28/02/2012

வேருக்கு நீர் வார்த்தவர்கள் – 29 : அறிவியலும் தமிழும்!

 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

இந்த நூற்றாண்டு விஞ்ஞான நூற்றாண்டு. விந்தைமிகு சாதனைகள் பற்பல நிகழும் காலம். விண்ணையும் வியன் மண்டலத்தையும் வலம்வந்து வாழும் காலம். உலகில் பல்மொழிகள் சிறப்பாக ஆங்கிலம், ஜெர்மன், உருசியா ஆகிய மொழிகள் அறிவியல் துறையில் நாளும் வளர்ந்து வருகின்றன. பாரதியே,

""புத்தம் புதிய கலைகள்
மெத்த வளருது மேற்கே''

27/02/2012

காதல் என்பது... – சுஜாதா

இதுவரை கவிஞர்களும், கலைஞர்களும், காதலர்களும் கையாண்டுவந்ததை விஞ்ஞானிகள் தீவிரமாக ஆராயத் துவங்கி குட்டையைக் குழப்பியிருக்கிறார்கள். பெருமூச்சிலும், துடிப்பிலும், கண்ணீரிலும், மோசமான கவிதைகளிலும் சிலவேளை உடுப்பி லாட்ஜில் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலையிலும் ஓடிக்கொண்டு இருந்த காதல் தன் தெய்வீக, அமர காரணங்களைத் துறந்து வெறும் கெமிஸ்ட்ரி ஆகிவிடும் போல இருக்கிறது. கடந்த பிப்ரவரி 'டைம்இதழில் காதல் ரசாயனத்தைப் பற்றிய கட்டுரை சிந்திக்கவைக்கிறது.

24/02/2012

பாரம் - அ.முத்துலிங்கம்

அமெரிக்காவில் அவன் தங்கிய முதல் வீட்டுக்கு முன் ஒரு மயானம் இருந்தது. வாடகைக்கு எடுத்தது. மறு நாள் காலை யன்னலைத் திறந்து பார்த்தபோதுதான் அவனுக்கு மயானம் இருப்பது தெரிந்தது. உடனேயே அனோஜாவை நினைத்துக்கொண்டான். மயானத்தைத் தாண்டும்போது அவள் கை விரல்களை ஒவ்வொன்றாகச் சூப்புவாள். அவனையும் கை விரல்களைச் சூப்பச் சொல்வாள். அவனுக்குச் சிரிப்பு வந்தது. அமெரிக்காவின் பனிக் காலத்தில் என்ன செய்வாள்? ஒவ்வொரு முறை மயானத்தைக் கடக்கும்போதும் கையுறையைக் கழற்றி ஒவ்வொரு விரலாகச் சூப்பிவிட்டு மறுபடியும் கையுறை அணிவாளா? செய்தாலும் செய்வாள். ஆச்சர்யப்படுத்துவதில் அவளை யாரும் வெல்ல முடியாது.

வள்ளுவ இல்லறம் - இரா.முருகன்

மனித சமூகம் சார்ந்த வாழ்வியல் நிகழ்வுகளே இலக்கிய ஆக்கங்களாகப் படைக்கப்படுகின்றன. இப்படைப்புகள் தனிமனிதனையோ சமூகத்தையோ பாடு பொருளாகக் கொண்டு இலங்குகின்றன. மனிதனின் வாழ்க்கையைப் பற்றிப் பேசுபவை ஒரு வகையாகவும், வாழ்வியல் நெறிகளை அல்லது விதிகளைப் பற்றிப் பேசுபவை மற்றொரு வகையாகவும் என இவ்விலக்கிய வகைகளை இரண்டாகப் பகுக்கலாம். வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம், காலத்தின் தேவை போன்ற காரணங்களால் முதல் வகை இலக்கியங்கள் சமூகத்தில் நிலைகுன்றிப் போய் விடுகின்றன. வாழ்க்கை முறையில் ஏற்படும் மாற்றம் வாழ்வியல் கோட்பாடுகளில் ஏற்படுவதில்லை. எனவேதான் இரண்டாம் வகைப் படைப்புகள் காலம் கடந்து நிற்கின்றன.

தமிழிலக்கிய வரலாற்றிலேயே வாழ்வியலைப் பிழிந்து இலக்கியம் கண்ட பெருமை வள்ளுவரையே சாரும். இந்தி இலக்கியம், மலையாள இலக்கியம் என்று மார்தட்டிக் கொள்ளும் மனிதர்களுக்கு மத்தியில் மொழி, இனம், நாடு என இவற்றைத் தாண்டி உலகம் முழுவதுமே போற்றக் கூடிய உலகப் பொதுமறையாய் விளங்குவது தமிழரின் திருக்குறளே எனில் மிகையாகா.

நல்லாண்மை என்பது இல்லாண்மையே - ஆ.இலலிதா சுந்தரம்

''இல்லறமல்லது நல்லறமன்று'' என்று ஒளவையார் கூறுகின்றார். ''அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது'' என்று அவர் கூறிய கூற்றிற்கிணங்க இவ்வரிய பிறவி பெற்ற மனிதப் பிறவியில் திருவள்ளுவரின் இல்லறம் என்ற நல்லறம் பற்றிக் கூறும் கருத்துகளைத் தித்திக்கும் சொல்லெடுத்துத் தீந்தமிழின் முத்தெடுத்துத் திருக்குறளின் வித்தெடுத்துப் பார்க்கலாம்.

நல்ல குடும்பம்

''நல்ல குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்'' என்று பாரதிதாசனார் கூறுகின்றார். மனித சமுதாயத்தின் அடிப்படை அலகாகக் குடும்பம் திகழ்கின்றது. குடும்பம் என்பது முதலில் கணவன், மனைவி இணையும் ஒரு அன்புப் பிணைப்பு; பாசவலை எனத் திகழும் இல்லறமாகும். குடும்பத்தில் கணவன் மனைவி, குழந்தைகள் பெற்றோர், சகோதர, சகோதரிகள், நாத்தனார், மைத்துனர் எனப் பலரும் இருப்பர்.

வாழ்க்கை

வாழ்க்கை என்ற போர்க்களத்தில் சோதனைகளை வென்று, அரிய சாதனைகளைப் படைத்து வாழ்ந்து வெற்றி காண வேண்டும். இல்லறம் என்ற படகினை, வாழ்க்கையெனும் கடலில் செலுத்தி நீந்திக் கரையேறி நல்லறமாகத் திகழச் செய்ய வேண்டும்.

வள்ளுவத்தில் இல்லறம் - கே.எஸ்.இராமநாதன்

உலகமே வியந்து பாராட்டும் தமிழ் மறையின் சிறப்பியல்புகளை இன்றைய சூழ்நிலைக்கு ஆராய முற்படுவது, முழு நிலா நாள் அன்று இரவு, முழு நிலாவின் வனப்பினை ஆய்தற்கு ஒப்பாகும்.

தமிழ்மறை

''கடுகைத் துளைத்து'', ''அணுவைத் துளைத்து'' என்றெல்லாம் இரண்டே அடிகளில் வாழ்க்கை நெறிமுறைகளைத் தொகுத்துக் கொடுத்த திருக்குறளைக் கரும்பு சுவைப்பது போல் சுவைத்து மகிழ்ந்தனர் பழந்தமிழர். கொற்கைத் துறைமுகத்தில் முத்துகளை அள்ள அள்ள மகிழ்ச்சிக்குக் குறைவுண்டோ? 1330 குறட்பாக்களும், 1330 முத்துகளே. இவற்றை அறத்துப்பால், பொருட்பால், காமத்துப் பால் என 4 சரங்களாகக் கோர்த்து சேர்த்து புடம் போட்ட சங்கிலியே எங்கள் குறள். இதை மனதில் கொண்டே ''யாமறிந்த புலவரிலே, கம்பரைப் போல், வள்ளுவரைப் போல், இளங்கோவைப் போல், புவிதனிலே, யாங்கணுமே கண்டதில்லை'' என்றும், ''வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு'' என்றும் கூறி வள்ளுவர் புகழ் வானோங்கி நிற்கிறது. குமரிமுனையில் 133 அடி உயரமாக உலகிற்கே சாதி சமய இனமொழி வேறுபாட்டைக் களைந்து நிற்கும் ஒரே தலைவராய் பறை சாற்றுகிறார் தெய்வப்புலவர்.

