொற்கள் தொலைந்து போகின்றன. சொற்களில்லாத கணத்தை நான் அஞ்சுகிறேன். நான் கவிஞன்…”

வியாசன் மீண்டும் தன் மெளனத்திற்குத் திரும்பினான். எங்கும் அவனது மன உத்வேகம் பரவியதுபோல அம்மெளனமும் பரவியது.

தருமன் அந்த மெளனத்தால் பாதிக்கப்படாதவன் போலத் தோன்றினான். “பிதாமகரே தங்கள் காவியத்தில் தர்ம அதர்மப் பாகுபாட்டுக்கு என்ன ஆதாரத்தைக் கொண்டுள்ளீர்கள்?” என்றான்.
வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல “மானுட அனுபவத்தைத்தான்” என்றார்.

“என்ன தர்மமும் அதர்மமும்” என்று திடீரென்று திருதராஷ்டிரர் சீறினார். “வெல்பவன் தர்மவான்! தோற்பவன் அதர்மி! இதுதான் உலகநீதி! இதுமட்டும்தான்! வேண்டாம். பசப்பாதீர்கள் தந்தையே! தாங்கள் இந்தக்காவியத்தை ஏன் எழுதினீர்கள் என்று அறியாத மூடனல்ல நான்.”

“ஏன்?” என்றார் சதயூபர் கோபத்துடன்.

“வேறு எதற்கு? உங்கள் பேரர்கள் மீது வந்த பெரும்பழியைத் துடைக்க. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளாகத்தானே நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்? வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர்தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள்தானே?”

“குழந்தை!.”

“போதும்!. தருக்கங்களைக் கேட்டு என் காது புளித்துவிட்டது. தர்மங்களும் நியாயங்களும். என் குழந்தை தொடை உடைபட்டு ரத்தம் வடிய தரைமீது கிடந்தான். அவன் தலைமீது எட்டி உதைத்து… மணிமுடி சூடிய அவன் தலைமீது…”

பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை! பீமன் மனம் பொங்கியது.

“ஆம் தந்தையே!. நான் தான் உமது மகனைக் கொன்றவன். அவன் தலையை உதைத்தவன். உம்மால் முடியுமெனில் என் காலை ஒடியும்.”

திருதராஷ்டிரன் தன் இரு கரங்களாலும் ஓங்கி அடித்தான். பேரொலி அனைவரையும் அதிர வைத்தது. கரிய பேருடலில் மாமிசப்பந்துகள் நெளிந்தன. வன்மம் கொண்ட வனமிருகம் ஒன்று உடலின் இருளுக்கு அப்பாலிருந்து உறுமியது.

பீமனை அந்தச் சவால் எழுச்சி கொள்ள வைத்தது. அவன் குகைச் சிம்மம் எழுந்து பிடரி சிலுப்பியது. 

“என் குலமகள் ஒற்றையாடையுடன் சபை நடுவே நின்றாள். அந்தப் பாவத்திற்கு பலியாக இன்னும் ஏழு ஜென்மங்களுக்கு அந்த அதமன் தலையைத் தரையில் உதைத்து உருட்டுவேன். என் தலையைக் கிரீடம் அணி செய்ய வேண்டியதில்லை. காலமுள்ளளவும் அந்தப் பழியே என் அணியாகுக!” பீமன் கைகளை ஓங்கி அறைந்தான். “ஆம், குருவம்சத்தை அழித்தவன் நான்! குலந்தகனாகிய பீமன் நான்!” அவனுள் எக்களிப்பு பொங்கியது. துச்சாதனனின் பச்சைக் குருதி மணம் நாசியில், நாவில், ஆத்மாவின் மென்சரடில் பரவியது. தீமையில் பேரின்பத்தை வைத்த தேவன் எவன்? அவன் மைந்தன் நான்!

“உட்கார் குழந்தை” என்றார் வியாசர். “உன் மனம் எனக்குப் புரிகிறது.”

“உங்களுக்கு எவர் மனமும் புரிவது இல்லை. ரணகளத்துப் பிணங்களில் உங்கள் காவியத்துக்கு கதாபாத்திரங்கள் தேடுகிறீர்கள்” என்றான் அர்ச்சுனன். “தருமமாவது ஒன்றாவது!. இங்கு நடந்தது ஒரு தற்கொலை! அகந்தையாலும் பொறாமையாலும் ஒரு வம்சம் தன்னைத்தானே கொன்று கொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம் பிதாமகரே.”

“குழந்தை, நீ சூதர்களின் பாடல்களைக் கேட்பதுண்டா?”

“அவர்களுக்கென்ன? ஒரு நாணயம் கிடைத்தால் சிகண்டியையே ஆண்மையின் சிகரமாக ஆக்கிவிடுவார்கள்.”

“வெற்றியை வழிபடுபவர்கள் சாமானியர்கள். வென்றவர்கள் செய்ததெல்லாம் தர்மம் என்பார்கள். தோற்றவர்கள் செய்ததெல்லாம் அதர்மம் என்பார்கள். வெற்றியை வழிபடுவது அகந்தையை வழிபடுவதுதான். அனைத்துப் பாவங்களுக்கும் முதற்காரணம் அகந்தை.”

திருதராஷ்டிரர் அலுப்புடன் “உபதேசங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை” என்றான்.

வியாசர் அதைக் கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது. அதற்குப்பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள மகத்துவங்களைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் குரோதத்தின் ஊற்றுமுனையாகிய அன்பை, ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வை, என் காவியம் பாடுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பிரவாகத்தைப் பற்றியே, நான் எழுதியுள்ளேன். அந்தப் பிரவாகத்தை மகாதர்மமே வழிநடத்துகிறது. அம்மகாதர்மத்தின் பிரதிபலிப்பு ஓவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே.!”

“இனி என்ன பயன் அதனால்?” என்றான் அர்ச்சுனன். “விதவைகளுக்கும், அனாதைப் பெற்றோர்களுக்கும் உங்கள் தர்மம் என்ன வழிகாட்டப்போகிறது?”

“முடிந்தது குருஷேத்ரப் போர்! தர்மாதர்மப் போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் சந்ததியினருக்குப் பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?”

அர்ச்சுனன் சிரித்தான். “பிதாமகரே! இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்புத் தருகிறது. நான் அறிந்த பாடம் ஒன்றேயொன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இளமை… வயது அணையத் தொடங்குகையில், தொலைதூரத்தில், கனவுவெளியென அது ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும், உதவாத நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்…” காண்டிவத்தை எடுத்துத் தோளில் மாட்டியபடி அவன் எழுந்தான். 

“ஆனால் இதை ஒரு வாலிபனுக்கு, எந்த முதியவரும் எக்காலத்திலும் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது. இந்த கங்கையைவிடப் பெரிய காவியம் எழுதினாலும்!.” வணங்கியபடி அவன் கிளம்பினான்.”நான் வருகிறேன் பிதாமகரே!.”

“தாத்தா காவியத்தை படித்துக்காட்டப் போகிறார் பார்த்தா!” என்றான் தருமன்.

“கண்ணனின் சிறு காவியமே என் தலைமீது இரும்புக்கிரீடம் போன்று கனக்கிறது” என்றான் அர்ச்சுனன். “சொற்களுள் விஷம் உள்ளது என்று என்னைவிடத் தெளிவாக அறிந்தவர் யார்?” 

அர்ச்சுனன் நடந்து மறைந்தான்.

மெல்லப் பீமனும் எழுந்தான்.

“மந்தா! நீ எங்கே போகிறாய்?”

“எனக்குப் பொதுவாகவே மானுட மொழி தெளிவாகப் புரிவதில்லை, அண்ணா!. இங்கு நானிருந்து என்ன பயன்? நதிக்கரைக்குப்போனால் சமையலாவது நடக்கும்.”

