கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

நீதிநூல்கள்

நமது புலவர்கள் நமக்காக அருளிச் சென்ற நூல்களைப் பற்றிய விபரத்தை இந்த பகுதியில் சுருக்கமாகப்  பார்க்கலாம்.

ஆத்திச்சூடி
அவ்வையார் எழுதிய நீதிநூல்கள் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை
ஆகியவை. "ஆத்திசூடி அமர்ந்த தேவனை ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே' என்ற வரியுடன் துவங்கும் கடவுள் வாழ்த்துப் பாடலின் துவக்க வார்த்தையை இந்நூலுக்கு பெயராகச் சூட்டினர். "ஆத்தி' என்பதற்கு "விநாயகர்' என்றும் பொருளுண்டு. முழுமுதல் கடவுளான விநாயகரை குழந்தைகள் மிகவும் விரும்புவர். எனவே, குழந்தைகளுக்கு அறிவுரை வழங்கும் இந்தப் பாடலுக்கு "ஆத்திசூடி' என பெயர் சூட்டினர். இந்த நூலில் 109 நூற்பாக்கள் உள்ளன.
முத்தொள்ளாயிரம்
முத்தொள்ளாயிரம் என்ற நூல் சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பொதுவான நிலை பற்றி பாடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட எந்த மன்னருடைய பெயரும் இதில் இடம் பெறவில்லை. இந்தக் காப்பியத்தைப் படைத்தவர் பற்றிய விபரம் தெரியவில்லை. ஒரு நாட்டின் மன்னருக்கு 900 பாடல்கள் வீதம் 2700 பாடல்கள் இடம் பெற்றிருந்தன. ஆனால், கிடைத்ததோ 110 பாடல்கள் தான்.
சீவக சிந்தாமணி
சமண சமயத்தைச் சேர்ந்த திருத்தக்க தேவர் எழுதியது சீவக சிந்தாமணி. சீவகன் என்பவனின் வரலாற்றைக் கூறுகிறது. சத்திர சூடாமணி, சத்ய சிந்தாமணி ஆகிய வடமொழி நூல்களை தழுவி இக்காப்பியம் எழுதப்பட்டது. இதில் 13 இலம்பகங்கள் உள்ளன. "இலம்பகம்' என்பதற்கு "பேறு' என்று பொருள். ஒவ்வொரு இலம்பகமும் காப்பிய பாட்டுடைத் தலைவன் சீவகன் அடைந்த ஒரு பேற்றை விளக்குகிறது. காந்தருவதத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகிய எட்டுப் பெண்களை இந்நூலின் கதாநாயகனானசீவகன் மணம் செய்து கொண்டான். அதனால், இதற்கு "மணநூல்' என்ற சிறப்புப்பெயரும் உண்டு. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய வாழ்வில் அடைய வேண்டிய முக்கியப் பொருட்களைப் பற்றி இந்நூலில் சொல்லப்பட்டுள்ளது. எனவே இதை "முடி பொருள் தொடர்நிலைச் செய்யுள்' என்றும் சொல்வர். இந்நூலின் காலம் பத்தாம் நூற்றாண்டு ஆகும். அன்றைய அரசியல், ஆட்சியியல்,  கற்பு வாழ்க்கை, களவு வாழ்க்கை, நாட்டு வளம், நகர் வளம் ஆகியவற்றை விளக்கும் இந்நூல் ஒரு சமுதாய நூலாக விளங்குகிறது.  ""கிரேக்க மொழியில் உள்ள இலியட், ஒடிசி காப்பியங்களுக்கு இணையானது,'' என வெளிநாட்டு தமிழ் ஆர்வலர் ஜி.யு.போப் இக்காப்பியத்தை பாராட்டியுள்ளார். தேம்பாவணி என்னும் காவியம் படைத்த வீரமாமுனிவர், இந்நூல் ஆசிரியர் திருத்தக்க தேவரை "தமிழ்ப் புலவர்களில் தலைமை சான்றவர்' என புகழ்ந்துள்ளார்.  இக் காப்பியத்திற்கு உரை எழுதியவர் நச்சினார்க்கினியர் என்னும் புலவர் ஆவார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