‏إظهار الرسائل ذات التسميات அகநானூறு. إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات அகநானூறு. إظهار كافة الرسائل

சங்க இலக்கியத்தில் வன்புணர்ச்சியும் தண்டனையும்! - சு. சொக்கலிங்கம்

பாலியல் குற்றம் செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென உலகில் பல மூலைகளிலிருந்தும் பலத்த குரல் இன்று எழும்புகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து கொண்டிருந்த இவ் வன்கொடுமை அன்றாட நிகழ்வாக அமைந்துவிட்டமையால் வன்கொடுமை புணர்ச்சிக்கான எதிர்ப்புக் குரலில் வியப்பொன்றுமில்லை. சரியானதே.

பாலியல் குற்றம் புரிந்தோர்க்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட்டிருப்பதை சங்க இலக்கியத்தில் காணமுடிகிறது. இத் தண்டனை வழங்கும் பொறுப்பை நடுவுநிலை தவறாச் சான்றோர் மக்கள் முன்னிலையில் வழங்கியுள்ளனர் என்பதே சிறப்பு.

அகநானூறு "மணிமிடைப் பவளத்தில்' இந்நிகழ்வு பாடப் பட்டுள்ளது. அழகு விளங்க பழைமையான புகழ்மிக்கப் பலவகையான பூக்கள் நிறைந்த வயல்களையும் கரும்பு மிக்க தோட்டங்களையும் உடைய சிறப்புடைய கள்ளூர் என்னும் ஊரினன் நிகழ்வாகக் கூறப்பட்டுள்ளது.

அழகிய நெற்றியியையுடைய இளையாள் ஒருத்தியடன் கூடி, அவளின் அழகிய நலத்தினைத் தீவினையே தொழிலாகக் கொண்ட ஒருவன் நுகர்ந்து விடுகிறான். அதன்பின் அவளை நாடி அவன் வரவே இல்லை. அவளைக் கைவிட்டு விடுகிறான். அந்நிலையில் என்ன செய்வதென்று அறியாத நங்கை இறுதியாகச் சான்றோரிடம் முறையிட்டுக் கதறுகிறாள்.

அவளின் துயர்நிலை கேட்ட சான்றோர், அத்தீயவனை அழைத்து உசாவுகின்றனர். அத் தீயவனோ சற்றும் மனசாட்சியின்றி "இதற்கு முன் இவளை அறியேன்'; இவள் யார் என்பது கூட தனக்குத் தெரியாதென்றும் துணிவுடன் பொய்சூள் கூறி அவளை ஏற்க மறுக்கிறான். நீதியிலா அவனின் சூளினை நன்கு ஆய்ந்த அவையினர், அவன் கூறியது முற்றிலும் பொய் என்பதைச் தக்க சாட்சியாளர் கூற்றினால் தெளிவடைகின்றனர். அதனால் அவன்மேல் மேலும் சினம் கொள்கின்றனர். அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று முடிவு செய்து, தண்டனையை மக்கள் முன்னிலையில் வழங்குகின்றனர்.

தளிர்கள் பொருந்திய மூன்று கவராய கிளைகளின் நடுவே அவனை இறுகப் பிணித்துக் கட்டி, அவன் தலையில் அதிக அளவில் நீற்றினைப் (சுண்ணாம்பு தண்ணீர்) பெய்கின்றனர். சுண்ணாம்பு தண்ணீர் தன் தலையில் பட்டதினால் எரிச்சல் தாங்காமல் அவன் துடிக்கிறான். "ஐயோ' என்று அலறுகின்றான். அவன் துடிப்பதைக் கண்ட ஊர் மக்கள் அவன் மேல் இரக்கம் கொள்ளாமல், மாறாக "இது அவனுக்குச் சரியான தண்டனையே' என்று எண்ணி மகிழ்ச்சியால் ஆரவாரம் செய்கின்றனர். இதனை, ..... ...... ...... 

காண்தகத் தொல்புகழ் நிறைந்த பல்பூங் கழனி
கரும்பமல் படப்பைப் பெரும்பெயர்க் கள்ளூர்த்
திருநுதற் குறமகள் அணிநலம் வவ்விய
அறனி லாளன் அறியேன் என்ற
திறனில் வெம்சூள் அறிகரி கடாஅய்
முறியார் பெருங்கிளை செறியப் பற்றி
நீறுதலைப் பெய்த ஞான்றை
வீறுசால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே!
(அகம் .256 )

என்று மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் என்ற புலவர் தோழியின் கூற்றாகப் பாடியுள்ளார்.

இப்பாடல் வன்புணர்ச்சி செய்வோருக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டுமென்ற எண்ணம் அன்று தொட்டு இன்று வரை பால் வேறுபாடின்றி மக்களிடையே இருந்து வருகிறது என்பதையே புலப்படுத்துகிறது. நம் தமிழ்ச் செம்மொழி இலக்கியத்தில் இல்லாத செய்திகளே இல்லை என்பது உண்மையிலும் உண்மை!

நன்றி - தமிழ்மணி 2012

‘கிழார்' போற்றுதும்… - சிவமானசா

சங்க காலத்தில் ‘கிழார்' எனும் சிறப்புப் பெயர் உழுவித்து உண்ணும் வேளாண் மக்களைக் குறிக்கும் பட்டம் என்பது அறிஞர்கள் கருத்து. இதை, உ.வே.சாமிநாதையரின் சங்கப்பாடல் பதிப்பிலும், ஆ.சிங்காரவேலு முதலியாரின் அபிதான சிந்தாமணி நூலிலும் காணலாம். பிற்காலத்தில் கல்வெட்டுகள் முதலியவை பல சமூகத்தினரைக் குறித்தது என்று கூறுகிறது. ஆனால், சங்க காலத்தில் வேளாண் மக்களையே குறிப்பதாகக் கூறுவர்.

பாண்டிய மன்னன் வேளாண்குடி மக்களுக்கு வழங்கிய பட்டத்தின் பெயர் "காவிதி' என்பது அறிஞர்கள் கூற்று. அத்தகைய ‘கிழார்'கள் பலர் அன்னைத் தமிழுக்கு அணி சேர்த்துள்ளனர். அவர்களுள் சிலரைக் காண்போம்.

அரிசில் கிழார் : தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறையைப் பாடி எண்பத்து நூறாயிரம் பொற்காசுகளைப் பெற்றவர் இவர். வையாவி கோப்பெரும் பேகனையும், அவனுடைய இல்லத்தரசியான கண்ணகியையும் இணைத்து வைத்தவர். குறுந்தொகையில் 193, புறம்-146, 230, 281, 285, 300, 304, 342 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆலந்தூர் கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், நலங்கிள்ளியையும் பாடியுள்ளார். குறு.112, 350, புறம்.34, 36, 69, 225, 324 ஆகிய பாடல்களைப் பாடியவர்.

ஆவூர்க்கிழார் : உறையூர் அருகிலுள்ள ஆவூரைச் சேர்ந்தவர். புறம்-322வது பாடலைப் பாடியவர்.

கண்ணனார் கிழார் : இவர் ஆவூர்க்கிழாரின் மகனார். அகம்-202-ஆம் பாடலைப் பாடியவர்.

ஆவூர் மூலங்கிழார் : குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைப் பாடியுள்ளார். அகநானூற்றில் 24, 156, 341, புறநானூற்றில் 38, 166, 177, 196, 261, 301 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

பெருந்தலைச் சாத்தனார் கிழார் : இவர் ஆவூர் மூலங்கிழாருடைய மகன். நற்றிணையில் 262, அகம்.13, 224, புறம் 151, 164, 165, 205, 208, 294 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

இடைக்குன்றூர் கிழார் : இவர் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியவர். புறம்.76-79 (4 பாடல்கள்) வரை உள்ள பாடல்களைப் பாடியவர்.

