இடுகைகள்

கண்மணி குணசேகரன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

வாகனம் – கண்மணி குணசேகரன்

குதிரை கணைத்தபடி சுவரோரம் கம்பீரமாய் நின்றுகொண்டிருந்தது. குதிரை மீது குந்தியிருந்த வீரனுக்குத்தான், இடைஞ்சலாய் தலையில் கூரை இடித்தபடி தோள் மீது மக்கிய கருப்பஞ்செத்தைகள் கிடந்தன. சுழி சுத்தம் பார்க்கிறமாதிரி தங்கராசுவும் முருகவேலும் முன்னும் பின்னுமாய் பக்கவாட்டத்தில் வந்து குதிரையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குந்தி குந்தி மண்பாண்டங்கள் செய்து கூன் விழுந்த உடம்பு. குனிந்தவாக்கில் இவர்களைப் பார்த்துக்கொண்டே வாசலில் சேற்றை மிதித்துக் கொண்டிருந்தார்.  காலை வெயிலில் வழுக்கைத் தலை வேர்த்து வடிந்தது. கோவணமும் நனைந்திருந்தது. பக்கத்தில் சுற்றவிட்டு பாண்டங்கள் செய்யும் மண் சக்கரத்தின் மைய்யத்தில், குடித்துவிட்டு மீதம் வைத்த தண்ணீரோடு பித்தளை குண்டு செம்பு கலசமாய்  குந்தியிருந்தது. வெளுத்த தலை. மெலிந்த உடம்பில் ஒப்புக்குத் துணியைச் சுற்றியிருந்த கிழவி. வீட்டுக்குள்ளிருந்து சுடாத சட்டி, பானை, உலை மூடி, உண்டியல், சோடிக் குருவி, அரவான் என வளை தோண்டும் எறும்பாய் வாசலில் ஒவ்வொன்றாய் கொண்டுவந்து வைத்தபடியிருந்தாள். ஒவ்வொரு நடைக்கும் கிழவரையும் குதிரையைப் பார்த்தபடி நிற்கும் அவர்களையும் பார்த்தவள

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