கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

ஆண்டுக்கொரு பாட்டு மொத்தம் 3000 பாட்டு

பன்னிரு திருமுறைகளில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ள நூல் திருமந்திரம். இந்நூலை எழுதியவர் திருமூலர். இவர் நாயன்மார்களில் ஒருவராகவும், சித்தர்களில் ஒருவராகவும் இருக்கிறார். இதில் 3000 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. தமிழ் இலக்கிய வரிசையில், சைவ சமயக்கருத்துக்களை விளக்கமாக எடுத்துக்கூறும் முதல் நூல் இதுவே. இந்நூலுக்கு திருமந்திரமாலை, தமிழ் மூவாயிரம் என்ற பெயர்களும் உண்டு. இதில் தந்திரங்கள் என்னும் ஒன்பது உட்பிரிவுகள் உள்ளன. ""ஐந்து கரத்தனை யானை முகத்தனை'' என்று தொடங்கும் பாடலே கடவுள் வாழ்த்துப் பாடலாக அமைந்துள்ளது. இதில் "சைவ சித்தாந்தம்' என்னும் தொடர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கூடு விட்டு கூடு பாயும் திறம் படைத்த திருமூலர் ஒரு பசுவின் துன்பத்தைப் போக்குவதற்காக மாடு மேய்க்கும் இடையனின் உடம்பில் புகுந்து கொண்டதாகவும், ஆண்டுக்கொரு பாடல் வீதம் 3000 ஆண்டுகள் வாழ்ந்து திருமந்திரத்தை எழுதியதாகவும் கூறுவர். "ஒன்றே குலம் ஒருவனே தேவன்', "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்', "அன்பே சிவம்' " என்னை நன்றாக இறைவன் படைத்தனன்' "நடமாடக்கோயில் நம்பர்க்கொன்று கொடுங்கள் (நடமாடும் கோயிலான மக்களுக்கு உதவுங்கள்)' ஆகிய புகழ்பெற்ற பாடலடிகள் திருமந்திரத்தில் இடம்பெற்றுள்ளன.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