22/02/2012

இராமாயணக் கணக்கு

எண்ணஞ்சு கால்சிரனை எண்பதுகா ணிச்சிரசன்
 எண்ணிமனம் கொல்கவென்று கூறியதேன்? -
 ஒண்ணுதலாய் ஆன "' நான்கு அரிய "' ஒன்பது
 தானெடுத்துப் போனதினால் தான்?

 சதாவதானி செய்குத்தம்பி பாவலர் இந்தப் பாடலைக் கூறி உடனிருந்தவர்களிடம் ""இது ஒரு இராமாயணக் கணக்கு; இதன் விடை என்னவென்று கூறுங்கள்'' என்று கேட்டார்.

அப்போது, உடனிருந்த அவரது மாணாக்கர்கள் விழிக்கலாயினர். பின் அவரே விடை கூறலானார்:

 எண்ணஞ்சு - நாற்பது
 எண்ணஞ்சு கால் சிரனை - பத்துதலை இராவணனை
 எண்பது காணி - ஒன்று
 எண்பது காணி சிரசன் - ஒருதலை இராமன்
 ஏன் கொல்ல எண்ணினான்?
 ஆன "' நாலு - "' வரிசையில் நான்காவது எழுத்து "சீ';
 அரிய "' ஒன்பது - "' வரிசையில் ஒன்பதாவது எழுத்து "தை';
 ஆன "' நாலு அரிய "' ஒன்பது - சீதை.
 சீதையை எடுத்துச் சென்றதுதான் என்றார்.

 இராமாயணக் கதையை நெடுங்கணக்கில் காட்டிய விந்தையை வியந்து நின்று பாராட்டினர் உடனிருந்தோர்.

 (வித்துவான் குமரேசப்பிள்ளை எழுதிய "செந்தமிழ் வளர்த்த செய்குத்தம்பி' நூலிலிருந்து... )

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை: