‏إظهار الرسائل ذات التسميات திணைமாலை நூற்றைம்பது. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات திணைமாலை நூற்றைம்பது. إظهار كافة الرسائل

திணைமாலை நூற்றைம்பது - சாமி. சிதம்பரனார்

 நூல் வரலாறு

ஐந்திணைகளைப்பற்றியும் வரிசையாகச் சொல்லுவது; நூற்றுஐம்பது
பாடல்கள் அடங்கியது; திணைமாலை நூற்றைம்பதாகும்.

பெயர், திணைமாலை நூற்றைம்பது; ஆனால் இதிலிருக்கும்
வெண்பாக்களின் எண்ணிக்கை நூற்றுஐம்பத்து மூன்று. இதன் இறுதியிலே
பாயிரச் செய்யுள் ஒன்று காணப்படுகின்றது. ஆக இந்நூலில் இன்றுள்ள
பாடல்கள் 154 ஆகும்.

படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதினவன் ஏட்டைக் கெடுத்தான்
என்று ஒரு பழமொழி உண்டு. பழங்காலத்திலே நூல்கள் எல்லாம்
பனையோலையில் எழுதப்பட்டு வந்தன. அப்பொழுது ஒருவர் படிப்பார்;
மற்றொருவர் எழுதுவார். படிப்பவர் தப்பாகப் படிப்பதும் உண்டு;
எழுதுகிறவர் தப்பாக எழுவதும் உண்டு. இதுமட்டும் அன்று, அவர்கள்
தங்களுக்குப் பிடித்தமானவற்றைச் சேர்த்தும் எழுதிவிடுவார்கள். இந்த
உண்மையைக் குறிப்பதுதான் மேலே காட்டிய பழமொழி.