உகாய்க்குடி கிழார் : குறுந்தொகையில் 63-ஆம் பாடலைப் பாடியவர்.

பரங்கொற்றனார் கிழார்: இவர் உமட்டூர் கிழாரின் மகனார். அகநானூற்றில் 69-ஆம் பாடலை இயற்றியுள்ளார்.

ஐயூர் மூலங்கிழார் : இவர், பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியைப் பாடியவர். புறம் 21-ஆம் பாடலைப் பாடியுள்ளார்.

கயத்தூர் கிழார் : இவர் குறுந்தொகையில் 354-வது பாடலைப் பாடியுள்ளார்.

கருவூர்க்கிழார் : இவர் குறுந்தொகை 170வது பாடலைப் பாடியவர்.

காரிக்கிழார் : இவர் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் பாடியுள்ளார். புறம் 6-வது பாடலைப் பாடியவர்.

கிள்ளி மங்கலங்கிழார் : குறுந்தொகையில் 76, 110, 152, 181 ஆகிய பாடல்களைப் பாடியுள்ளார்.

குறுங்கோழியூர் கிழார் : சேரமான் யானைக்கண்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைப் பாராட்டிப் பாடியுள்ளார். புறம் 17, 20, 22-வது பாடலைப் பாடியவர்.


நன்றி - தமிழ்மணி 19 8 12

இலக்​கி​யத் தோட்​டத்து இன்​பப் பலாக்​கள்

தமிழ் இலக்கியப் பாக்கள் அனைத்துமே முக்னியின் சாறு பிழிந்து புனையப்பட்வையோ என எண்ணும் வகையில்,​​ படிக்குந்தோறும் இன்பம் பயப்பவை;​ நினைக்குந்தோறும் நெஞ்சத்தை குளிர் சாரலால் நனைப்பவை.​
விவிமான கனிகள் விளைந்தாலும் "முக்கனி' என தமிழர்ளால் சிறப்பிக்கப்பெற்றவை மா,​​ பலா,​​ வாழை.​ அவற்றிலும்,​​ இலக்கியத் தோட்டங்ளில் அதிகம் கனிந்து மணம் வீசி,​​ வாசகனை வாசனையாலும்,​​ சுவையாலும் சுண்டி இழுப்பது பலாக்னிதான்.​

னித மனத்தை குரங்குடன் ஒப்பிடுவது வழக்கம்.​ குரங்கு மனத்தை எதனுடன் ஒப்பிடுவது?​ அருவியின் இக்ரையில் நிற்கிறது மந்தி ​(பெண் குரங்கு)​ ஒன்று.​ அருவியைக் கடந்து அக்ரைக்குச் செல்ல அதற்கு ஆசை.​ மரங்கள் அடர்ந்த காடு என்றால் மந்திக்குக் கேட்கவே வேண்டாம்.​ இங்கோ,​​ இடையில் தடுப்பது தண்ணீர்க் காடு!​

இயற்​கை​யோடு இயைந்த வாழ்வு

சங்கப் பாடல்ளின் முக்கிய சிறப்பியல்பு மானிட வாழ்வின் மீது,​​ அதன் இன்ப,​​ துன்பங்ளின் மீது அதற்குள்ள அக்றையே ஆகும்.​ ஆனால்,​​ எந்த ஒரு பாடலும் இயற்கையை விட்டு முற்றிலும் விலகி நிற்க இயலாது.​ இயற்கை மானிட வாழ்வின் ஒரு நாடகம் அரங்கேறும் மேடையாவும்,​​ பின்ணியாவும் சங்க இலக்கியத்தில் இடம் பெறுகிறது.​

