‏إظهار الرسائل ذات التسميات சிறுபஞ்ச மூலம். إظهار كافة الرسائل
‏إظهار الرسائل ذات التسميات சிறுபஞ்ச மூலம். إظهار كافة الرسائل

சிறுபஞ்சமூலத்தில் தேசத்தொண்டு

தெய்வத் தொண்டைக் காட்டிலும் மேன்மைமிக்கது தேசத்தொண்டு. சிறுபஞ்சமூலம், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. இந்நூலின் ஆசிரியர் காரியாசான் என்பவர். சிறுபஞ்சமூலம் என்பது, கண்டங்கத்தரி, சிறுவழுதுணை, சிறுமல்லி, பெருமல்லி, நெருஞ்சி முதலிய ஐந்து பொருள்களின் கலவை என்பர்.

இம்மருந்துகள் மக்களின் உடல் நோயைப் போக்குவதுபோல், சிறுபஞ்சமூலம் என்ற இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் மக்கள் மனதைச் சுத்தம் செய்யக்கூடிய ஐந்து உறுதிப்பொருள்கள் கொண்ட கருத்துகள் இருக்கும்.

""வார் சான்ற கூந்தல்! வரம்பு உயர; வைகலும்
நீர் சான்று உயரவே நெல்உயரும்; - சீர்சான்ற
தாவாக் குடி உயரத் தாங்கரும் சீர்க் கோஉயரும்
ஓவாது உரைக்கும் உலகு''

இப்பாடலின் கருத்து: நீண்ட கூந்தலை உடைய பெண்ணே! நிலத்திலே நீர் தங்கும் படியாகக் கரை உயர்ந்திருக்க வேண்டும். கரை உயர்ந்து காணப்பட்டால் தான் குளத்திலே நீர் தேங்கி இருக்கும். நிலத்தடிநீர் குறையாது. தண்ணீர் தேங்கி இருந்தால் தான் வேளாண்மைப் பயிர் செய்ய முடியும். நெற்பயிர் ஓங்கி செழித்து வளர்ந்தால் தான் குடிமக்கள் யாவரும் பஞ்சம், பசியின்றிப் பல செல்வங்கள் பெற்றுச் செழுமையுடன் வாழ்வார்கள். நாட்டின் குடிமக்கள் சிறந்து வாழ்ந்தால் தான் அந்நாட்டு மன்னனும் உயர்வாக மதிக்கப்படுவான், அவனது அரசாட்சியும் சிறந்து விளங்கும் என்பதாகும்.
தரிசு நிலங்களைத் திருத்தி, கழனிகளாக்கி நாட்டின் உணவு உற்பத்தியைப் பெருக்கினால் தான், அந்நாட்டில் பஞ்சம் என்பதே இருக்காது. மக்கள் அமைதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வார்கள்.

அதனால், காடுகளை அழித்துவிடக் கூடாது, அவற்றைப் பாதுகாக்க வேண்டும். புதிய மரங்களை வளர்க்க வேண்டும் என்று நமது பழந்தமிழ் இலக்கியங்களிலே சொல்லப்பட்டுள்ளது. குழந்தை பிறந்ததும் அக் குழந்தையின் நினைவாக ஒரு மரம் நடுவது நமது தமிழ் நாட்டின் மரபாகவே இருந்து வருகிறது.

தலைவனோடு உரையாடும் தலைவி, அருகில் புன்னைமரம் இருப்பது கண்டு நாணப்பட்டாள். தலைவன் அவளை ஏன் நாணம் கொண்டாய் என்று கேட்க, அம்மரமோ எனக்குச் சகோதரி முறை வேண்டும் என்கிறாள். திருமண நாளில் உதிமரம் நட்டு வளர்ப்பதும், ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்நாளில் ஐந்து பால்தரும் மரங்களை நட்டுப் பயிர் செய்ய வேண்டும் என்பதும் நம் தமிழரின் தலையாய கடமையாக இருந்து வருகிறது.

புலவர் காரியாசான், நாடு நன்றாக வாழ, நாட்டிலே நீர் வளம் குறையாது உணவு உற்பத்தி பெருக, மக்கள் மகிழ்வோடும் ஒற்றுமையோடும் வாழ நல்ல கருத்துகளை எத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னர் பாடியிருப்பது போற்றத்தக்கதாகும்.

""குளம்தொட்டுக் கோடு பதிந்து வழிசீத்து
உளம்தொட்டு உழுவயல் ஆக்கி - வளம்தொட்டுப்
பாகுபடும் கிணற்றோடு, என்று இவ் ஐம்பால் படுத்தான்
ஏகும் சுவர்க்கத்து இனிது'' (பா-66)

""நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடில்லாமல் இருக்க, பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும் (நீர்ப்பாசனம்) ;  தளிர்விட்டு வளரக்கூடிய மரக்கிளைகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும் (பசுமைப்புரட்சி), மக்கள் நடக்க முள், முடல் இல்லாத பாதைகளை மேடுபள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும். (சாலை வசதி), தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி  விளை நிலங்களாக மாற்ற வேண்டும் (தரிசு நில மேம்பாடு); சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும் (குடிநீர் வசதி), இந்த ஐந்து அறப்பணிகளையும் தேசத்திற்காக எவன் செய்கிறானோ அவன் சொர்க்கம் சென்றடைவான்'' என்கிறது சிறுபஞ்சமூலப் பாடல்.
சிறுபஞ்சமூலம் கூறும் இக்கருத்துகள், இந்நாளில், நாம் பின்பற்ற வேண்டிய கருத்துகள் தானே?

நன்றி - தமிழ்மணி

சிறு பஞ்சமூலம் - சாமி. சிதம்பரனார்

நூல் வரலாறு

சிறு பஞ்சமூலம் என்பது ஒரு மருந்தின் பெயர் மூலம்-வேர். சிறிய ஐந்து
வேர்கள் என்பதே சிறுபஞ்ச மூலம் என்பதன் பொருள்.

கண்டங்கத்திரி வேர், சிறுவழுதுணை வேர், சிறுமல்லி வேர், பெருமல்லி
வேர்,நெருஞ்சி வேர் இவைகளே சிறு பஞ்சமூலம். இந்த ஐந்து வேர்களும்
மருந்துப் பண்டங்கள். இவற்றால் உடல் நோய்கள் பலவற்றைப் போக்க
முடியும்.

இந்த நூலில் உள்ள ஒவ்வொரு பாட்டிலும் ஐந்து ஐந்து பொருள்கள்
கூறப்படுகின்றன. அந்த ஐந்து வேர்களும் உடல் நோயை ஒழிக்கும்;
உடம்பை நன்றாக வைத்திருக்க உதவிசெய்யும். இந்த நூலில் ஒவ்வொரு
வெண்பாவிலும் சொல்லப்படும் ஐந்து பொருள்களும் மக்களின்
மனப்பிணியை மாய்க்கும்; உள்ளத்தைப் பரிசுத்தமாக வைத்துப் பாதுகாக்கும்.
இந்தக் கருத்தில்தான் இந்நூலுக்குச் சிறுபஞ்ச மூலம் என்று பெயர்
வைக்கப்பட்டது.

தமிழ் இலக்கியத்தில் நீர் மேலாண்மை - மணி.மாறன்

வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள்-16) என்கிறார் வள்ளுவர். அத்தகைய நீராதாரத்தை தமிழ் மக்கள் தொன்றுதொட்டு உயிரினும் மேலானதாகப் போற்றியுள்ளனர். மழைநீரைச் சேமித்து, சேமித்த நீரை திறம்படப் பயன்படுத்துவதன் மூலமே தமிழகத்தின் வேளாண்மை பெரிதும் நடைபெற்றது. இந்த மழை நீரை ஏரிகள், குளங்களில் சேமித்து வைப்பது பற்றி இளங்கோவடிகள் மிக அழகாகக் குறிப்பிட்டுள்ளார்.

 ""இடியுடைப் பெருமழை எய்தா ஏகப்
 பிழையாவிளையுள் பெருவளம் சுரப்ப
 மழைபிணித்(து) ஆண்ட மன்னவன்'' (வரி.26-28)