13/03/2011

புதல்வன் தாய் - நா. கருணாமூர்த்தி

சங்க இலக்கியங்களில் குறிப்பாக அக இலக்கியங்களில் ''புதல்வன் தாய்'' என்ற சொல்லாட்சியைக் காணமுடிகிறது.

''எம்இல் பெருமொழி கூறி தம்இல்

கையும் காலும் தூக்கத் தூக்கும்

ஆடிப்பாவை போல

மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே'' (குறுந். 8)

என்ற பாடலில் இடம் பெற்றுள்ள ''தன் புதல்வன் தாய்க்கே'' என்ற தொடருக்கு மேலோட்டமான பொருளே இதுகாறும் சொல்லப்பட்டு வந்துள்ளது.

பரத்தை தலைவனின் செயலை ஆடிப்பாவைக்கு ஒப்பிட்டு பேசுவதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாடலில் மருத நில ஒழுக்கமான ஊடல் உரிப்பொருளாக அமைந்துள்ளது.

பெரும்பாலும் மருத, நிலப்பாடல்களிலேயே ''புதல்வன் தாய்'' என்ற அடைமொழி அமைந்திருப்பதைக் காணலாம்.

''குறுங்காற்கட்டில் நறும்பூச் சேக்கை

பள்ளியறையின் உயிர்த்தனன் ஆசை

புதல்வற் தழீஇயினன் விறலவன்

புதல்வன் தாய் அவன்புறம் கவைஇயினளே'' (குறுந்.359)

மலர்ப்படுக்கையில் தலைவன் தன்னுடைய புதல்வனைத் தழுவியவாறு களிற்றைப் போலப் பெருமூச்செறிந்து கிடந்தான். புதல்வனின் தாயாகிய தலைவியானவள் புதல்வனைத் தழுவிக் கிடக்கும் தன் கணவனின், புறத்தைக்

விருந்து எதிர் கொள்ளவும், பொய்ச் சூள் அஞ்சவும்

அரும்பெரும் புதல்வனை முயங்கக் காணவும் கலி - 75

இப்பாடலிலும் இரண்டு செய்திகள் புலப்படுகின்றன. ஒன்று பரத்தையிடம் சென்றுவந்த தலைவன் தன் புதல்வனைத் தழுவிக்கொண்டு பொய்த்துயில் கொள்கின்றான் என்பதாகும்.

தனது தந்தையின் பெயரைத் தாங்கியுள்ள புதல்வனைத் தழுவிக் கொண்டிருக்கிறான் என்பதே இங்கு சிறப்புக்குரியதாகும்.

தாத்தா பெயரை பேரனுக்கு வைப்பது மரபல்லவா! எனவே வாரிசு என்பது இங்கு நிலைநாட்டப்படுகிறது.

இரண்டு, விருந்து எதிர் கொள்ளவும் என்பதாகும். வீட்டுக்கு விருந்தாக வருபவர்களைப் போற்றிப் பேணுவதையே உயர்ந்த வாழ்க்கை நெறியாகக் கொண்ட மகளிர் நிலையை சிலம்பு எடுத்துரைக்கின்றது.

''வருவிருந்து ஓம்பி மனை அறம் முட்டாப்

பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ்வு எய்தி''

என்றும் (சிலம்பு 22, 132).

விருந்தொடு புக்க பெருந்தோள் கணவரொடு

உடன் உறைவு மரீஇ ஒழுக்கொடு புணர்ந்த

வடமீன் கற்பின் மனை உறை மகளிர்''

(சிலம்பு 5: 227-229)

என்றும் சிலம்பு குறிப்பிடுகின்றது.

''வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்''

என்ற மரபும் இங்குக் கவனிக்கத் தக்கதாகும். கையகத்து வளைத்துக் கொண்டாள். அன்பின் அடையாளம் மட்டுமா இப்பாடலின் பொருள்?

''நெருநல் ஆடினை புனலே இன்று வந்து

ஆக வனமுலை அரும்பிய அணங்கின்

மாசுஇல் கற்பின், புதல்வன் தாய் - என

மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி எம்

முதுமை எள்ளல்'' (அகம். 6)

பரத்தையிடம் இன்பம் அனுபவித்து வந்த தலைவனிடம் தலைவி ஊடல் கொண்டு கூறுவதாக இப்பாடல் அமைகிறது.

இப்பாடல் இரண்டு செய்திகளை நமக்குத் தருகிறது. ஒன்று புதல்வன் தாயாகிய தலைவியின் முதுமை காரணமாகத் தலைவன் இளம் பரத்தையரிடம் சென்று வருகிறான் என்பது. இரண்டு இப்பாடலின் முன் அடி

''. . . . . . . . . . . . ஐயை தந்தை

மழைவளம் தரூஉம் மாவன் தித்தன்

பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கன்''

ஐயை என்னும் கற்பு நெறிசான்ற பெண்ணின் தந்தை என்பதால் தித்தன் நாட்டில் மழைவளம் பெருகிற்று என்பதாகும். இத்தொடர் வள்ளுவனின் ''பெய்யெனப் பெய்யும் மழை'' என்னும் தொடரை நினைவூட்டுகிறது. எனவேதான் தலைவன் தலைவியை ''மாசுஇல் கற்பின் புதல்வன் தாய்'' எனப் பாராட்டுகிறான்.

. . . . . . . . தான்தன்

முதல்வன் பெரும் பெயர் முறையுளிப் பெற்ற

புதல்வற் புல்லிப் பொய்த் துயில் துஞ்சும்

ஆங்கு

எனவே விருந்து என்பது உடைமையாளர்க்கே உரியது என நிலவுடைமைச் சமூகச் செயல்பாடாக மாறிவிடுகிறது.

''புதல்வன் சுவைஇய தாய் புறம் முயங்கி

நசையினன் வதிந்த கிடக்கை'' என்றும் (ஐங், 402)

''புதல்வன் கவையினன் தந்தை மென்மொழிப்

புதல்வன் தாயோ இருவரும் கவையினள்'' (ஐங், 409)

என்றும் ஐங்குறுநூறு குறிப்பிடுகின்றது. இவ்வரிகளுக்கு உரை எழுதிய ஆசிரியர்

''மக்கட்பேறு இல்லறத்தின் பயன் எனில்

அம்மக்களுள்ளும் ஆண் மக்கட்பேறு நனி சிறந்ததாகும். ஆண் வழிச் சமூகமாதலின் ஆண் மக்கட்பேறு விழையப்பட்டது'' என விளக்குகின்றார்.

சமூக இயங்கியலில் வேட்டைச் சமூகம் நாடோடி வாழ்க்கையுடையதாய்ப், பொதுமைப் பாலுறவு கொண்டதாய் இருந்தது. அதனால் ஒரு குழுவில் குழந்தைகளைப் பெற்றுக்கொடுத்த தாய் முதன்மையாகக் கருதப்பட்டாள். எனவே அது பெண் முதன்மைச் சமூகமாக இருந்தது.

பின்னர் வேளாண்மையைக் கற்றுக் கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டு நிலைத்த வாழ்வு வாழத் தொடங்கிய போது உடமைச் சமுதாயம் தோன்றியது.

தத்தமது உடைமையைக் காப்பாற்ற அல்லது நிலை நிறுத்த வாரிசு தேவைப்பட்டது.

பொதுமைப் பாலுறவில் ஆணின் வாரிசு அடையாளம் காணமுடியாத நிலையில் பொதுமைப் பாலுறவுக்கு மாறான குறிப்பிட்ட ஆணின் மனைவி அவன் மூலம் பிறக்கும் வாரிசு என்ற நிலை உருவாயிற்று. இதன் மூலம் ஆணின் அதிகாரம் நிலை நிறுத்தப்பட்டு ஆணாதிக்கச் சமூகமாக மாற்றம் பெறுகிறது. பின்னர் சமூக உற்பத்தியில் பெரும்பங்கு பெற்ற பெண் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்படுகிறாள். எனவே ''புதல்வன் தாய்'' என்பதே அவளுக்குரிய தகுதியாக மாறுகிறது எனலாம்.

 

கருத்துகள் இல்லை: