21/06/2020

ஐ - அய் - வேறுபாடும் குறைபாடும்! - புலவர் ப.அரங்கசாமி

"ஐ" என்ற உயிர் நெடிலுக்குப் போலியாக "அய்" என்று எழுதப்படுகிறது. இது சரியா? தமிழ் எழுத்துகளுக்கு ஓசை அளவு உண்டு. அது மாத்திரை எனப்படும்.


முதல் குறைபாடு: ""க்கு 2 மாத்திரை; "அய்"க்கு ஒன்றரை மாத்திரை. "" குறிலுக்கு ஒரு மாத்திரை; "ய்" - மெய்யெழுத்துக்கு அரை மாத்திரை. எனவே முதல் குறைபாடு எழுத்துக்குரிய ஓசை (மாத்திரை) குறைவு.


"" க்குப் போலியாக "அய்" என எழுதக்காரணம் தொல்காப்பியம் கூறும் நூற்பா என்பர்.


"அகர இகர ஐகாரம் ஆகும்" (தொல். மொழிமரபு-21)


"அகரத்து இம்பர் யகரப் புள்ளியும்


என் நெடுஞ்சினை மெய்பெறத் தோன்றும்” (தொல்.மொழிமரபு-23)


அதாவது, -க்குப் போலியாக "அய்" என எழுதலாம் என்பது. அப்படியானால் முதல் நூற்பாப்படி, அஇயன் (அய்யன்), வஅஇரம் (வயிரம்) என்று எழுதலாமே, எழுதுகிறோமா?


- எழுத்தானது (மொழியாக) சொல்லாக ஓரெழுத்து ஒரு மொழியாக நின்று கடவுள், குரு, அரசன், கணவன், மேன்மை, தலைமை, அழகு, சிறப்பு, நுண்மை, ஐந்து, கபம் (எச்சில் கோழை) முதலிய பொருளை "" குறிக்கும்.


"அய்" - என்பது எப்பொருளையும் குறிக்காத வெற்று எழுத்து. பல பொருள் குறிக்கும் ஓர் எழுத்துக்கு ஒப்புடையதாக, பொருள் குறிக்காத வெற்று எழுத்துகளை எழுதுவது குறையும் குற்றமும் ஆகும்.


"என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ஐ


முன்நின்று கல்நின் றவர்" (குறள்-771)


இதன் பொருள்: "பகைவர்களே! என் கணவர் முன் நின்று போரிடாதீர்; என் கணவர் முன் நின்று போரிட்டவர்கள் கல்லாக (வீரக்கல்) நிற்கிறார்கள்" என்று ஒரு மறவர்குலப் பெண் கூறுவதாக அமைந்தது இக்குறட்பா.


இதில் தன் கணவனை "" என்ற எழுத்தால் குறிக்கிறாள். என்+ = என்னை = என் கணவன். இங்கு "" என்பது கணவனைக் குறிப்பது. இப்படி பல .கா. உள்ளன. இவ்வாறு - குறிக்கும் கணவன் என்ற பொருள் "அய்"-க்கு இல்லை.


திருவள்ளுவருக்குப் பெருமை, மதிப்புத் தருவதாக அப்பெயருக்கு முன் சேர்க்கப்படும் அடைமொழி, பெருமை தரும் சொல்லால் கூறவேண்டும். ஐயன் என்றே எழுத வேண்டும்; அய்யன் என எழுதினால் வெற்றுச் சொல் அடைமொழியாக நிற்கும். வள்ளுவருக்குப் பெருமை தராது.


- க்குப் போலியாக அய் எழுதலாம் என்று தொல்காப்பியம் கூறுகிறது என்று எல்லா இடங்களிலும் போலியான அய் எழுதக்கூடாது.


மற்றொரு போலி


""கர ஈற்றுச் சொல்லில் தாய், நாய் போன்ற சொற்களில் "ய்"க்குப் போலியாக - பதிலாக ""கரத்துடன் "" சேர்ந்து வரலாம் என்கிறது தொல்காப்பியம்.


"இகர யகரம் இறுதி விரவும்" (தொல்.மொழி.25) அதாவது, தாய் என்பது தாயி, தாஇ - என்றும்; நாய் என்பது நாயி, நாஇ என்றும் எழுதலாம் என்கிறது. இவ்வாறு எழுதுகிறோமா?


- க்குப் போலியாக "அய்" - என்று எழுதினால், அது நன்னூல் மொழிமரபு பற்றிக் கூறும் பத்துக் குற்றங்களில் ஒன்றான "மயங்க வைத்தல்" என்ற குற்றம் உடையதாகும். எனவே, எக்காரணங்காட்டியும் ""க்குப் போலியாக "அய்" என்பதைச் சேர்த்து அய்யன், அய்யா, அய்யப்பன்,, மழழ், கலய் இவைபோன்று எழுதக்கூடாது. எழுதினால் மொழிமரபு கெடும்.


மற்றும் தமிழ் எழுத்தின்முறை (தன்மை) பற்றித் தொல்காப்பியம் பாயிரம் கூறுகிறது. "மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி" (தொல்.பாயிரம்). அதாவது, ஓர் எழுத்தின் தன்மை மயங்கப் பொருள் தருமாறு அமையக்கூடாது என்பதாகும்.


நிறைவாக: , ஒள எழுத்துகள் பயன்படுத்துவது பற்றித் தமிழக அரசு வெளியிட்ட ஆணை:


"அரசுச் செயலரின் குறிப்பாணை எண்.47041/தி-1/79, நாள்: 23.5.1979. இவ்வாணை,


", ஒள" உயிரெழுத்துகளின் வரிவடிவங்கள் கைவிடப்படாமல் முன்பு போலவே (,ஒள) தொடர்ந்து நடைமுறை வழக்கில் இருந்து வரும்" - என்று கூறுகிறது. எந்த அரசு இந்த ஆணை வெளியிட்டதோ, அதே அரசைச் சார்ந்தவர்களே அந்த ஆணையைப் புறக்கணித்து அய், அவ் என எழுதியதை என்னவென்பது!


எனவே, எக்காரணம் காட்டியும் ""க்குப் போலியாக "அய்" எழுதக்கூடாது. அவ்வாறு எழுதினால் மொழிமரபு சிதைத்தக் குற்றத்துக்கு ஆளாவோம்!


நன்றி - தமிழ்மணி 2012

கருத்துகள் இல்லை: