‏إظهار الرسائل ذات التسميات காஞ்சனா தாமோதரன். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات காஞ்சனா தாமோதரன். إظهار كافة الرسائل

ஓட்டைக் காலணாக்கள் - காஞ்சனா தாமோதரன்

நம்பிக்கனி அத்தை நல்ல உயரம். அவளுக்குத் தலைவலி அடிக்கடி வரும். வெள்ளைத் துணியை நெற்றியில் இறுகக் கட்டியவாறு சோஃபாவில் படுத்துக் கண்களை மூடிக் கொள்வாள்; சோஃபாவுக்கு வெளியே நீளும் பாதங்கள் புடவை கொஞ்சமும் விலகாமல் எப்படியோ சுவற்றில் மெல்ல ஏறும். அப்படிப் பாதங்களை ஓட்டிக் கொண்டே கதைகள் நிறையச் சொல்லுவாள்.

வடிவ அமைதி - காஞ்சனா தாமோதரன்

அந்தப் பெண் கண்ணாடி முன் நின்றாள். திறந்த 'ப ' வடிவிலான கண்ணாடியில் வெவ்வேறு கோணங்களில் மூன்று பிம்பங்கள் நிறைந்தன. உடம்பைக் கவ்விப் பிடிக்கும் 'ஸ்பான்டெக்ஸ் ' துணியினாலான மேல் சட்டையை இன்னும் கொஞ்சம் கீழே இழுத்து விட்டாள். முன்னும் பின்னுமாய்த் திரும்பித் திரும்பித் தன்னைப் பார்த்துக் கொண்டாள். தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள். முகத்தில் அதிருப்தி. மீண்டும் உடை மாற்றும் அறைகளுள் திரும்பிச் சென்றாள். அவள் அந்தச் சட்டையை வாங்கப் போவதில்லை என்று தோன்றியது.

அடகு - காஞ்சனா தாமோதரன்

செல்வி கொண்டு வந்த தவலைப் பானையைச் செல்லத்தாயம்மாள் அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்தாள். சில இடங்களில் சப்பி நசுங்கியிருந்தது. ஒரு பக்கத்தில் 'மா.செ. ' என்று கொஞ்சம் கோணலாய் வெட்டியிருந்தது. விளிம்பு பித்தளை விட்டுப்போய் இளித்தது. உள்ளே ஈயப்பூச்சு தேய்ஞ்சிருந்தது. பானையைத் தள்ளி வைத்தாள். வெற்றிலைச் செல்லத்தைத் தன் பக்கம் இழுத்தாள். உள்ளே இருந்ததைப் பார்ப்பதாகப் பாவலா செய்கிறாளோ. செல்விக்கு உடம்பு ன்னும் கொஞ்சம் கூனிக் குறுகிற்று. அவளை விட அந்த வெற்றிலைச் செல்லம் பெரிசுதான் போல. வெங்கலத்தில் நல்ல பூ வேலைப்பாடு. உள்ளே வெற்றிலை, சீவல் பாக்கு, ரோஸ் நிறத்தில் வாசனைச் சுண்ணாம்பு. செல்வியை விட அது உசத்திதான். செல்லத்தாயம்மாள் வெற்றிலை மடிப்பு செய்ய ஆரம்பித்தாள்.

வழிப்பறி - காஞ்சனா தாமோதரன்

'ஏ பாமா, நீ ரெடியா ? ' ராவுத்தர் மகள் சலிமா அக்கா வாசலில் நின்று குரல் கொடுத்தாள்.

'அவா எங்க ரெடி ? இவ்ளோவ் நேரமா ஒரு பொஸ்தகத்தை வச்சிக்கிட்டு ஒக்காந்திருந்தா. நேரத்தோட குளிப்பியான்னு நா இப்பத்தான் வெரட்டி விட்டேன். ' அரிசியைச் சுளவில் பரப்பிக் கல் பொறுக்கிக் கொண்டு முன் திண்ணையில் உட்கார்ந்திருந்த பாமாவின் தாய் வாஞ்சையுடன் அலுத்துக் கொண்டாள்.