கயத்தியும் கயவனும்! - சி.பொன்ராஜ்

நாடகங்களிலும், திரைப்படங்களிலும் எதிர்வினை புரிகிற மாந்தர்களை ‘வில்லி, வில்லன்’ என்று ஒரு நூற்றாண்டு காலமாகச் சொல்லி வருகிறோம். நம் வாழ்விலும் நல்ல செயல்கள் நடப்பதைத் தடுப்பவர்களை அப்படித்தான் குறிப்பிடுகிறோம். ஆங்கிலச் சொற்களான வில்லிக்கும், வில்லனுக்கும் ஏற்ற தமிழ்ச் சொற்கள் எவை என யோசித்தால், பெண்பாற் பெயர்களாக பாதகத்தி, சண்டாளி, கொடியவள் என்றும்; ஆண்பால் பெயர்களாக சண்டாளன், கொடியவன் என்றும்... இன்னும் பிறவும் உள்ளன. ‘கயவன்’ என்கிற சொல் ஏற்கெனவே வழக்கில் உள்ளது. இதனை வில்லனுக்கு ஏற்ற சொல்லாகக் கொள்ளலாம். வில்லிக்கு ஏற்ற சொல்லாகக் ‘கயத்தி’ யைச் சொல்லலாம். இச்சொல்லை கம்பர் பதிவு செய்துள்ளார். அப்பாடல் வருமாறு: “தோய் கயத்தும், மரத்தும், மென்சிறை  துள்ளி, மீது எழுபுள் எலாம்  தேய்கை ஒத்த மருங்குல் மாதர்  சிலம்பின் நின்று சிலம்புவ  கேகயத்து அரசன் பயந்த விடத்தை  இன்னது ஓர் கேடுசூழ்  மா கயத்தியை, உள்கொதித்து  மனத்து வைவன போன்றவே!”  (கைகேயி சூழ்வினைப் படலம்-229)  “கேகயத்து அரசன் பெற்ற விடத்தைப் (விஷத்தை) போன்று கேடு செய்யும் இழிந்தவளான கைகேயியை மனம் கொதித்து மனதுக்குள்ளே தூற்றி வைவன போல இர

இன்னா நாற்பது - சாமி. சிதம்பரனார்

     மக்களுக்குத் துன்பந்தருவன இவை என்று கூறும் நாற்பது
வெண்பாக்கள் இந்நூலில் உண்டு. இதனாலேயே இதற்கு இன்னா நாற்பது
என்று பெயர் வைத்தனர். இந்நூலில் வெண்பாக்கள் ஒவ்வொன்றிலும்
இன்னா என்னும் சொல் திரும்பத் திரும்ப வருகின்றது. இன்னா-துன்பம்.

    இன்று இந்நூலில் காணப்படும் செய்யுட்கள் 41. ஒரு செய்யுள் கடவுள்
வாழ்த்து. அது சிவன், பலராமன், திருமால், முருகன் நால்வரையும்
வணங்காதார் துன்பம் அடைவார் என்று கூறுகின்றது. இக்கடவுள் வாழ்த்துப்
பாட்டு நூலாசிரியாரல் பாடியிருக்க முடியாது. இவ்வாழ்த்தும் நூலோடு
பிறந்ததாயிருந்தால் ‘‘இன்னா நாற்பது’’ என்ற பெயர்
வைத்திருக்கமாட்டார்கள்.

    இந்நூலாசிரியர் கபிலர். இப்பெயர் படைத்த புலவர்கள் பலர்.
அவர்களுள்  இந்நூலாசிரியர் எக்கபிலர் என்று துணிந்துகூற முடியவில்லை.


    சங்கப் பாடல்களிலே கபிலரது பாட்டு என்றால் அதற்கொரு தனிச்
சிறப்பு. பாட்டின் சிறப்புக்கு உதாரணமாகக் கபிலரது பாட்டை எடுத்துக்
கூறுவது பழந்தமிழ்ப் புலவர்கள் வழக்கம். பத்துப் பாட்டிலே குறிஞ்சிப்
பாட்டைப் பாடியவர் கபிலர். ஐங்குறு நூற்றிலே  மூன்றாம் நூறு கபிலர்
பாடியது. பதிற்றுப்பத்திலே 7-வது பத்து கபிலர் இயற்றியது.கலித்தொகையிலே
குறிஞ்சிக்கலி கபிலர் செய்தது. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு,
புறநானூறு முதலிய நூல்களிலும் இவருடைய பாடல்கள் பல உண்டு.
இக்கபிலர் அந்தணர், பாரியின் நண்பர். மாமிச உணவு உண்டவர்.
புறநானூற்றில் 14-வது பாடல் இவர் பாடியது. அதில் இவர் மாமிச உணவு
உண்பவர் என்பதைக் குறிப்பிட்டிருக்கின்றார்.

சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் என்னும் அரசனைக் காணச் சென்றார் கபிலர். அவன் கபிலர்க்குக் கைகொடுத்து வரவேற்றான். கபிலர் கை, பூப்போல மென்மையாக, வழவழ வென்றிருந்ததை உணர்ந்தான் ஆதன். ‘‘என் கை மட்டும் கடினமாக இருக்கிறது. உன் கை மென்மையுடன் இருப்பது
ஏன்?’’ என்றான் ஆதன். ‘‘உன் கை, குதிரையின் கடிவாளத்தைப் பிடிக்கும்
கை; கணையை எடுத்து வில்லிலே தொடுத்துவிடும் கை; இரவலர்க்கு நல்ல அணிகலன்களை அள்ளி வழங்கும் கை; ஆகையால் காய்ச்சிப் போய்க் கரடு முரடாக இருக்கின்றது. என் கை நன்றாகச் சமைத்த ஊனையும் துவையலையும், கறியையும், சோற்றையும் அள்ளி அள்ளி உண்ணுகின்ற கைஉண்ட சோறு செரிமானம் ஆகவில்லையே என்று வருந்தி வயிற்றைத்
தடவிக்கொண்டிருக்கும் கை. ஆகையால் உன் கை கடினம்; என் கை
மென்மை’’ என்று கூறினார். இதனால் சங்ககாலக் கபிலர் புலால் உணவை
வெறுத்தவர் அல்லர் என்று காணலாம்.

இன்னாநாற்பதில் புலால் உணவு வெறுக்கப்படுகின்றது.

‘‘புலைஉள்ளி வாழ்தல் உயிர்க்கு இன்னா

புலால் உணவை விரும்பி வாழ்வது மக்கள் உயிர்க்குத் துன்பம்
தருவதாகும்’’ (பா.13)

‘‘ஊனைத்தின்று ஊனைப்பெருக்குதல் முன்இன்னா

மற்றொரு உயிரின் ஊனைத் தின்று, தன் உடம்பை வளர்த்தல்
துன்பமாகும்’’ (பா.23)

என்பவை புலால் உணவைக் கடிந்து கூறும் பகுதிகள். ஆதலால் இவர்
பாரியின் நண்பராக வாழ்ந்த அந்தக் கபிலராக இருக்க முடியாது.

கபிலர் அகவல் என்னும் நூல் ஒன்று உண்டு. அது சாதி வேற்றுமையை
வன்மையாகக் கண்டிப்பது. சங்க நூல்களின் கருத்துக்களுக்கு மாறாக,
ஆரியர்களே, நால்வகைச் சாதிப் பிரிவினையை இந்நாட்டிலே
புகுத்தியவர்கள் என்று கூறுகின்றது. அது பிற்காலத்திலே எழுந்த நூல்.
கபிலர் அகவல் பாடிய கபிலர், சாதி வேற்றுமையை ஒத்துக்கொள்ளாதவர். இன்னாநாற்பது பாடிய கபிலர் சாதி என்று சொல்லாவிட்டாலும் குடிப்பிறப்பில் உயர்வு தாழ்வு உண்டு என்று ஒத்துக்
கொள்ளுகிறார்.

‘‘குலத்தில் பிறந்தவன் கல்லாமை இன்னா

உயர்ந்த குலத்திலே பிறந்தவன் கல்வி கற்காமல் இருப்பது அவனுக்குத்
துன்பமாகும்”.

‘‘குலம் இல்வழிக் கலத்தல் இன்னா

நல்ல குலம் இல்லாத குடியிலே மணம் செய்து கொள்ளுதல் துன்பம்
தரும்’’

இவைகள் இன்னாநாற்பதில் உள்ளவை. இவைகள் பிறப்பிலே உயர்வு
தாழ்வு உண்டு என்பதை ஒத்துக் கொள்ளுகின்றன. ஆதலால் இக்கபிலர்
சங்ககாலக் கபிலரும் அல்லர். கபிலர் அகவல் பாடிய கபிலரும் அல்லர்,
வேறு யாரோ ஒரு கபிலர். இவர் வரலாறு தெரியவில்லை.

செய்யத் தகாதவை

இன்னா நாற்பதில் கூறப்படும் நீதிகள் மிகவும் சிறந்தவை.
இக்காலத்திற்குப் பொருந்தாதவை சில காணப்படலாம். பெரும்பாலான
கருத்துக்கள் மக்களுக்கு அறிவையும்,
அறத்தையும் போதிப்பவை. அவைகளில் சிலவற்றைக் காண்போம்.

 ‘‘பொருள் உணர்வார் இல்வழிப் பாட்டுஉரைத்தல் இன்னா;
இருள்கூர் சிறுநெறி தாம்தனிப் போக்கு இன்னா;
அருள் இலார் தம்கண் செலவு இன்னா; இன்னா
பொருள் இலார் வண்மை புரிவு.

பாட்டின் பொருளை அறிந்து சுவைக்கும் அறிவுள்ளவர் இல்லாத
இடத்தில் செய்யுளைக் கூறுதல் துன்பம். இருள் நிறைந்த சிறிய வழியிலே
தனியே செல்லுதல் துன்பம். இரக்கமில்லாதவரிடம் சென்று ஒன்றைக்
கேட்பதுதுன்பந்தரும். செல்வம் இல்லாதவர் பிறருக்குப் பொருள்
கொடுக்கவிரும்புதல் துன்பந்தரும்’’ (பா.11)

  ‘‘பெரியாரோடு யாத்த தொடர்விடுதல் இன்னா;
அரியவை செய்தும் எனஉரைத்தல் இன்னா;
பரியார்க்குத் தாம்உற்ற கூற்றுஇன்னா; இன்னா
பெரியார்க்குத் தீய செயல்.

பெரியாரோடு கொண்ட நட்பை விடுவது துன்பம். தம்மால் செய்ய
முடியாத காரியங்களைச் செய்து முடிப்போம் என்று கூறுவது துன்பமாகும்.
தம்மிடம் அன்பில்லாதவர்பால் தாம் அடைந்த துன்பத்தை உரைத்தல்
துன்பமாகும். பெருமையுள்ளவர்க்குத் தீமை துன்பமாகும்’’ (பா.25)

இந்த இரண்டு பாடல்களில் உள்ள அறங்கள் சிறந்தவை; என்றும்
மக்களால் பின்பற்றக்கூடியவை.

பழக்க வழக்கங்கள்

பண்டைத் தமிழகத்தில் இருந்த பழக்க வழக்கங்கள் சிலவற்றையும்
இந்நூலிலே காணலாம். பண்டைத் தமிழ் மக்கள் கொண்டிருந்த
நம்பிக்கைகள் சிலவற்றையும் காணலாம்.
‘‘பார்ப்பார் இல் கோழியும்நாயும் புகல்இன்னா

பார்ப்பார் வீட்டிலே கோழியும் நாயும் நுழைவது துன்பம் தரும்’’.                 (பா.3) பார்ப்பார்கள் கோழியையும் நாயையும் அருவருத்தனர். இரண்டும் மலந்தின்பவை; ஆதலால் அவைகள் வீட்டில் நுழைந்தால் ஆசாரத்திற்குக் குறைவு என்று கருதினர்.