யற்கை அதன் எல்லாத் தன்மைளிலும் முக்கியத்துவம் பெற்று,​​ மனித வாழ்க்கையை வண்மாக்குகிறது.​ அதாவது,​​ இயற்கையின் முன்னிலையில் மனிதன் பெறும் உணர்ச்சிளைத் தெளிவாகக் காட்டுகிறது.​ காதனைப் பிரிந்து துயருறும் தலைவிக்கு கடல்நீரின் "இழும்' எனும் ஓசை,​​ தன் சொந்த அழுகுலைப் போலவே கேட்கிறது ​(கலி.129).​ கடல் அவளோடு சேர்ந்து அழுதாகத் தோன்றுகிறது.​ சில வேளைளில் முரண்பாட்டுக்குரல் ஒலிக்கிறது.​ எதிர்ப்பு அல்லது அலட்சியம் உணரப்டுகிறது.​ அதே தலைவி,​​ சில வேளைளில்,​​ அலைகள் நிரம்பிய கடல் அவளுடைய துயரங்களை ஒரு பொருட்டாகக் கருதாமல் இரக்மற்று இருப்தாவும் உணர்கிறாள் ​(ஐங்.141).​
இவ்வாறு மாறிரும் மன நிலைளின் அழுத்தத்தைக் காட்ட,​​ சங்கப் புலவர்கள் இயற்கையைக் கருவியாக்கிக் கொண்னர்.​ இது உணர்வை பலப்டுத்த இயற்கையைப் பயன்டுத்திய நிலை.​ அதே இயற்கை,​​ உணர்வை ஏற்டுத்துதும் உண்டு.​

மை பூசும் மகளிர் பொய்யும் பேசுவரோ?

களவொழுக்கத்தில் பல்வேறு இடையூறுகளால் தலைவி தலைவனைக் காணாமல் ஆற்றாமை உடையவளாய் விளங்கினாள். அவளது வருத்தத்தைக் கண்ட செவிலித்தாய், பெரிதும் வருந்தித் தோழியை நோக்கி, தலைவியின் உடல் வேறுபாட்டுக்குக் காரணம் யாது என அறிவாயோ? என வினவுகிறாள்.

தோழி விடை கூறுகிறாள். ""உன் மகள் பாலும் உண்ணாள், பழமும் வேண்டாள். பசலை நோயால் துன்பமுறுகிறாள். அநேகமாக அதற்கு இதுவே காரணமாக இருக்கும். என்னவென்றால், ஒரு நாள் உன் மகள் தோழியருடன் மலர்கள் நிறைந்த மலைச்சாரலில் மலர் கொய்யச் சென்றாள்.

அந்திவானம்

தங்கம் உருக்கித் தழல் குறைத்து எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ' என்று பாரதி, அந்தி வானத்தின் அழகைக் கண்டு பாடல் இசைத்தான். அத்தகையதொரு காட்சி அகநானூறிலும் வருகிறது. ஒருவேளை அந்தப் பாடல்தான் பாரதிக்கு இப்படியொரு கற்பனையை வழங்கியதோ என்னவோ?

கதிரவன் ஒரு சக்கரமுடைய தேரில் உலா வருகிறான். அவன் மணமார்ந்த பொழிலில் பகல் முழுவதும் கழித்து, அந்திப்பொழுதில் மேற்கிலுள்ள பெரிய மலைகளில் முலாம் பூசிக்கொண்டு ஒளிர்கிறான்.

மணம் வீசா முல்லைப்பூ - மு.முனீஸ் மூர்த்தி

குறிஞ்சிப் பாடல்களை வாசிக்கையில் இன்ப உணர்வு மேலோங்குவதற்கும், பாலை, முல்லைப் பாடல்களை வாசிக்கையில் இரக்க உணர்வு முன்னிற்பதற்கும் "உரிப்பொருளே' காரணம்.

