வடசொல் : தமிழ்ச் சொல்
கிரமம் ஒழுங்கு
கிராமம் சிற்றூர்
சக்தி ஆற்றல்
சகோதரன் உடன்பிறந்தான்
சந்நிதி திருமுன்(பு)
சபதம் சூளுரை
சந்தோஷம் மகிழ்ச்சி
ஜலதோஷம் நீர்க்கோவை
சாபம் கெடுமொழி
சிநேகம் நட்பு
சுத்தம் தூய்மை
சுபாவம் இயல்பு
சேவை தொண்டு
தாகம் வேட்கை
நிபுணர் வல்லுநர்
பகிரங்கம் வெளிப்படை
பரிகாசம் நகையாடல்
பந்தபாசம் பிறவித்தளை
பிரசாரம் பரப்புரை
மந்திரம் மறைமொழி
மிருகம் விலங்கு
முகூர்த்தம் நல்வேளை
யுத்தம் போர்
ரகசியம் மறைபொருள்
வயது அகவை
வாகனம் ஊர்தி
வாதம் சொற்போர்
விகிதம் விழுக்காடு
விக்கிரகம் திருமேனி அல்லது செப்புச் சிலை
வேதம் மறை
வேகம் விரைவு
ஜாதகம் பிறப்புக் கணக்கு
ஜெபம் தொழுகை
ஜென்மம் பிறவி
ஜோதிடன் கணியன்
ஸ்தாபனம் நிறுவனம்
úக்ஷத்ரம் திருத்தலம்
யாகம் வேள்வி
போகம் நுகர்வு
மோகம் விருப்பு
வழக்கில் வழுக்கியவை:
மக்கள் தம் பேச்சு வழக்கில் வழுக்கி (தவறாக) எழுதப்படும், சொல்லப்படும் சொற்களையும் சரியாக எப்படி எழுதவேண்டும், சொல்ல வேண்டும் என்பதையும் கண்டோம்.
"முழிக்கிற முழியைப் பாரு, திருட்டுப் பயல்' என்று பேசுகிறார்கள். "ஏன்டா முளி முளின்னு முளிக்கிறே, ஒண்ணும் விளங்கலியா?' என்று வினவுகிறார்கள். இந்த முழியும், முளியும் சரியானவையா? அல்ல. விழிக்கிற விழியைப் பாரு, விழி விழி என்று விழிக்கிறாய் என்று இருக்க வேண்டியவை இப்படி வழக்கில் வழுக்கி உள்ளன.
"ஒரே நாத்தமடிக்குது. சகிக்க முடியலே' இந்த நாத்தம் என்பது நாற்றம் என்பதன் வழுக்கல். அவ்வாறே பீத்தல் என்றால் பீற்றல் (பீற்றுதல்)- பெருமை பேசுதல் என்பதன் வழுக்கல். இப்படி நம் வழக்கிலுள்ள வழுவுடைய சொற்களையும் அவற்றில் திருத்தமுடைய சொற்களையும் அடக்கி ஒரு சிறு பட்டியலில் தருகிறோம்.
வழு திருத்தம்
அடமழை அடைமழை
அடமானம் அடைமானம்
உடமை உடைமை
உத்திரவு உத்தரவு (ஆணை)
ஊரணி ஊருணி
எகனை முகனை எதுகை மோனை
ஏமாந்தான் ஏமாறினான்
ஒருவள் ஒருத்தி
ஒருத்தன் ஒருவன்
கத்திரிக்கோல் கத்தரிக்கோல்
காத்தாலே காலை
கார்க்கும் (கடவுள்) காக்கும் (கடவுள்)
கிராணம் கிரகணம்
குத்துதல் (நெல்)குற்றுதல்
கேழ்க்கிறார் கேட்கிறார்
கோடாலி கோடரி
சம்மந்தம் சம்பந்தம் (தொடர்பு)
சுந்திரமூர்த்தி சுந்தரமூர்த்தி
நன்றி – தினமணி கதிர்
ليست هناك تعليقات:
إرسال تعليق