‘‘இன்னா ஒத்துஇலாப் பார்ப்பான் உரை.

வேதத்தை ஓதாத பார்ப்பான் அறிவில்லாதவன். ஆதலால் அவன் கூறுவதை நம்பினால் துன்பந்தான்’’.(பா.22)

இவைகள் பார்ப்பாரைப் பற்றி கூறப்பட்டிருப்பவை.

‘‘இன்னா காப்பாற்றா வேந்தன் உலகு

குடிகளைக் காப்பாற்றாத வேந்தன் உள்ள நாட்டிலே வாழ்வது
துன்பந்தரும்’’                                            (பா.3)
‘‘கொடுங்கோல் மறமன்னர் கீழ்வாழ்தல் இன்னா

கொடுங்கோல் செலுத்தும், கொலைத் தொழிலையுடைய மன்னர்களின்

ஆட்சியின் கீழே வாழ்வது துன்பம்’’.                   (பா.4)

‘‘முறை யின்றிஆளும் அரசு இன்னா

நீதியில்லாமல் ஆளுகின்ற அரசாட்சியின் கீழ் வாழ்வது துனபந்தரும்’’.         (பா.6) இவைகள் அரசு முறையைப் பற்றிக்கூறியவை.

திருவுடை யாரைச் செறல் இன்னா

செல்வம் உள்ளவரைப் பகைத்துக் கொள்வதனால் துன்பம்
வரும்’’                       (பா.5)

அக்காலத்திலே செல்வர்களுக்கே சமுதாயத்தில் மதிப்பு
மிகுதி.அவர்களைப் பகைத்துக்கொண்டால் அவர்களால்
எந்தத் தீமையையும் செய்யமுடியும். ஆதலால் அவர்களுக்கு அடங்கியே
வாழவேண்டும் என்று நம்பினர்.

‘‘குறி அறியான் மாநாகம் ஆட்டுவித்தல் இன்னா

பாம்பாட்டுவதற்குரிய மந்திரம் முதலியவற்றை அறியாதவன்
பெரியபாம்பை ஆட்டுவது துன்பந்தரும்’’ (பா.30)

பாம்புகளை மந்திரத்தால் ஆட்டுவிக்கலாம் என்ற நம்பிக்கை பண்டைக்
காலத்திலும் இருந்தது என்பதைக் காட்டுகின்றது இது.

‘‘ஒடுங்கி அரவு உறையும்இல் இன்னா

பாம்பு பதுங்கியிருக்கின்ற வீட்டில் வசிப்பது துன்பந்தரும்’’. (பா.31)

சில கிராமங்களில் பழைய வீடுகளிலே பாம்பு உண்டு. அதை
மனைப்பாம்பு என்பர்; அடிக்கக்கூடாது என்றும் கூறுவர். இது மூடநம்பிக்கை இந்த நம்பிக்கையைக் கண்டிக்கின்றது இது.

இவ்வாறு பல நீதிகளை இந்நூலிலே காணலாம். ஒவ்வொரு
வெண்பாவிலும் நான்கு நான்கு நீதிகள் கூறப்பட்டிருக்கின்றன. இந் நீதிகளில் பல நெஞ்சில் நிலைத்திருக்க வேண்டியவை.

கருத்துகள்

Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த ஒவ்வொரு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இந்த ராஜா முக்கியத்துவம் தெரியும்.
Unknown இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த ஒவ்வொரு பயனுள்ளதாக இருக்கும், ஏனெனில் இந்த ராஜா முக்கியத்துவம் தெரியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காமன் - அரிச்சந்திரன் பாடல்கள் ஒப்பீடு (மதுராந்தக வட்டம்) - முனைவர் பொன். சண்முகம்

நாட்டுப்புறக் கதைகள் விளக்கம் - வரையறை பாகுபாடு - திருமதி ப. பத்மினி

முத்தொள்ளாயிரம் - சில குறிப்புகள் - முனைவர் நா.இளங்கோ