திருவள்ளுவர் உணர்த்தும் இல்லறம் - தா.க.அனுராதா

உலகம் விளக்கமுற உதிக்கின்ற ஞாயிறு போல் உள்ளங்களில் விளக்கேற்றியவர் வள்ளுவர். வாசுகி என்னும் கற்புக்கரசியை மணந்து இல்லறமெனும் நல்லறத்தை உலகிற்கு உணர்த்திய உத்தமர்.

ஆணும், பெண்ணும் லயமும் சுருதியும் போல், சுடரும் கதிரும் போல், மலரும் மணமும் போல் இருவர் வாழ்வும் ஒன்றுபட்டு, ஒருவரை ஒருவர் நன்கறிந்து, நயம்பட அன்பாய் வாழ்வு நடத்துவதுதான் இல்லறம். காதல் இருவர் கருத்தொருமித்து ஆதரவுபட்டு வாழ்வதுதான் இல்வாழ்க்கை.

இல்வாழ்க்கைப் பண்பும் பயனும்

இல்வாழ்க்கையின் ஆணிவேரான பண்பு அன்பு; அதன் பயன் அறம். அறவழியில் இல்லறம் நடத்துபவரே உலகில் வாழ முயலும் அனைவரிலும் தலை மகனாவார்.
  
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது

- - - (குறள் 45)

என்கிறார் வள்ளுவர்.

வள்ளுவர் காட்டும் இல்லற மாண்பு - வே.இராஜா

வள்ளுவர் பெண்கட்கு மதிப்பளித்தார். மகளிர் பிறரால் கட்டுப்படுத்தப்படுதலின்றி உரிமையுடன் வாழ வேண்டுமென விரும்பினார். ஆயினும் இல்லத்தில் தலைமை ஆடவனுக்கே உரியது என அவர் எண்ணினார் என்பது பெண்வழிச் சேறல் என்னும் அதிகாரத்தினின்றும் புலனாகும்.

மனையும், மனைவியும்

தகுதி வாய்ந்த இல்லத் தலைவியையுடைய இல்லமே நல்லில்லமாக அமைதல் கூடும் என வள்ளுவர் கருதினார். ஒருவனின் மனைவியிடத்து மனைகேற்ற மாட்சி, இல்லறத்தை நன்கு நடத்தும் இயல்பு இல்லாவிடின் அவன் வாழ்க்கை செல்வம் முதலிய பிற பல நலன்களைப் பெற்றிருப்பினும் பயனற்றது. மனைவி சிறந்தவளாக இருந்தால் இல்லத்தில் ஒன்றும் இல்லாவிடினும் யாதும் உள்ளது போலாகுமென்றும் அவள் சிறந்தவளாக வாய்க்காவிடில் பிற வளங்களனைத்தும் இருப்பினும் யாதுமில்லாதது போலாம் என்றும் கூறுகிறார்.

இல்லறம் - வாழ்வியல் வெற்றிக்கு வள்ளுவம் - வ.வேம்பையன், அ.கோவலன்

நூல்கள் இருவகை. அந்தந்தக் காலத்திற்குள் ஏற்றவை; எக்காலத்திற்கும் ஏற்றவை (Book for the hour; Book for ever). நூல்களைக் கற்பதும் இருவகை. நூல் எழுதிய காலத்திற்குச் சென்று கற்பது; வாழும் காலத்திற்கு வந்து கற்பது. திருக்குறள் இரண்டாம் வகையைச் சார்ந்தது. அதனால்தான் 2000 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூலாய் வையகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

அமைப்பு முறை

திருக்குறள் நூலின் அமைப்பு முறையே நேற்றைய வாழ்வுக்கும் இன்றைய வாழ்வுக்கும் எதிர்கால வாழ்வுக்கும் வழிகாட்டும் நூல் என்பதை எடுத்துக் கூறுகிறது. பால்: அறம், பொருள், இன்பம். இயல் - அதிகாரம்: 1. அரசியல் 25, 2. இல்லறவியல் 20; 3. கற்பியல் 18; 4. நட்பியல் 17; 5 குடியியல் 13; 6. துறவறவியல் 13; 7. அமைச்சியல் 10; 8. களவியல் 7; பாயிரம் 4; 10. அரணியல் 2; 11. படையியல் 2; 12. பொருளியல் 1; 13 ஊழியல் 1 ஆக பால் 3; இயல் 13; அதிகாரம் 133; குறள் 1330.