அன்பின் ஐந்திணைகளுள் முல்லைத் திணைக்குரிய உரிப்பொருள் "இருத்தல்' என்பதாகும். அதாவது, "பிரிந்தவர் வருந்துணையும் ஆற்றியிருத்தல்' என்பதாகும். முல்லைப் பாடல்களில் இடம்பெற்றுள்ள தலைவியின் "இருத்தல்' சார்ந்த காட்சிப்படுத்தல்களை அறிஞர் பலர் சுட்டிச் செல்கின்றனர். தலைவியின் இருத்தல் செயலானது உறுப்பு நலன் அழிவு, கண்ணீர் விடல், தெய்வக் கற்புடன் வாழ்தல் எனும் செயல் நிலைகளை உடையனவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய அகப்புறவய அவலங்களைத் தாண்டி மேலும் ஓர் அவலம் தலைவியைப் பெரிதும் துன்பத்தில் ஆழ்த்துகிறது.

அரசியல் கூட்டணி அன்றும் இன்றும் - தெ.முருகசாமி

ஊரை, நாட்டை, உலகத்தை அரசாளும் நல்லதோர் அமைப்பு முறைக்கு "அரசியல்' என்று பெயர். இச்சொல் அந்தப் பொருளிலிருந்து சற்றுமாறி, பொருளைப் புலப்படுத்துமாறு இன்று எல்லாத்தரப்பிலும் சொல்லப்படுகிறது. பழகும் நண்பர்களுக்குள் நம்பகத் தன்மை குறையுமானால், ""நம்மிடமே அரசியலா?'' என்பர். பொதுவாழ்வில் ஏமாற்றிப் பிழைப்போரை, ""இப்படியா அரசியல் பண்ணுவது?'' என்று கூறுவதுண்டு. ஆக ஆட்சிமுறைச் சிறப்பை உணர்த்தும் குறியீடான அரசியல், ஏமாற்றி எத்திப் பிழைக்கும் கீழறுப்புக்குரியதாகிவிட்டது வேதனைக்குரியதாகும்.

துடி - நுண் பொருள் விளக்கம் - பேராசிரியர் செ.வைத்தியலிங்கன்

தமிழில் "துடி' என்பதற்கு, உடுக்கை, உடுக்கு, சிரந்தை எனப் புலவர்கள் பல இடங்களில் பொருள் கூறியுள்ளனர். "துடி' என்பது தோலிசைக் கருவி; அந்தத் தோற்கருவிக்கு முற்காலத்தில் பல நோக்கங்களில் சிறப்பிடம் தந்துள்ளனர்.

"துடி' மரத்தால் செய்யப்பட்டு, அதன் இருபக்க வட்டக் கண்களும் தோலால் போர்த்தப்பட்டு, தோல் வாரால் இழுத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் இடைப்பகுதி சுருங்கியிருப்பதால், "இடை சுருங்கிய பறை' என்றும் விளக்கியுள்ளனர். அழகிய மகளிரை வருணிக்கையில், அவர்களின் இடை-இடுப்பு-நளினமாகச் சுருங்கி அமைதல் பற்றி "துடியிடை மகளிர்' எனப் புலவர்கள் இலக்கியங்களில் புலப்படுத்தியுள்ளனர்.

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை - மணி.மாறன்

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

 ""இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
 பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
 மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)

காதல் மனதின் காட்சி முரண் - இர.இராஜகுரு

பழந்தமிழர் வாழ்வின் களவியல், கற்பியல் என்ற இருபெரும் இயல்களுள் மாந்தர்தம் வாழ்வுநிலை, அவருள்ளே விளைந்த பேரன்பின் பெருமை முதலியவற்றை அழகியலோடு கூறுவது அகநானூறு. இத்தகைய சிறப்புமிக்க அகநூனூற்றின் இரு பாடல்கள் வழி, காதல் மனம் கொண்ட தலைவியரின் எண்ணம் (பெண்களின் குணம்) எவ்வாறு இருவேறுபட்ட எதிரெதிர் மனநிலைகளில் இயங்கும் என்பதைக் காணலாம்.