10/03/2012

தமிழில் கடன் வாங்கிய சமஸ்கிருதம்

தொல்காப்பியர் காலத்தில் தமிழில் புகும் வடசொற்களை எவ்வாறு எழுத வேண்டும் என்னும் வினா எழுந்தது. அவர் காலத்திய பாலி பிராகிருத மொழிகளில் சமற்கிருதச் சொற்கள் மிகுதியாய்ப் புகுந்தன. கி.மு.இரண்டாம் நூற்றாண்டுக் காலத்தில் புசிய மித்திர சுங்கன் என்னும் பார்ப்பன மன்னன் இராமாயண, பாரதங்களைத் தென்னாட்டில் பரப்பிய காலத்தினால்தான் சமற்கிருதச் சொற்கள் தமிழில் புகத் தொடங்கின.

எனவே தொல்காப்பியர் காலத்தில் தமிழில் சமற்கிருதச் சொற்கள் புகுந்தன என்பதும் நம்பத்தக்கதன்று. வேதவேள்விகளைத் தொல்காப்பியர் குறிப்பிடாததாலும் கி.மு.800 காலத்திற்குப் பிறகே வேதவேள்விப் பார்ப்பனர் விந்திய மலையைக் கடந்து தெற்கே வந்தனர் என்பதாலும் சேர நாட்டிற்கு வந்த காலம் கி.மு.6 ஆம் நூற்றாண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது.


வேதவேள்விப் பார்ப்பனர் தென்னாட்டுக்கு வரமுற்படாத கி.மு.எட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு அதாவது கி.மு. 9 ஆம் நூற்றாண்டில் தொல்காப்பியர் வாழ்ந்திருக்க வேண்டும்.

பாலி, பிராகிருத மொழிகளின் வாயி லாகத் தமிழில் புகுந்த சொற்களையே வடசொற்கிளவி எனத் தொல்காப்பியர் குறிப்பிட்டிருக்கிறார். அவர் நீக்கச் சொன்ன வடவெழுத்துகள் எவை எனக் குறிப்பிட்டுக்காட்டவில்லை.

தொல்காப்பியர் காலத்திய எழுத்துக்கள்

தொல்காப்பியர் காலத்தில் இந்தியா முழுவதும் வழங்கிய ஒரே எழுத்துமுறை தமிழி எனப்பட்டது. அசோகனும் தமிழி என்னும் தமிழ் எழுத்து களைத்தான் பிராமி என்னும் பெயரில் கடன் பெற்றான். ஆனால் பாணினி காலத்திற்கு முன்பே தமிழி எழுத்து களோடு வடமொழிக்கேயுரிய சிறப்பு எழுத்துகளுக்கு வரிவடிவம் உண்டாக் கினார்கள். அசோகன் அந்த வட மொழி எழுத்துகளிலும் சிலவற்றை  கடன் பெற்றான். அவ்வாறு பாலி பிராகிருத மொழியினர் வாயிலாகக் கடன் பெற்றுத் தமிழி எழுத்துகளோடு சேர்த்துக் கொள்ளப்பட்டவற்றையே தொல்காப்பியர் வடஎழுத்து என்றார். அவை வருமாறு:-

1.மெய்களில் 2,3,4 வருக்க எழுத்துகள்

,,,, என்னும் முதல் வருக்க எழுத்துகளைத் தமிழிலுள்ளவாறு எவ்வித மாற்றமுமின்றி எடுத்துக் கொண்டனர்.

2. உயிரெழுத்துகளில் எகர ஒகரக் குறில்களை நீக்கிவிட்டு ர்ரு, அம், அஹ சேர்த்துக் கொண்டனர்.

3. ஆய்த எழுத்தை என்னும் எழுத்தாக மாற்றிக் கொண்டனர்.

4. , , க்ஷ, க்ர, த்ர, க்ரு, ஸ்த, ல்ப போன்ற புதிய வரிவடிவங்களைச் சேர்த்துக் கொண்டனர்.

5. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியில் லாது நீக்கி விட்டனர். மெல்லின மெய்யெழுத்துகளை மட்டும் மேற் புள்ளியாக வைத்துக் கொண்டனர். இஃதொன்றே மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடும் வழக்கத்தை அவர்களும் ஒரு வகையில் ஏற்றுக் கொண்டதைக் காட்டும்.

