இடுகைகள்

பரிபாடல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

நமது இலக்கிய மரபு - பரிபாடலில் திருமால் - வளவதுரையன்

பரிபாடலின் இரண்டாம் பாடலைப் பாடியவர் கீரந்தையார் எனும் புலவர் . உலகத்தின் தோற்றமுறைகளையும் , வராக அவதாரத்தையும் சிறப்பித்துக்கூறி கொடுமையான எண்ணங்கள் இல்லாத நல்லறிவை அருளவேண்டுமெனத் திருமாலிடம் இப்பாடலில் அவர் வேண்டுகிறார் . பரம்பொருளாகிய இறைவனிடத்திலிருந்து வானமும் அதிலிருந்து படிப்படியாக காற்று , தீ , நீர் , நிலம் முதலியவை தோன்றியதாக வேதங்கள் கூறுகின்றன . மேலும் பல்வேறு ஊழிக்காலங்கள் கடந்தபின்னர் தான் நிலஊழி தோன்றுகிறது .

துடி - நுண் பொருள் விளக்கம் - பேராசிரியர் செ.வைத்தியலிங்கன்

தமிழில் " துடி ' என்பதற்கு , உடுக்கை , உடுக்கு , சிரந்தை எனப் புலவர்கள் பல இடங்களில் பொருள் கூறியுள்ளனர் . " துடி ' என்பது தோலிசைக் கருவி ; அந்தத் தோற்கருவிக்கு முற்காலத்தில் பல நோக்கங்களில் சிறப்பிடம் தந்துள்ளனர் . " துடி ' மரத்தால் செய்யப்பட்டு , அதன் இருபக்க வட்டக் கண்களும் தோலால் போர்த்தப்பட்டு , தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும் . அதன் இடைப்பகுதி சுருங்கியிருப்பதால் , " இடை சுருங்கிய பறை ' என்றும் விளக்கியுள்ளனர் . அழகிய மகளிரை வருணிக்கையில் , அவர்களின் இடை - இடுப்பு - நளினமாகச் சுருங்கி அமைதல் பற்றி " துடியிடை மகளிர் ' எனப் புலவர்கள் இலக்கியங்களில் புலப்படுத்தியுள்ளனர் .

பருவமழை எப்போது? பரிபாடல் கூறுகிறது! - நெல்லை ஆ.கணபதி

ஐப்பசி கார்த்திகை அடைமழைக் காலம் என்று கூறுவர். "கர்ணனுக்குப் பிறகு கொடை இல்லை; கார்த்திகைக்குப் பிறகு மழையும் இல்லை' என்பது பழமொழி. கார்த்திகை மாதம் முடிந்த பின்னர் மார்கழியிலே, பனிக்காலமாகி மழை குறையும். இது இயற்கை நியதி. பரிபாடலில், வையை நதியில் மழைநீர் பெருகி ஓடுவது பற்றிப் பாடியுள்ள ஆசிரியர் நல்லந்துவனார், மழை எப்போது பெய்யும் என்பதை நுட்பமாக விளக்கியுள்ளார். பாடல் இதோ: ""விரிகதிர் மதியமொடு வியல் விசும்பு புணர்ப்ப எரிசடை, எழில்வேழம் தலையெனக் கீழ்இருந்து தெரு இடைப்படுத்த மூன்று ஒன்பதிற்று இருக்கையுள் உருகெழு வெள்ளிவந்து ஏற்றியல் சேர வருடையைப் படிமகன் வாய்ப்ப, பொருள்தெரி புந்தி மிதுனம் பொருந்த, புவர் விடியல் (6) அங்கி உயர்நிற்ப, அந்தணன் இல்லத்துணைக்கு உப்பால்எய்த இறைஎமன் வில்லின் கடை மகரம்மேவ பாம்பு ஒல்லை மதியம் மறைய வருநாளில்-வாய்ந்த பொதியில் முனிவன் புரைவரைக்கீறி மிதுனம் அடைய விரிகதிர் வேனில் எதிர்வரவு மாரி இயைக! எனஇவ் ஆற்றால் (12) புரைகெழு சையம் பொழிமழை தாழ, நெரி தரூஉம் வையைப் புனல்'' (14) வானம் முழுவதும் விரியும் ஒளிபரப்பி நிற்கும் சந்திரனுடன், கார்த்த

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