கலிங்கத்துப் பரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலிங்கத்துப் பரணி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

பறவையும் பரணியும்! - முனைவர் சீனிவாசகண்ணன்

குலசேகர ஆழ்வார் தம்முடைய திருமொழியில் சரணாகதி தத்துவத்தை விளக்கப் பல்வேறு உவமைகளைக் கையாண்டுள்ளார். அதில் ஒன்று பின்வருமாறு:

 ""வங்கத்தின் கூம்பேறும் மாப்பறவை
 போன்றிருந்தேனே!''

கப்பலின் மேல்தளத்தில் உள்ள பறவை, கடலுக்கு மேற்பரப்பில் சிறிது தூரம் பறந்து சென்று, கரை எங்கும் காணாது மீண்டும் கப்பலின் மேல்தளத்தில் உள்ள கொம்பின் மீது அமர்வதுபோல, ""திருமாலே சரணம்'' என்று குலசேகர ஆழ்வார் தஞ்சம் அடைந்தார் என்று இப்பாடலுக்கு உரை விளக்கம் செய்வது மரபு.