“தந்தையே!” என்று குந்தி தணிந்த, உறுதியான குரலில் கூறினாள். “தாங்கள் காவியத்தைப் படியுங்கள். என் குழந்தைகள் வழியாக தர்மம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…”
பீமன் கனமாக நடந்தான். திரும்பிப் பார்க்கும்போது குனிந்து அமர்ந்திருக்கும் பாஞ்சாலியின் கண்ணீர் மூக்கில் உருண்டுச் சொட்டுவதைக் கண்டான். அவளுடைய கன்றிப் போன முகம் அவன் வயிற்றைப் பிசைந்தது. மறுகணம் திசையற்றச் சினம் எங்கும் பரவியது. முகங்கள், முகங்களாக பிரக்ஞை பரவி விரிந்தது. துரியோதனன், கர்ணன், கடோத்கஜன் முகங்கள். முகங்களில் ததும்பும் அலைவெளி. அவற்றிலிருந்து விடுதலை இல்லை. எந்தக் காவிய வரியும் அவ்விடுதலையைத் தரப்போவதில்லை.
கங்கையின் கரையில் கூட்டம் கூட்டமாக நீர்ப்பலி நடந்துகொண்டிருந்தது. பீமன் கனத்த உடல் தரையில் அதிர்ந்து, பதிய நடந்தான். பறவைகள் கூடணையும் ஒலி, எல்லாத்திசைகளிலும் உரக்கக்கேட்டது. கங்கைக்கு அப்பால் பச்சை நிற வரம்பாகத் தெரிந்த மறுகரையின் மீது சூரியன் செந்நிறவட்டம் இறங்கிக் கொண்டிருந்தது. மேகங்களின் கங்கு அணையத் தொடங்கிவிட்டிருந்தது. நீரில் மந்திரங்கள் மிதந்தன. அலையலையாகச் சாந்தியடையாத ஆத்மாக்கள் தவித்தன. மலர்கள் அலைபாய்ந்து… அலைபாய்ந்து… அலைபாய்ந்து.. இத்தனை அனாதைக் குழந்தைகளா? 

கைவிடப்பட்ட பெற்றோரின் இந்த வெற்றுப் பார்வை இவ்வருடங்களில் காணும் திசையெங்கும் நிரம்பியிருக்கிறது. பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன. இன்று எவரும் கதறி அழுவதில்லை. கண்ணீர்கூடக் குறைவுதான். பிரமையில் உறைந்த, மரத்த துக்கம். நீரற்ற குளங்களின் வெறுமை மண்டிய விழிகள். நினைவுகளின் அறுபட்ட சரடுகள் துடிக்கும் சொற்கள். அத்தனைபேர் கூடியிருந்தும், நதிக்கரை மெளனமாக இருந்தது. மெல்லிய ரீங்காரமாக எழுந்த மந்திர உச்சரிப்பு கங்கையின் அந்தரங்கப் பேச்சொலியுடன் கலந்தது.

“மந்தா! என்ன தாண்டிச் செல்கிறாய்?”

பீமன் பெருமூச்சுடன் நின்றான். படித்துறையில் திருதராஷ்டிரன், தருமன், வியாசன், செளனகர் என்று கூட்டம். தருமன் உற்சாகமாக இருப்பதாகப் பட்டது. வைதீகச் சடங்குகளின்போது அவனுக்கு வரும் இயல்பான உற்சாகம். நான் மிருகமில்லை. கோழையான எளிய மானுடன். இல்லையேல் இக்கணம் உதிரவெறியுடன் உன்னைக் கிழித்து…

“மந்தா! சீக்கிரம் நீராடு” என்றான் தருமன்.”உனக்காகவே காத்திருக்கிறோம். இன்று இறுதிநாள். நீர்ப்பலி. இதுகூட நினைவில்லையா என்ன?”

பீமன் நதியிலிறங்கி நீராடினான். வெற்று உடல்மீது நீர்த்துளிகள் வழிய உடையை இறுக்கியபடி எழுந்துவந்தான். செளனகர், “பாண்டவர் அனைவரும் வந்தாயிற்றா?” என்றார்.

“ஆம் ஆச்சாரியரே! மந்தனுக்கு ஒருமுறை விளக்கிவிடுங்கள்.”

ஸெளனகர் “சரி” என்றார். பிறகு பீமனிடம் “இன்றோடு போர் முடிந்து பதினாறு வருடங்கள் முடிகின்றன. இறந்து போனவர்களுக்காக மூவகை சிரார்த்தங்களைச் செய்யவேண்டுமென்பது விதி. ஏகோத்திஷ்டம், பார்வணம், சபிண்டனம். வருடம் தோறும் செய்யவேண்டிய பித்ருகடன் ஏகோத்திஷ்டம். ஃபுவர்லோகத்தில் ஆத்மா பிரவேசிக்கும் பொருட்டு வாரிசுகள் செய்யவேண்டியது பார்வணம். அம்மூதாதையரின் ஆத்மாக்களை காலப்பெருவெளியுடன் மீதியின்றி கலக்கும் பொருட்டு ஆற்ற வேண்டியது சபிண்டனம். இங்கு சபிண்டன சிரார்த்தம் இன்றோடு முடியப்போகிறது. எள்ளும் நீரும் மலரும் இறைத்து, பூரண மந்திர உச்சாடனத்துடன் இதை முடித்தபிறகு பாண்டவர்கள் எவரும் எந்த வடிவத்திலும் எஞ்சுவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். நதி கடலுடன் கலப்பதுபோல. பிறகு பித்ருக்களினாலான மகாகாலத்திற்குச் செய்யும் பொதுவான சிரார்த்தமே போதுமானது. விதிப்படி அவர்களைப் பிரித்து எண்ணுவதும்கூடப் பெரும் பாபமாகும்.”

ஸெளனகர் தர்ப்பையை எடுத்தார். மந்திர உச்சாடனத்துடன் மலரை அள்ளினார். சற்றுத்தள்ளி பிண்டம் வைக்கக் குவிக்கப்பட்ட ஆறிய சாதம் இருந்தது. சடங்குகள் தொடங்கின.

பிதாமகரே என்று பாஞ்சாலியின் குரல் வீறிட்டது. அனைவரும் திடுக்கிட்டனர். அவிழ்ந்த முடியும் கலைந்த உடையுமாக அவள் ஓடிவந்து நதிமேட்டில் நின்றாள்.”பிதாமகரே வேண்டாம். பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”

“ஏனம்மா” என்றார் வியாசர்.

“என் குழந்தைகள்! அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்தபிறகாவது அவர்களைப் பார்க்கவேண்டும்.” கதறியபடி. அவள் தரையில் சரிந்தாள். மார்பில், வெறியுடன் ஓங்கி, அறைந்துகொண்டு கதறியழுதாள். “என் குழந்தைகளை இந்தப் பாழும் மார்பில் மீண்டும் ஒரு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும். என் செல்வங்களின் பொன்னுடல் தீயில் எரிந்தது. என் தேவர்களே, உங்களுக்கு வலித்ததா என்று கேட்க வேண்டும். அவர்கள் எனக்காகக் காத்திருக்கட்டும் பிதாமகரே.!”

“என்ன மூடத்தனம் இது, திரெளபதி?”

“ஆம் நான் மூடப்பெண்தான். வெறும் மூடம். வெறும் ஜடம்.” திரெளபதி வெறியுடன் தலையை அறைந்தபடி ஊளையிட்டு அழ ஆரம்பித்தாள். என்ன மூர்க்கத்தனம்! பீமனின் வயிறு நடுங்கியது. அச்சத்தில் உடல் செயலற்றுவிட்டது.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “வேண்டாம் பிதாமகரே. பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”!

வியாசர் படியேறி நெடிய உடலை நிமிர்த்து நின்றார். “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?”

“ஒரு முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து, சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மகாஞானியே! ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பேரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான்!. பதினாறு வருடமாகிறது நான் தூங்கி. என் குழந்தைகள் வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு அற்புதம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். உத்தமரே! என் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்.”

“எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும் உத்தமரே!” என்று குரல்கள் வீரிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின. துக்கம் அலையலையாகக் காற்றை நிரப்புவதுபோல. வானம் இருண்டுவிட்டிருந்தது. கங்கையின் மறுவிளிம்பில் மெல்லிய வெளிச்சம் மீதமிருந்தது. அது நீர்ப்பரப்பில் நெளிந்து தளதளத்தது.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன் தாயே!” என்றார் வியாசர் தளர்ந்த குரலில்.
“பிதாமகரே நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள்.

“அவர்கள் வீர சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய போகங்களுடன், வீரர்களுக்குரிய மகத்துவங்களுடன்.”

“நீங்கள் எப்படிக் கண்டார்கள்?”

“நான் கவிஞன். சொற்களைப் பரு வடிவு விட்டு தியான வடிவம் கொள்ளவைக்கும் வரம் பெற்றவன். தியான வடிவாக அனைத்துலகங்களையும் தொட்டு விரியும் என் பிரக்ஞை. என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே!” என்று ஒரு கிழவி ஆங்காரமாக வீறிட்டாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்குக் காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள்! தர்மத்தின் மீது ஆணை!”

“காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது அந்த நதிக்கரை.

“ஒரு கணம் பிதாமகரே கனிவு காட்டுங்கள் ஒரு கணம்.” ஒரு பெண் கதறியழுதாள்.

நிலா மேற்கே நெளிந்து வந்தது. கங்கையின் நீர்ப்பரப்பு மீது அது பிரதிபலித்தது. கரையிலிருந்து ஒளியாலான நடைபாதை ஒன்று நிலவை நோக்கி நீண்டது. வியாசர் நிலவை நோக்கியபடி ஒளிவிடும் கண்களுடன் நின்றார். குரல்கள் மன்றாடின. கூவி அழுதன. ஒளி பெற்ற வான் கீழ் துயரத்தின் அதிதேவன் என காவிய கர்த்தன் நின்றான்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் ஒளி வளையங்களாகப் பரவின. வியாசர் கரங்களைத் தூக்கினார். “சரி காட்டுகிறேன்!. அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?”

“ஒரு கணம் என் குழந்தையைப் பார்த்தால் போதும் பிதாமகரே! வேறு எதுவும் வேண்டாம்!.” மார்பில் ஓங்கி அறைந்தபடி ஒரு பெண் கதறினாள்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய மந்திரம் பீமனுக்குக் கேட்டது. “கங்கையே நீ என் மூதாதை!. என் சித்தம் உன் பிரவாகம். என் தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக! ஓம்! அவ்வாறே ஆகுக!”

பீமனின் மனம் படபடத்தது. கங்கையைப் பார்த்தான். கங்கைமீது நிலவின் ஒளி விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி அதிகரித்தபடியே வந்தது. ஒளிபெற்ற படிக வெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு வெகு தூரத்தில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெரும் நகரம் ஒன்று கனவு போலத் தெரிந்தது. அது அஸ்தினாபுரம் என்பதை பீமன் வியப்புடன் அறிந்தான். தெருக்களில் பொற் பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற மேகங்கள் போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவன் வந்தான். ஒளி சிதறும் வைரமுடியும், மணிக்குண்டலங்களும் பொற்கலசமும் அணிந்திருந்தான். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை பீமன் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தான். துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் இன்பம் சுடர அவன் நீர் மீது எழுந்து நின்றான். திருதராஷ்டிரர் உரத்தகுரலில் “மகனே! துரியோதனா!” என்று வீரிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படித் தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் மனப் பிரமைதானா?  கவசகுண்டலங்கள், செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து நின்றான். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தான். சகுனியும், பீஷ்மரும் வந்தனர். சாரி,சாரியாக வந்தபடியே இருந்தனர். தன் கண்கள் அந்தக் கூட்டத்தில் ஓர் உருவத்தை பதைபதைப்புடன் தேடுவதை பீமன் உணர்ந்தான். சட்டென்று புலன்கள் குளிர்ந்தன. கையில் பாசாயுதத்துடன், உயர்ந்த கரிய உடலை, மெல்ல ஆட்டியவனாக, யானைக்குட்டி போல கடோத்கஜன் நடந்து வந்தான். அப்படியே பாய்ந்து அவனைக் கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. அவனுடைய கரும்பாறை போன்ற தோள்களை இறுகத் தழுவி, அவன் மயிரடர்ந்த சிரத்தை மார்போடு இறுக்கி… அப்போதுதான் தன் மார்பில் தெறிக்கும் இந்த வெற்றிடம் உடையும். என் வனமூர்க்கம் முளைத்தெழுந்தவன் இவன். பீமனைவிட பீமனான என் மகன். கடோத்கஜன். கடோத்கஜன். இமைத்தால் கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன் போல அவனையே பார்த்தான். அவனுடையில் ஓர் உறுப்பைப் பார்க்கும்போது, பிற உறுப்புகளைப் பார்ப்பதை இழந்துவிடுவோம் என்று பட்டதால் பதற்றமடைந்து, பரபரத்தது மனம். பார்வை மீள மீளத் தவித்து அவன் உடலை வருட வருட குடிக்கத் தொலையாத பெரும்தாகம் என எரியும் தவிப்பு!. அத்தவிப்பு அவன் பெயர் மந்திரமாக உள்ளூர இடைவிடாது ஓடியது. அவன் உடலின் தொடுகைக்கு தன் உடல் பரபரத்தது. தொடுகையில் அல்லவா என் மகனை என் ஆத்மா அறிய முடியும். இதோ எல்லாம் முடிந்துவிடும். இந்தப் பிரமை கடோத்கஜன் என் மகன்… திடீரென்று பாஞ்சாலி “மகனே !” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். பீமன் அனிச்சையாக அவள் புஜங்களைத் தாவிப் பற்றிக் கொண்டான். எங்கும் வீரிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. 

பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர்.

“நில்லுங்கள்! நில்லுங்கள்!” என்று வியாசர் கூவினார்.

கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர், ஆயிரம் வாய் பிளந்து, அவர்களை விழுங்கியது.

“அர்ச்சுனா! நிறுத்து அவர்களை. அர்ச்சுனா!” என்றார் வியாசர். உடல் பரிதவிக்க முன்னும் பின்னும் ஓடியபடிக் கதறினார். கையில் காண்டிவத்துடன் கண்ணீர் வழிய அர்ச்சுனன் நின்றான்.
“அர்ச்சுனா…”

“அவர்கள் போகட்டும் பிதாமகரே அவர்களுக்கு இனிமேலாவது நிம்மதி கிடைக்கட்டும்.”

“இது என்ன அபத்தம்! நில்லுங்கள் நில்லுங்கள் போகாதீர்கள்.” வியாசர் பித்தர் போலக் கூவினார். பாஞ்சாலி திமிறினாள். வெறி கொண்ட குதிரை போல பாய முயன்றாள். பீமன் கை ஒரு நொடி தளர்ந்தது. பிடியை உதறிவிட்டுக் கங்கையை நோக்கி ஓடி கடோத்கஜனை அடைய மனம் தாவியது. மறுகணம் காட்சி அணைந்தது.

“என் குழந்தைகளே! என் செல்வங்களே!” என்று கதறியபடி திரெளபதி தளர்ந்து விழுந்தாள்.

“அர்ச்சுனா! என்ன காரியம் செய்தாய்? அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை.”

“இல்லை பிதாமகரே! அவர்கள் எமனின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே! அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை? உயிராசையா? ஆம். எளிய பாமரமக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள் கூட இல்லாதவன் நான். அற்பன். உயிரை நேசிக்கும் கோழை.”

“பார்த்தா! உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் படிக்கட்டில் தளர்ந்து அமர்ந்தார். தலையைக் கைகளால் அறைந்தார். “நான் மூடன்! நான் மூடன்!. பெரும் பிழை செய்துவிட்டேன்.” வியாசர் மெல்லிய விசும்பல்களுடன் அழ ஆரம்பித்தார். இரையுண்ட பாம்பு போல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது.

“தந்தையே!” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்குத் தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதை விட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?”

குந்தி மண்ணில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் எண்ணுவது கர்ணனை என்ற எண்ணம் கசப்பாக பீமன் மனதில் எழுந்து நிரம்பியது.

“எப்படிச் சொல்வேன் குழந்தைகளே? நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம். கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே.”

அர்ச்சுனன் அச்சத்துடன் “அப்படியானால் இவர்கள்?” என்றான்.

வியாசர் மெல்ல அடங்கினார். கண்களில் கண்ணீர் முத்துக்கள் ஒளிவிட்டன. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார். “காவியத்தில் நாம் பார்ப்பது வானைப் பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பிரம்மாண்டங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு சதகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துக்கங்கள் பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்குத் துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் உவமையின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…”
பீமன் மனம் நடுங்கி உறைந்தது. கங்கையைப் பார்க்கமுடியவில்லை. கரியவாள் போல அது கிடந்தது. அதன் ஆழ்த்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? பீமன் தன்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றான். மார்பு காலியாகவேயில்லை. திரும்பிக் காட்டை நோக்கி நடந்தான். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உருமும் காடு! அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்!

கதைசொல்லி - மார்ச் மே 99

தாயார் பாதம் – ஜெயமோகன்

ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாகஹிமகிரிதனயே ஹேமலதே. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டுசரி, விடுங்கஎன்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி விட்டா அது நல்ல சுத்த சங்கீதமா கொட்டுமேன்னு…’. ‘தெரியறது. வெரலிலே சங்கீதம் இருக்கு, நாக்கிலே இல்லேங்கிறீங்கபாலசுப்ரமணியன் மீண்டும் புன்னகை செய்தார்.

நான் சாந்திமுகூர்த்தம் அன்னிக்கு சாரதா கிட்டே முதல்ல என்ன கேட்டேன் தெரியுமோஎன்றார் ராமன். ‘ஒரு பாட்டு பாடறேன், கேக்கறியான்னு. சரின்னா. அதோட சரி. அதுக்குமேலே பாடறேன்னு சொன்னா ஒருமாதிரி முகத்தைக் காட்டுவா பாருங்க. எவ்ளோ பெரிய மேதைக்கும் தொண்டை அடைச்சுண்டுரும்ராமன் சிரிக்க பாலசுப்ரமணியன் சேர்ந்துகொண்டார்.

ஆனா நான் சின்ன வயசிலே பாடுவேன்என்றார் ராமன்மறுபடியும் ஸ்மைல் பண்றேள். பாடத்தெரியாதவ எல்லாரும் அப்டித்தான் சொல்லுவா,என்ன?’ என்றார். ‘என்னதான் சிரிப்போ அப்டிஅதைப்பாக்கறச்ச பயம்மா இருக்கு. எங்க அரசியல் கிரசியலுக்கு போயி டெல்லிக்குவந்து ஒக்காந்துண்டுவீங்களோன்னு…’ பாலசுப்ரமணியன் அதற்கு வாய்விட்டு சிரித்தார். கடல்காற்றில் அவரது முன்மயிர் பறந்தது. அவரது நீளமான கல்கத்தா ஜிப்பாவும் வேட்டியும் படபடக்க அவர் பறக்கத்துடிப்பதுபோல தோன்றியது. ராமன் பின்னால் எழுந்து பறந்த தன் மேல்துண்டை இழுத்து அக்குளில் செருகிக்கொண்டார்.

மதியநேரம் காந்திமண்டபத்தில் சில வடநாட்டு காதல் ஜோடிகளைத்தவிர எவருமில்லை. ராமன் சற்று எம்பி கைப்பிடிச்சுவரில் கடலுக்கு பக்கவாட்டை காட்டியதுபோல அமர்ந்து சுவரில் சாய்ந்து காலை மேலே தூக்கி வைத்துக்கொண்டார். பாலசுப்ரமணியன் சுவரைப்பற்றியபடி நின்று கீழே பார்த்தார். கடல் கண்கூசும் வெளிச்சமாக அலையடித்துக்கொண்டிருந்தது. சூரிய பரப்பில் தெரியும் புள்ளிகள் போல நாலைந்து பெரிய மீன்பிடிப்படகுகள் சென்றுகொண்டிருந்தன.

அந்த பாறையிலயா விவேகானந்த மண்டபம் வரப்போறது?’ என்றார் ராமன் கைகளை நெற்றிமேல் வைத்து ஒளியில் மிதந்து அலைபாய்வதுபோல தெரிந்த இரட்டைப்பாறைகளை நோக்கியபடி. ‘ஆமாஅந்தப்பக்கம் இருக்கிற உயரமான பாறையிலே.. சாங்ஷன் ஆயிட்டுதுன்னு கேள்விப்பட்டேன். இங்க காந்தி மண்டபம் வந்ததே நேக்கு பிடிக்கலை. கட்டிண்டே இருக்காங்க. கடற்கரைன்னா அது ஏன் கடற்கரையா இருக்கக்கூடாது? ஏன் அதை யாருமே யோசிக்கிறதில்லை

ஏன் நல்லாத்தானே கட்டியிருக்கா?’ என்றார் ராமன். ’அங்க ஒரு கோயில் இருந்தா நல்லாத்தான் இருக்கும். நீங்க கல்கத்தா போகணும். பேலூர் மடத்திலே விவேகானந்தர் இருந்த ரூமுக்குபோறச்ச நான் கண்ணுலே தண்ணி விட்டுட்டேன். என்ன ஒரு மனுஷர். அந்த மொகமிருக்கே. அதிலே தெரியற கம்பீரத்துக்கு அவரு உலகத்துக்கே ராஜாவா இருந்தாலும் பத்தாது..’ ராமன் சொன்னார். ‘இப்ப அந்தப் பாறையிலே என்ன இருக்கு?’

அங்கயா? அதில ஒரு சின்ன கோயில் மாதிரி ஒண்ணு இருக்கு. வருஷத்துக்கு நாலுவாட்டி அம்மன் கோயிலிலே இருந்து போயி பூஜைசெய்வாங்கஎன்ன மூர்த்தி?’ ‘மூர்த்தின்னு ஒண்ணும் இல்லே. பாறையிலே காலடித்தடம் மாதிரி ஒண்ணு இருக்கு. சும்மா ஓவல் சைஸிலே ஒண்ணரைசாண் நீளத்திலே ஒரு சின்ன பள்ளம். அது கன்யாகுமரி தேவி சுசீந்திரம் தாணுமாலயனை கல்யாணம்பண்ணிக்கணும்னு ஒத்தைக்காலிலே நின்னதோட தடம்னு நம்பறாங்க. அங்க போயி பொங்கல் போட்டு படைச்சு கும்பிட்டுட்டு வருவாங்க. பௌர்ணமி தோறும் படகிலே போயி வெளக்கு வைக்கிறதுண்டு

அப்டியா?’ என்றார் ராமன் ஆவலாகபோய்ப்பாக்க முடியுமா? ‘போகலாம்என்று பாலசுப்ரமணியன் இழுத்தார்.’கட்டுமரத்திலே போகணும். உங்களுக்கு அதெல்லாம் சரிப்படாது . ’கொமட்டும் இல்ல?’ என்று உடனே அந்த யோசனையை கைவிட்டார் ராமன்கேக்கவே நல்லா இருக்கு. ஒரு கன்னிப்பொண்ணு ஒத்தக்காலிலே யுகயுகமா தபஸ் பண்றாஅவளோட தபஸோட சின்னமா அந்த காலடித்தடம் மட்டும் அங்கியே பதிஞ்சிருக்குஅதுமாதிரி எல்லா பாறைகளிலேயும் விதவிதமா தடங்கள் இருக்கு. பாறையிலே உள்ள சாஃப்டான மெட்டீரியல்ஸ் மழையிலயும் காத்திலயும் கரைஞ்சு போறதனால வர்ர தடம்..’என்றார் பாலசுப்ரமணியன்

ராமன் அதைக் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை. பின்னர்எதுக்கு அப்டி ஒரு தவம் பண்ணினா? வெறும் ஒரு புருஷனுக்காகவா? காலாகாலமா அவன் பொறந்து வந்து அவளை கட்டிண்டுதானே இருக்கான். அப்றம் எதுக்கு தவம்?’ அவர் உள்ளூர சமன் குலைந்து விட்டதை பாலசுப்ரமணியன் உணர்ந்தார். ‘ஏன் பாலு, எதுக்கு ஒத்தைக்காலிலே நிக்கணும்?’ பாலசுப்ரமணியன் சிரித்துஅதானே கஷ்டம்…’ என்றார். ‘இல்ல அவளோட மத்தக்காலு அந்தரத்திலே நின்னுட்டிருந்தது. நடராஜனோட எடுத்த பொற்பாதத்தை விட இதுதான் உக்கிரமா இருக்கு. காத்தில தூக்கி நிக்கிற ஒத்தைக்கால். எங்கியும் அதை வைக்க எடமில்லாதது மாதிரிஅத எங்கியாவது செலையா செஞ்சிருக்காங்களா?’

இல்லேன்னு நினைக்கறேன்என்றார் பாலசுப்ரமணியன். ராமன்நடராஜரோட ஒத்தைக்கால் திரும்ப தரையிலே பட்டுதுன்னா ஒரு ஊழி முடிஞ்சு அண்டசராசரங்களும் அழிஞ்சிரும்னு கதை. அம்பாளோட எடுத்தபாதம் பட்டா என்ன ஆகும்?’ என்றார். பாலசுப்ரமணியன் ஒன்றும் சொல்லவில்லை. ‘ஒண்ணும் ஆகாது. அவ தாயார் இல்ல? ‘ என்றார் ராமன். தனக்குள் ஆழ்ந்து கடலையும் பாறையையும் பார்த்துக்கொண்டிருந்தார். தன்னையறியாமலேயேஹிமகிரி தனயேஎன்று முனகி தன்னுணர்வு கொண்டுமன்னிச்சுக்கங்கோ. தெரியாம வந்துடுத்துஎன்றார். பின்புநேரா கழுகுமலைக்கு போலாமா, வரேளா? சுப்பு அண்ணா அங்க பாடறார். வர்ரியாடான்னு காயிதம் போட்டிருக்கர்என்றார். ‘பாத்துட்டு சொல்றேன்என்றார் பாலசுப்ரமணியன்