6. மெய்ம்மயக்கமாக வரும் இடங் களில் தமிழ் எழுத்து முறையில் க்க, த்த என வரிசையாக எழுதும் முறையைத் தவிர்த்து,

த்    க்    ல்    க்    த்    ஸ்
                   

என ஒன்றின் கீழ் ஒன்றாக கோத்து எழுதும் முறையை உண்டாக்கினர். இதனால் மெய்யெழுத்துகளுக்கு மேற்புள்ளியிட வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது. வடநாடு முழுவதும் வழங்கிய தமிழி (வடதமிழ்- - பிராமி) எழுத்தில் இந்த மாற்றம் புகுந்ததால் தென்னாடு வந்த சமணமும் பவுத்தமும் புள்ளி  வைக்காமல் எழுதும் பழக்கத்தைத் தென்னாட்டில் புகுத்தினர்.

இந்த வரலாறு தெரியாதவர்கள் தென்னாட்டுக் குகைக் கல்வெட்டுகளில் மெய்யெழுத்து ஏன் புள்ளி பெறவில்லை என, வேண்டாத ஆராய்ச்சி செய்கிறார்கள். இதைப்போய் வேலை மெனக்கெட்டு ஆராய்வதா? பிச்சைக்காரன் தேசிய உடையமைப்பை ஆராயலாமா? என்று இவர்கள் ஒரு நொடியும் நினைத்துப் பார்க்கவில்லை.

மேற்கண்ட ஆறுவகைகளையும் தொல்காப்பியர் வடஎழுத்து எனப்பொதுவாகக் குறிப்பிட்டார். வணிகம், அரசியல், சமயம் பழந் தொடர்பு காரணமாகப் பாலி, பிராகிருதச் சொற்கள் தமிழில் பெயர்த்து அதர்ப்பட யாத்தலைப் பற்றியும் கூறுவதால் வடசொற்களைத் தமிழாக்குவது மொழிப்பெயர்ப்பாளர்க்கு தேவையாயிற்று மூவேந்தரை வண்புகழ் மூவர் எனக் குறிப்பிட்டதால் மூவேந்தரும் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்த காலத்தில் தொல்காப்பியர் வாழ்ந்திருக்கிறார். எனவே ஒற்றர் களுக்கும் தூதுவர்க்கும் வடசொற்கள் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் நிலவியது.

ஊர்ப்பெயர் இயற்பெயர்களில் வரும் வடசொற்கள், லக்ஷ்மணன்--- இலக்குவன் என்றாற்போன்று எழுத்தோடு புணர்ந்த சொல்லாக்கப்பட வேண்டும் என்றார்.

எழுத்தோடு புணர்ந்த சொல்

வடவெழுத்தை நீக்கியபின் எவ்வாறு தமிழ் எழுத்தில் எழுத வேண்டும் என்பதை எழுத்தொடு புணர்ந்த சொல் எனும் தொடரால் விளக்குகிறார். தக்ஷிணம் என்பதற்குத் தக்கணம் என எழுதினார் க்ஷ எழுத்துக்கு க்க எழுத்தோடு புணர்ந்த சொல்லாகிறது விக்ரமன்என்பதில் க்ர என்பதுக்கு க்கிர என்பதொடு புணர்ந்து சொல்லாகிறது. எழுத்தோடு புணர்ந்து சொல்லாக மாற்றாவிட்டால் வடமொழிக்குரிய எழுத்துகளே சொற்களில் புகுந்துவிடும்: தீங்குநேரும் ஒருமொழி வேற்றுமொழிச் சொற் களைக் கடன்பெற்றாலும் வேற்று மொழி எழுத்துக்களை எக்கார ணத்தைக் கொண்டும் உள்ளே புகவி டலாகாது. இது தலையாய தமிழ்காப்பு முயற்சி என்பதை தொல்காப்பியர் தெளிவாக்கிவிட்டார்.

இன்றைய தமிழில், , , , போன்றவற்றைப் பயன்படுத்துவது தொல்காப்பிய நெறிமுறைக்கு முற்றிலும் மாறானது. கல்லாத மக்களும் ராஜா என்பதை ராசா என்று எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்குகிறார்கள். கல்லாத மக்களுக்கு இருக்கும் தெளிவு கூட, படித்த தமிழர்களுக்கு இல்லாதது நாணத்தக்கது.

