கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

சூழ்ச்சிப்பாட்டு

கலம்பகம் என்றால் பல வகையான பொருள்களைப் பற்றி பலவகை பாடல்கள், பா இனங்கள் அமையப் பாடப்படும் நூல் ஆகும். ஒன்பதாம் நூற்றாண்டில் பாடப்பட்ட நந்திக்கலம்பகம் என்னும் நூல் காலத்தால் முந்தியது. இந்த நூலின் பாட்டுடைத்தலைவன் (கதாநாயகன்) மூன்றாம் நந்திவர்மன். இந்நூலை இயற்றியவர் யாரெனத் தெரியவில்லை. நந்திவர்மனின் தந்தைக்கு இரண்டு மனைவிகள். இவர்களில் மாற்றாந்தாயின் மகன் நந்திவர்மனைக் கொல்வதற்கு முயற்சி செய் தான். அவ்வாறு கொல்லும் முன் அவன் பாடிய நூல் இது என்பர். தன்னைக் கொல்வதற்கான சூழ்ச்சி நிறைந்த இந்தப் பாடல்களைக் கேட்டு விட்டு நந்திவர்மன் மனம் வருந்தி இறந்தான். கலம்பக நூல்களில் ஒரு சிறப்பு உண்டு. கடவுளைக் குறித்து 100 பாடல்கள், முனிவர்களுக்கு 95, மன்னனுக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, அவர்களுக்கு பிற்பட்டவருக்கு 30 என்ற அளவில் இருக்கும். கலம்பக நூல்களில் இரட்டையர்கள் எழுதிய தில்லைக் கலம்பகம், குமர குருபரர் எழுதிய மதுரைக் கலம்பகம், பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் எழுதிய திருவரங்கக் கலம்பகம் ஆகியவை புகழ் பெற்றவை.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