சுப்பு அண்ணா எனக்கு குருவழியிலே நெருக்கம் தெரியுமோ? நெருக்கம்னா ஒண்ணுவிட்டு ரெண்டுவிட்டு அப்டி பலது விட்டு ஒரு சொந்தம்னு வைங்கோ. அதாவது அவரோட குருவோட குரு என்னோட தாத்தாவுக்கு குரு. அவரு பேரு விளாக்குடி கிட்டாவய்யர். மகாஞானின்னு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். அவரு தியாகையர் கிட்டயே சங்கீதம் கத்துண்டவர்னு சொல்வா. அதைப்பத்தி தெரியலை. மன்னார்குடி திருவையாறு திருவாரூர் பக்கம் எல்லா குருபரம்ரையையும் நேரா கொண்டுபோயி அங்க இணைச்சுக்கிடறதுண்டு

அப்டியா?’என்றார் பாலசுப்ரமணியன் பொதுவாக. பேச்சை இசையை நோக்கிக் கொண்டுசெல்வது அவருக்கு அப்போது உகக்கவில்லை. ஆனால் பிறரது பேச்சை தடுக்கவோ திருப்பவோ கூடியவர் அல்ல அவர். ‘தாத்தாபேரு சேஷய்யர். அவர்தான் எனக்கு முதல் குருன்னு சொல்லணும். அவரு பெரிய கடல். சங்கீதஞானசாகரம்னே அவருக்கு பட்டப்பேரு இருந்தது. அப்பல்லாம் சங்கீதவித்வான்களுக்கு பெரிசா ஒண்ணும் பணம் கெடைக்காது. மடத்திலே கூப்பிட்டு இந்தாடான்னு ஏதவது குடுத்தா உண்டு. ஆனா சிருங்கேரி வரை போய்வர்ர செலவே டபுள் ஆயிடும். மத்தபடி எங்கயும் கதாகாலட்சேபம்தான். அதுல இருக்கிறவாளுக்குத்தான் துட்டு. வருஷத்திலே எரநூறு கதை வரை நடத்தறவா உண்டு. தெரியுமே எங்கப்பாகூட கதாகாலட்சேபம்தான் பண்ணிண்டிருந்தர்…’

ஆனா எங்க தாத்தா சங்கீத வித்வானா மட்டும்தான் இருந்தர். கையிலே கொஞ்சம் நெலமிருந்தது. குடியானவங்க ஒழுங்கா குத்தகை அளந்தகாலம்ங்கிறதனால பஞ்சமில்லை. ஒண்ணையும்பத்தி கவலைப்படாம காவேரியிலே மூணுவேளை குளிச்சுட்டு சந்தியாவந்தனம் சாதகம்னு பண்றது, கோயிலிலே கொஞ்சநேரம் சாயங்காலம் அவருகேக்க அவரே பாடிக்கறதுன்னு நெறைவா இருந்தார். எப்பவாச்சும் தஞ்சாவூர் கும்மோணம்னு கச்சேரிக்கு கூப்பிடுவா. வில்வண்டியிலே கூட்டிண்டுபோய்ட்டு கொண்டாந்து விட்டிருவா. பெரும்பாலும் ஒரு சால்வை. ரொம்ப பெரிய எடம்னா ஒருபவுன்ல ஒரு தங்கக் காசுஅடுத்த கச்சேரி வரை அதைப்பத்தியே பேசிண்டிருப்பர். அங்க இப்டி பாடினேன் , இப்டி எடுத்தேன்னு திருப்பித்திருப்பி பாடிக்காட்டுவர்.

அவர நான் பாக்கறச்ச அவருக்கு எழுபது தாண்டியிருக்கும். அவரோட ஏழு குழந்தைகளிலே எங்கப்பாதான் கடைக்குட்டி. அப்பா பொறக்கறச்ச தாத்தாவுக்கு நாப்பத்தெட்டு வயசாம். என்னோட ஞாபகத்திலே எப்பவும் அவரு திண்ணையிலே ஜமக்காளத்தை போட்டு சாய்ஞ்சு ஒக்காந்திண்டிருப்பர். பக்கத்திலே கூஜாலே ஜலம், பெரிய தாம்பாளத்திலே தளிர்வெத்தலை, இன்னொரு சம்புடத்திலே சீவல். கிளிமாதரி ஒரு பச்சைநெறமான மரச்செப்புலே கலர் சுண்ணாம்பு. புகையில வைக்கறதுக்கு ஒரு தகரடப்பா. பக்கத்திலே எப்பவும் தம்பூரா வச்சிருப்பர். எந்நேரமும் அவர் பக்கத்திலே ஒத்தர் ஒக்காந்திண்டிருக்கிற மாதிரி தம்புரா இருக்கும். சின்னவயசிலே மாநிறமா ஒரு சின்னப்பொண்ணு அவர் பக்கத்திலே இருந்துண்டிருக்கிற மாதிரின்னு நினைச்சுக்குவேன்

பாலசுப்ரமணியன் புன்னகை பூத்தார். ‘சிரிக்கவேணாம். நெஜம்மாவே தம்புரா வெக்கப்பட்டுண்டு அதிகம் பேசாத பொண்ணு மாதிரித்தான் இருக்கும். அவரு எந்நேரமும் அதிலே சுதிபாத்தூண்டே இருப்பர். சரியா அமைஞ்சதும் அதோட சேந்து மெல்ல பாடுவார். பாட்டு எப்பவுமே அவருக்காகத்தான். இப்ப சொன்னேளே, சங்கீதம் உடம்பிலே இருக்கு, கனெக்ஷன் குடுத்திடலாம்னு. அது அவருதான். அப்பல்லாம் கிராமத்து அக்ரஹாரம் சத்தமே இல்லாம இருக்கும். ரேடியோ பிளேட்டு ஒண்ணும் வரலை. அக்ரஹாரதுக்குக்கு நடுவிலேயே ஒரு ஓடை போகும். காவேரித்தண்ணி. அந்த சத்தம் எப்பவும் கேட்டுண்டே இருக்கும். அந்த சுருதிய தம்புராவிலே பிடிப்பர். அதிலே சேந்து பாடுவர். மத்தியான்னம் மாமரத்திலே குயில் வந்து ஒக்காந்துண்டு பாடும். அந்த நாதத்தோட சுருதிய பிடிப்பார். வெளியே கேக்கிற எல்லா சத்தமும் அவருக்கு சங்கீதம்தான். அவருக்குள்ள ஓடீண்டே இருக்கிற சங்கீதத்தோட எல்லாமே இணைஞ்சிரும், ஊர்த்தண்ணியெல்லாம் காவேரியா போய்சேந்துக்கற மாதிரி. சரி, காவேரிதானே ஊருக்குள்ளே தண்ணியாகவும் வந்துண்டிருக்கு…’

ஊருக்குள்ளே அவருக்கு புண்ணியாத்மான்னுதான் பேரு. குழந்தை பிறந்தா தூக்கிண்டு வந்திருவா. ‘அண்ணா உங்க கையாலே தொட்டு ஆசீர்வாதம் பண்ணுங்கோன்னு நிப்பாங்க. அவரும் குழந்தையை மடியிலே வாங்கி வச்சுண்டுராரா தேவாதி தேவான்னு ஒரு நாலுவரி பாடி திருப்பி குடுப்பர். குழந்தையோட தாயார்காரி நின்னாள்னா கண்ணிலே ஜலம் விட்டு முந்தானையாலே முகத்த பொத்திண்டுடுவா. போன ஜென்மத்திலே சரஸ்வதிக்கு குடம்குடமா தேனபிஷேகம் பண்ணியிருக்கார்னு சொல்லுவா. ஆனா இந்த ஜென்மத்திலே தொடர்ச்சியா அறுபது எழுபது வருஷம் சரஸ்வதிக்கு தேனபிஷேகம் பண்ணியிருக்கார். கும்மோணத்திலே வேதநாராயணப்பெருமாள் கோயில்னு ஒண்ணு இருக்கு. அங்க பிரம்மனுக்கு சரஸ்வதி காயத்ரியோட தனி சன்னிதி உண்டு. வருஷா வருஷம் ஆவணி மாசம் அவரோட பொறந்தநாள் அன்னிக்கு வண்டிகட்டிண்டு அங்கபோய் தேவிக்கு தேனபிஷேகம் பண்ணிண்டு வருவார். அவருக்கு ரொம்ப முடியாமப் போனப்ப எங்க அப்பா போய் செஞ்சார். பாட்டி தவறின வருஷம் மட்டும்தான் செய்யலை

எண்பதுவயசு வரை இருந்தர். ஒரு நோய்நொடி ஈளை இளைப்பு கெடையாது. குரலிலே கொஞ்சம் கார்வையும் நடுக்கமும் வந்ததேஒழிய அழகு குறையலை. கூன் கெடையாது. ஒத்தைநாடி ஒடம்பு. முடியில்லாத மார்பிலயும் விலாவிலயும் எலும்பு தெரியும். வயத்திலே நரம்பு சுருண்டு கெடக்கும். கடைசி வரைக்கும் சட்டை போட்டது கெடையாது. மாநிறமா இருப்பார். கண்ணு ரெண்டும் பெரிசா கோபுரச்செலைகளிலே இருக்குமே அது மாதிரி பிதுங்கி வெளியே விழுறாப்ல இருக்கும். பேசற வழக்கமே கெடையாதுன்னாலும் அவரோட மனசு கண்ணுலே தெரிஞ்சுண்டே இருக்கும். கடைசியிலே தூக்கம் ரொம்ப கம்மியாயிடுத்து. நடு ராத்திரியிலே எழுந்து ஒக்காந்துண்டு மெதுவா தம்புராவ சுதிசேத்து பாடுவார். கேட்டுதா கேக்கலையான்னு ஒரு சங்கீதம். எங்கேயோ கொண்டுபோயிடும். சும்மா தேனீமேலே ஏறி ஒக்காந்து ரீ.ம்னு நந்தவனமெல்லாம் சுத்தி, நந்தியாவட்டை மல்லிகை ரோஜான்னு பூப்பூவா உக்காந்து மண்ட மண்ட தேன்குடிச்சுட்டு வந்து எறங்கின மாதிரி ஒரு அனுபவம். அந்தபாட்டைக் கேக்கறதுக்குன்னே பக்கத்தாத்திலே எல்லாம் ராத்திரி கண்முழிச்சு தூங்காம கிடப்பாங்களாம்

அவருக்கு கடைசியிலே கொஞ்சம் கண் தடுமாற்றமாயிடுத்து. காவேரிக்கு நானே காலம்பற கைபுடிச்சு கூட்டிட்டு போகணும். மத்தியான்னமும் சாயங்காலமும் வீட்டு முன்னாடியிலே ஓடையிலே குளிச்சுக்குவர். ஆனால் நியமநிஷ்டைகள் ஆசாரங்கள் ஒண்ணிலேயும் ஒரு குறையும் இல்லை. எல்லாம் அவருக்கு நினைச்ச மாதிரி நடக்கணும். நடக்காட்டி ஒண்ணும் சொல்ல மாட்டார். பேச்சை நிப்பாட்டிட்டு தம்பூராவ தூக்கிண்டுடுவர். அப்றம் அப்பா அம்மா எல்லாரும் வந்து கன்னத்திலே போட்டுண்டு கண்ணீர்விட்டு கெஞ்சின பிறகுதான் இறங்கி வருவர். எங்க அம்மாதான் எல்லாம் பாத்து செய்யணும். அம்மாவும் தெய்வத்துக்கு பண்றமாதிரி செய்வா.

ஆமா, பாட்டி இருந்தள்என்றார் ராமன். ‘அவளை நான் சரியா பாத்த ஞாபகமே இல்லை. தாத்தாவ விட பதிமூணு வயசு கம்மி அவளுக்கு. ஆனா பாத்தா எம்பது தொண்ணூறு அதுக்கும் மேலேன்னு தோணிடும். என் சின்னவயசு ஞாபகத்திலே வத்திப்போன பசு மாதரி அவ சித்திரம் இருக்கு. முதுகு நல்லா ஒடிஞ்சு வளைஞ்சு இடுப்புக்கு மேலே உடம்பு பூமிக்கு சமாந்தரமா இருக்கும். பசுவேதான். கைய முன்னங்கால்னு வச்சுக்கிட்டோம்னா அவ நடக்கிறது பசு நடக்கிறது மாதிரியே இருக்கும். கண்ணும் மொகமும் தரையப்பாத்துண்டிருக்கும். தலயிலே கொஞ்சம் வெள்ள முடி. அத கொட்டைப்பாக்கு சைசுக்கு கட்டி வச்சிருப்பள். ஜாக்கெட் போடறதில்லை. எப்பவும் ஏதாவது ஒரு மொலை வெளியே தொங்கி கிழட்டு மாடோட அகிடு மாதரி ஆடிண்டிருக்கும். மெலிஞ்சு வத்தி ஒரு பத்துவயசு குட்டி அளவுக்குத்தான் இருப்பா. சாப்பிடுறது ரொம்ப குறைவு. காலம்பற ஒரு இட்லி. மத்தியான்னம் இன்னொரு இட்லி. சாயங்காலம் ஒரு பிடி சோறு. அதையும் உக்காந்து சாப்பிட மாட்டா. சின்ன சம்புடத்திலே போட்டு கையிலே குடுத்திடணும். அத அங்க இங்க வச்சிடுவா. எடுத்து எடுத்து குடுக்கணும். அதுக்கு நல்லது பொரி வாங்கி அவ மடியிலேயெ கட்டி விட்டுடறதுன்னு பிறகு எங்கம்மா கண்டுபிடிச்சள். அதான் சாப்பாடு

அவ ஒக்காந்து நான் பாத்ததே கெடையாது. எப்பவும் வீடு முழுக்க அலைஞ்சுகிட்டேதான் இருப்பள். வீட்டை விட்டு வெளியே போகமாட்டா. முற்றத்துக்கும் திண்ணைக்கும்கூட வரமாட்டா. கடைசி இருபது வருஷத்திலே புத்தி பேதலிச்சு போச்சு. எங்கப்பாவுக்கு கல்யாணமாகி மாட்டுப்பொண்ணு வர்ரப்பல்லாம்கூட நல்லாத்தான் இருந்திருக்கா. பொதுவா பேசறவ இல்ல. எல்லாத்துக்கும் ஒரு மௌனம். எங்கப்பா ஞாபகத்திலேயே அவங்கம்மா பேசி கேட்டது ரொம்ப கம்மி. வீட்டுக்குள்ள பல்லிப்பேச்சு கேட்டாத்தான் உண்டுன்னு அப்பா சொல்வர். வெறிபுடிச்சாப்ல வீட்டுவேலை செய்றதுதான் அவளோட ஒலகம். வெடிகாலைலே எந்திரிச்சு கைவெளிச்சம் வர்ரதுக்குள்ள அத்தனை பாத்திரங்களையும் கழுவி வீட்ட கூட்டிப்பெருக்கி கழுவி குளிச்சிட்டு தாத்தாவோட பூஜைக்கான ஏற்பாடுகளை செஞ்சு முடிக்கணும்.. வேலைதவிர ஒண்ணுமே தெரியாது

எங்கம்மா வந்ததும் அதே சிக்கல்தான். வீட்டுலே ஒரு வேலை மிச்சமிருக்காது. மாட்டுப்பொண்ணு வேலைபாத்தாத்தானே நல்லா இருக்கும். ஆனா பாட்டிக்கு செஞ்சு தீக்கறதுக்கே வேலை பத்தாது.அம்மா பாட்டி பின்னாடியே அலையறதுதான் மிச்சம். அம்மாவுக்கு மூத்த அக்கா பிறந்தப்ப எல்லாத்தையும் பாத்து செஞ்சதே பாட்டிதான். அம்மா சும்மா படுத்திருந்தா போரும். ஆனா அப்பதான் சிக்கல் கொஞ்சமா தெரிய ஆரம்பிச்சுது. குழந்தையோட அழுக்குத்துணிகளை போட்டு கழுவு கழுவுன்னு கழுவ ஆரம்பிச்சா. அப்றம் வீட்டுக்குள்ள குழந்தையோட அழுக்கு கெடந்தா ஒடனே மொத்த வீட்டையும் துடைச்சு கழுவறது. என்ன இதுன்னு ஆரம்பத்திலே தோணியிருக்கு. அவ்ளவொண்ணும் ஆசாரமான ஆளும் இல்லை. கேட்டா சரியான பதில் இல்லை. கொஞ்சம் கொஞ்சமா கூடிட்டே போச்சு.

ஆறுமாசத்திலே தெரிஞ்சுடுத்து என்னவோ பிரச்சினைன்னு. அப்ப வீட்டிலே இன்னும் ஒரு தங்கச்சி கல்யாணத்துக்கு இருந்தா. இதைப்பத்தி பேசப்போய் அதுவேற வம்பாயிடும்னு அப்டியே விட்டாச்சு. அப்றம் அப்டியே பழகிப்போச்சு. மடத்துக்கு காரியஸ்தரா அப்ப நாணாவய்யர்னு ஒருத்தர் இருந்தார். தாத்தாவோட லௌகீகமெல்லாம் அவருதான் பாத்துக்கறது. ‘சரிடா, எல்லாரும் மண்ணுல ரெண்டுகாலையும் வச்சுண்டிருக்கா. அவ ஒரு கால தூக்கிட்டா. விடு.வயசு வேற ஆயாச்சு. இனிமே கொண்டுபோய் என்ன பண்றது. வேற ஒரு பிரச்சினையும் இல்லையே. அவபாட்டுக்கு இருக்கான்னு சொல்லிட்டர்.

அவ சித்தம்போக்குல இருப்பா. வெடிகாலை நாலுநாலரைக்கே எந்திரிச்சு குளிக்க ஆரம்பிப்பா. மூணுமணிநேரமாகும் குளிச்சு துவைச்சு வர்ரதுக்கு. வந்ததும் வீட்ட கூட்டி பெருக்கி துடைக்கிறது. ஒரு இண்டு இடுக்கு விடமாட்டா. சன்னல்கம்பி கதவுமூலை எல்லாம் துடைச்சுகிட்டே இருப்பா. நடுவிலே மறுபடியும் குளியல். மறுபடியும் சுத்தப்படுத்தறது. ஒருநாளைக்கு எட்டுவாட்டியாவது குளிக்கிறது. ராத்திரி வீட்டுக்குள்ள சுத்தி வர்ரான்னு காமிரா உள்ளிலேயே படுக்கைய போட்டு அடைச்சிடறது. உள்ளயும் சுத்தம் பண்ற சத்தம் கேட்டுண்டே இருக்கும்

தாத்தா அப்டி ஒரு ஜென்மம் வீட்டுக்குள்ள இருக்கிறதே தெரியாதேங்கிற மாதிரி இருப்பர். ஒரே ஒருவாட்டி அக்காவுக்கு ஒரு வரன் வந்து அதைப்பத்தி பேசறப்ப இப்டி பாட்டியப்பத்தி பேச்சு வந்தது. ‘ஒவ்வொருத்தரும் அவஅவா வாழ்க்கைய கட்டுச்சோறு மாதரி கட்டிண்டுதாண்டா வர்ராஒண்ணும் பண்ணமுடியாது. பிராப்தம்னு மட்டும் சொன்னார். பாட்டியும் ரேழி தாண்டறதில்லை. அவங்க ரெண்டுபேரும் கடைசியா எப்ப சந்திச்சுகிட்டாங்கன்னே தெரியலை. ஒருநாளைக்கு காலம்பற அம்மா காமிரா உள்ள திறந்தா சுவர் மூலையிலே சுவரோட ஒட்டி முதுகைகாட்டிண்டு ஒக்காந்திருக்கா. உள்ள போய் என்ன அத்தைன்னு தொட்டதுமே தெரிஞ்சுடுத்து. நானும் ஓடிப்போய் பாத்தேன். அப்டி ஒத்தர் செத்துப்போய் ஒக்காந்திட்டிருக்கிறதைப்பத்தி கேள்விப்பட்டதே இல்லை. சப்பரத்துக்கு வளைச்ச மூங்கில் மாதரி கூன்முதுகு மட்டும்தான் தெரியறது. கைகால் தலை எல்லாமே முன்பக்கம் சுவர் மூலைக்குள்ள இருக்கு.

அப்பா போய் சோழியன கூட்டிண்டு வந்தார். அவனும் தொணைக்கு இன்னொருத்தனுமா வந்து தூக்கி போட்டாங்க. பொணத்த மல்லாக்க போட முடியலை. கூனும் வளைவும் அப்டியே இருக்கு. பக்கவாட்டிலே போட்டப்ப ஏதோ கைக்குழந்தை வெரல் சூப்பிண்டு தூங்கற மாதிரித்தான் இருந்தது. குளிப்பாட்டறப்ப அம்மா பாத்திருக்காள். கை வெரலிலே தேள்கொட்டிருக்கு. குழிக்குள்ள கைய விட்டுண்டிருக்கா. நல்ல பெரிய கருந்தேள். சின்ன ஒடம்பானதனால வெஷத்தை தாங்கலை. ஜன்னி மாதரி வந்து ஒதட்டை கடிச்சு கிழிச்சுண்டிருக்கா..

தாத்தாகிட்ட விஷயத்தைச் சொன்னப்ப தம்புராவ கீழ வச்சார். புரியாத மாதிரி கொஞ்சநேரம் பாத்தார். ‘தாசரதேன்னு முனகிண்டு மறுபடியும் தம்பூராவ எடுத்துண்டார். வாசலிலெ கீத்துப்பந்தல் போட்டு ஊரெல்லாம் கூடி அழுது ஒரே ரகளை. அந்த சத்தம் எதுக்கும் சம்பந்தமில்லாதவர் மாதரி அவர் தம்பூராவ மீட்டி கண்ணமூடி அவருக்குள்ள இருக்கிற சங்கீதத்த கேட்டுண்டு லயிச்சுபோய் ஒககந்திருந்தர். எடுக்கிறச்ச மூத்த அத்தை வந்துஅப்பா வந்து ஒரு பார்வை பாத்துடுங்கோன்னார். ஒண்ணும் பேசாம தம்பூராவ வச்சுட்டு எந்திரிச்சு வந்தர். வாசலை தாண்டி கூடத்துக்கு வந்து கீழே கிடக்கிறவளை ஒரு வாட்டி பாத்துட்டு அப்டியே திரும்பி போய்ட்டர். நேரா போய் தம்பூராவ எடுத்துண்டு ஒக்காந்துட்டர். அப்றம் காவேரிக்கரைக்கு கெளம்பறச்சதான் அவர எழுப்பினாங்க

பாட்டிக்கு சங்கீதம் தெரியும்னு கேள்விப்பட்டிருக்கேன். எங்க தாத்தோவோட அப்பா சுப்பையர் , அவரும் பெரிய வித்வான். வர்ணம் பாடுறதிலே அவர் காலத்திலே அவர்தான் பெரிய ஆள்னு கெட்டிருக்கேன். அவருக்கு தஞ்சாவூர் அரண்மனையிலே இருந்து தானமா குடுத்ததுதான் கையிலே இருந்த நெலமெல்லாம். அவர்தான் எங்க தாத்தாவோட மொதல் குரு. அவர் ஒருதடவை ஒரு நெல விஷயமா பத்தூர் போயிருக்கார். பத்தூர்னா கொரடாச்சேரி பக்கத்திலே இருக்கு. அங்க ஒரு பழைய கோயில் ஒண்ணு இருந்து அழிஞ்சு போச்சு. கோயில் அழிஞ்ச்சாலும் அக்ரஹாரம் அழியலை. ஆனா தரித்திரம்புடிச்ச அக்ரஹாரம். தாத்தா அக்ரஹாரம் வழியா வண்டியிலே வர்ரச்ச ஒரு பாட்டு கேட்டிருக்கு. அந்த வீட்டு முன்னாடி வண்டிய நிப்பாட்டி விசாரிச்சிருக்கார். அது எங்க பாட்டியோட வீடு. பாட்டிக்கு அப்ப ஆறு வயசு. அவதான் பாடிண்டிருந்தது.

மத்த விஷயங்களை எல்லாம் கேட்டுண்டு அங்கியே இவதான் என் மாட்டுப்பொண்ணுன்னு வாக்கு குடுத்திட்டார். பொண்ணையே பாக்கலை. ’பொண்ணை பாருங்கோன்னதுக்குஇந்த குரலுக்கும் இந்த வித்யைக்கும் இவ எப்டி இருந்தா என்னய்யா? சாட்சாத் சரஸ்வதியைன்னா நான் என் வீட்டுக்கு கூட்டிண்டு போகப்போறேன்ன்னு சொல்லியிருக்கார். அஞ்சுபவுன் எதிர்ஜாமீன் பண்றதா அவரும் வாக்கு குடுத்தர். கல்யாணம் அவராத்திலேயே நடந்திருக்கு. ஆனா பொண்ணுக்கு ஏழு எட்டு வயசானதுக்கு அப்றமும் சொன்ன பவுனைபோட்டு புக்காத்துக்கு அனுப்ப அவாளாலே முடியலை. அப்பல்லாம் பஞ்ச காலம். வயத்தக் கழுவறதே பெரிய விஷயம். ஏதோ நம்பிக்கையிலே சொல்லிட்டார். முடியலை. அப்டியே வீட்டுலேயே வச்சிருந்தர்.

தாத்தாவோட அப்பா நாலஞ்சுவாட்டி ஆளு சொல்லி அனுப்பியிருக்கார். சரியா பதில் இல்லை. ‘சரிடா, உனக்கு இந்த பொண்ணு இல்லை. உன் ஜாதகத்திலே வேற எழுதியிருக்குபோலன்னு சொல்லிட்டு வண்டி கட்டி நேரா பத்தூர் போய் எறங்கியிருக்கார். சம்பந்தி அய்யர் எங்கியோ வாழை எலை நறுக்க போனவர் ஓடிவந்து கைய கூப்பிண்டு பேசாம நிக்கிறார். இவருஅவ்ளவுதான் ஓய். அதை சொல்லிண்டு போகத்தான் வந்தேன்ன்னு சொல்லிட்டு திருப்பி வண்டியிலே ஏறி ஒக்காந்துட்டர். அப்ப பாத்தா பின்னாடியே கையிலே ஒரு சின்ன மூட்டையோட பாட்டி வந்து நிக்கிறா. ஒண்ணுமே சொல்லலை, கண்ணு ரெண்டும் வரைஞ்சு வச்சதுமாதிரி இருக்கு. இவரு பாத்தார். ‘சரி ஏறுடீ கோந்தேனு தூக்கி ஒக்கார வச்சு கொண்டாந்துட்டர்

ஆனா கடைசி வரைக்கும் பத்தூர் ஆட்கள வீட்டுப்பக்கமே வர விடலை. சீர் செனத்தி ஒண்ணையுமே வாங்கிக்க மாட்டேன்னுட்டர். பிரசவத்துக்கும் சாவுக்கும் ஒண்ணுக்கும் வரப்படாதுன்னுன்னு பிடிவாதமா சொல்லிட்டர். பலபேரு வந்து சமரசம் பேசியிருக்கா. ‘போனா போகட்டும், திரும்பி வரவேணாம்னு திட்டவட்டமா சொல்லிட்டர். பாட்டியோட அப்பா வந்து தெருவிலே தென்னை மரத்தடியிலே நிக்கிறார். ‘கூட்டிண்டு போனா அப்டியே போயிரும் ஓய்நு தாத்தாவோட அப்பா சொல்லிட்டார். ‘இல்லே, எங்க இருந்தாலும் புள்ளைகுட்டிகளோட நெறைஞ்சு இருக்கட்டும். ஏழையோட ஆசீர்வாதம் எப்பவும் அவ பின்னாலே நெழலு மாதிரி இருக்கும்னு சொல்லிட்டு அழுதிண்டே போனார். அதோட சரி. பிறகு பாட்டிக்கும் பத்தூருக்கும் சம்பந்தமே இல்லாம ஆச்சு. முப்பது வருசத்திலே பத்தூர் அக்ரஹாரமே அழிஞ்சுபோச்சு

பாட்டி பாடி கேட்டதே இல்லைன்னு எங்கப்பா சொல்வார். ஏன்னு தெரியலை. எங்க தாத்தாவுக்கு ஒரு கொணம் உண்டு. அவர் மத்தவா பாடி கேக்கமாட்டார். அவரே பாடிக்குவர். ’நெறைஞ்ச குளம்டா, அதுக்கு எதுக்கு ஓடைத்தண்ணின்னு எங்கப்பா சொல்வர். அதனாலகூட இருக்கலாம். எனக்கு எங்க தாத்தா ரெண்டுவயசிலே பாட்டு சொல்லி வைக்க ஆரம்பிச்சார். அவருக்கு சிஷ்யர்களுன்னு எங்கப்பா உட்பட எம்பது தொண்ணூறு பேரு உண்டு. ஒத்தர்கூட வீணாப்போகலை. சிலர் பெரிய வித்வான்களா ஆகி வைரக்கடுக்கனும் தோடாவுமா வந்து கும்பிட்டு ஆசீர்வாதம் வாங்கி போவா. சங்கீதமே வராம போனது நான் மட்டும்தான். சங்கீதம் மனசு முழுக்க இருக்கு. சொன்னேளே, கைவெரல் நுனி வரை வழியறதுஆனா நாக்கிலே வராது. ‘தேவீ, என்னம்மா இதுன்னு தாத்தா மார்பிலே கைய வச்சுண்டு ஏங்குவார். சரின்னு வயலின் கத்துக்க வச்சார். புல்லாங்குழல் கத்துக்க வச்சார். ஒண்ணுமே சரியா வரலை. அப்றம் கைவிட்டுட்டர்.

எனக்கு என்ன ஆச்சுன்னு இப்பவும் சொல்ல தெரியலை. ரொம்பநாளைக்கு அப்றம் ஒண்ணு தோணித்து, தாத்தா கத்துக்குடுக்காம இருந்தா வந்திருக்குமோன்னு. அவர் சொல்லிக்குடுக்கிறப்ப உள்ளுக்குள்ள ஒரு நாக்கு மடங்கிடுது. வெளிநாக்கை பேச வைக்கிற மனசோட நாக்கு அது. வெளிநாக்கு கிடந்து அலைபாயும். மனநாக்கு மடங்கி ஒட்டி நடுங்கிண்டிருக்கும். அதான். இப்பகூட நான் பாடிடுவேன். ஆனா ரெண்டு நாக்கும் ஒண்ணுக்கொண்ணு சேர்ந்துக்காது.

ஏன்னே தெரியலை. ஆனா ஒரு சம்பவம். அப்பா சொல்லி அம்மா எங்கிட்ட ஒருவாட்டி ரகசியமா சொன்னது. அதையெல்லாம் பிள்ளைகள்ட்ட சொல்லக்கூடாதுன்னுதான் நேக்கு இப்ப படறது. அந்த நெனைப்பு எங்கியோ உறுத்திட்டிருக்கலாம், தெரியலை. எங்க தாத்தாவோட அப்பா மூணுவருஷம் பக்கம் தளர்ந்து படுக்கையிலே கிடந்துதான் செத்தார். கடைசியிலே மலமூத்திரமெல்லாம் படுக்கையிலேதான். தாத்தாவுக்கு அவர் அப்பா மட்டுமில்ல குருவும் கூட. அதனால அவர் அப்டி பாத்துக்கிட்டார். பாட்டியும் கைக்குழந்தைய பாத்துக்கிடற மாதிரி கவனிச்சுகிட்டா.

ஒருநாள் தாத்தாவோட அப்பா என்னமோ முனகறது மாதிரி சத்தம் கேட்டிருக்கு. தாத்தா உள்ள போய் பாத்திருக்கார். படுக்கையிலேயே கமுகுப்பாளைய வளைச்சு தெச்சு பெட்பான் மாதிரி வச்சிருந்தாங்க. அதிலேயே ரெண்டும் போய் அதிலேயே படுத்திருக்கார். கண்ணு நிறைஞ்சு ரெண்டு மைக்குப்பி மாதிரி இருக்கு.தாத்தாஅடியேன்னு ஒரு சத்தம் போட்டிருக்கார். சமையல் உள்ளிலே வேலையா இருந்த பாட்டி ஓடி வந்திருக்கா. அந்த பெட்பானை அப்டியே தூக்கி அவ தலைமேலே கொட்டிட்டார்.

ரொம்ப பின்னாடிதான் எழுத வந்தேன் பாலு. சங்கீதம் உசத்திதான். பரிசுத்தமானதுதான். இலக்கியம் அந்த அளவுக்கு சுத்தம் இல்லை. இதிலே அழுக்கும் குப்பையும் எல்லாம் இருக்கு. பிடுங்கி எடுத்த நாத்து மாதரி வேரில சேறோட இருக்கு. ஆடிக்காவேரி மாதரி குப்பையும் கூளமுமா இருக்குஅதனால இது இன்னும்கொஞ்சம் கடவுள்கிட்ட போய்டறதுதெரியலை. உளறுறேனா என்னன்னு உன்னைமாதிரி மூளை உள்ளவங்கதான் சொல்லணும். நான் எழுதின முதல்கதையெ பாட்டியப்பத்தித்தான்.

வாசிச்சமாதிரி இருக்கு..’ என்றார் பாலு. ‘இல்லே, நீங்க வாசிச்சது ரொம்ப பின்னாடி விகடன்ல எழுதினது. இந்தக்கதை அந்தக்காலத்திலே திரிலோகசீதாராம் நடத்தின பத்திரிகையிலே வந்தது. குபராகூட அதிலே நெறைய எழுதியிருக்கார்ராமன் புன்னகை செய்தார். ‘அந்தக்கதையிலே வர்ர பாட்டி வேறமாதிரி இருப்பா. தலைநெறைய பூ வச்சுண்டு அட்டிகை போட்டு பட்டுபுடவை கட்டிண்டு சதஸிலே உருகி உருகி பாடுவள்என்றார்