பாணினிக்கு முன்பே, புகுத்தப்பட்ட வடஎழுத்துகள்

இந்தியா முழுவதும் பரவியிருந்த தமிழ் எழுத்துகளில் , , , , என்னும் அய்ந்து எழுத்துக்களை நீக்கிப் புதிய எழுத்துகளை கி.மு.12 ஆம் நூற்றாண்டிலேயே சமற்கிருதப் புலவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். மெய்யெழுத்துகளுக்குப் புள்ளியிடுவதை நீக்கிய எழுத்துமுறையைப் பாலி, பிராகிருத மொழிகளில் திணிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

நச்சினார்க்கினியரின் வழுவுரை
வடசொற்கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே (தொல்.சொல்.401)

எனும் நூற்பாவினை நச்சினார்க் கினியர் சரியாக விளங்கிக் கொள்ள வில்லை. அவருடைய உள்ளம் பாணினி யின் இலக்கண உள்ளத்தில் ஊறிப் போய்விட்டது. தத்பவம் தத்சமம் எனும் இலக்கணக் கூறுகளை இதில் பொருத்திப் பார்த்துத் தவறா விளக்கம் தந்திருக்கலாம்.

அகர நிரலில்--------------------------
எழுத்தினை நீக்கி.............................................

எனும் தமிழ் எழுத்தால் எழுத வேண்டும் என்பது தொல்காப்பியர் கருத்து, அதைவிடுத்து இருமொழிக்கும்  பொதுவான எழுத்துகளால் (தத்சமம்) ஆன மணி, மானம், லீலா................................ எனும் சொற்களை மேற்கோளாக எடுத்துக் காட்டிய நிலை தவறு, தொல்காப்பியத்தைப் பதிப்பித்த, இலக்கணச் செம்மல் இளங்குமரன் போன்றோரும் இதற்குத் தகுந்த அடிக்குறிப்பு எழுதி மறுக்காதது ஏன் என்று தெரியவில்லை.

சிதைந்தன வரினும் இயைந்தன வரையார்

(தொல்.சொல்.302)

எனும் நூற்பாவை நச்சினார்க் கினியர் தவறாகப் புரிந்து  கொண்டி ருக்கிறார். பங்கயம், இருடி, இராமன், சிங்கம் போன்றவற்றைச் சிதைந்தன வாகக் காட்டுவது தவறு. இவை எழுத்தொடு புணர்ந்த சொல்லாகும் என்ற நூற்பாவில் மேற்கோளாகக் காட்டாத்ததக்கவை. பாகதம் என்னும் பிராகிருதச் சொற்களைத் தொல் காப்பியர் சிதைந்தன என்கிறார். வசிஷ்டி எனும் சமற்கிருதச் சொல் பாகதம் என்னும் பிராகிருதத்தில் வசிட்டி எனத் திரியும். இதைத்தான் தொல்காப்பியர் சிதைந்தன எனக் குறிப்பிடுகிறார்.

சமற்கிருதச் சொற்கள் நேரடியாகத் தமிழில் புகும்போது எழுத்தொடு புணர்ந்த சொல்லாக்க வேண்டும் என்பதும், வடதமிழ் எனவும் பாகதம் எனவும் கூறப்படும் பிராகிருதத்தில் முன்பே அம்மொழி மரபுக்கேற்ப எழுத்தொடு புணர்ந்த தமிழ்மரபு வகையில் திரிந்தவற்றைச் சிதைந்தன வரினும் எனவும் தொல்காப்பியர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

சிதைந்தவனவற்றில் இயைந்தன ஏற்கலாம் எனத்தொல்காப்பியர் கூறியிருக்கிறார். சமற்கிருதச் சொற்கள் பிராகிருதத்தில் திரிந்தாலும் அத்திரிபுகள் சில தமிழ்மரபுக்குப் பொருந்தனவாக இருக்கும்.


தமிழ்    பிராகிருதம்    சமற்கிருதம்
மாலை    மாலா        மாலா


ஐகார ஈற்றுச் சொல் ஆகார ஈறாகத் திரிவது தமிழ்மரபன்று, எனவே மாலையை- மாலா என்பது சிதைந் தனவற்றில் இயைந்தன வல்ல.

(நன்றி: செந்தமிழ்ச்செல்வி, மார்ச்சு 201-0)

கருத்துகள் இல்லை: