இயற்​கை​யோடு இயைந்த வாழ்வு

சங்​கப் பாடல்​க​ளின் முக்​கிய சிறப்​பி​யல்பு மானிட வாழ்​வின் மீது,​​ அதன் இன்ப,​​ துன்​பங்​க​ளின் மீது அதற்​குள்ள அக்​க​றையே ஆகும்.​ ஆனால்,​​ எந்த ஒரு பாட​லும் இயற்​கையை விட்டு முற்​றி​லும் விலகி நிற்க இய​லாது.​ இயற்கை மானிட வாழ்​வின் ஒரு நாட​கம் அரங்​கே​றும் மேடை​யா​க​வும்,​​ பின்​ன​ணி​யா​க​வும் சங்க இலக்​கி​யத்​தில் இடம் பெறு​கி​றது.​

இ​யற்கை அதன் எல்​லாத் தன்​மை​க​ளி​லும் முக்​கி​யத்​து​வம் பெற்று,​​ மனித வாழ்க்​கையை வண்​ண​ம​ய​மாக்​கு​கி​றது.​ அதா​வது,​​ இயற்​கை​யின் முன்​னி​லை​யில் மனி​தன் பெறும் உணர்ச்​சி​க​ளைத் தெளி​வா​கக் காட்​டு​கி​றது.​ காத​ல​னைப் பிரிந்து துய​ரு​றும் தலை​விக்கு கடல்​நீ​ரின் "இழும்' எனும் ஓசை,​​ தன் சொந்த அழு​கு​ர​லைப் போலவே கேட்​கி​றது ​(கலி.129).​ கடல் அவ​ளோடு சேர்ந்து அழு​வ​தா​கத் தோன்​று​கி​றது.​ சில வேளை​க​ளில் முரண்​பாட்​டுக்​கு​ரல் ஒலிக்​கி​றது.​ எதிர்ப்பு அல்​லது அலட்​சி​யம் உண​ரப்​ப​டு​கி​றது.​ அதே தலைவி,​​ சில வேளை​க​ளில்,​​ அலை​கள் நிரம்​பிய கடல் அவ​ளு​டைய துய​ரங்​களை ஒரு பொருட்​டா​கக் கரு​தா​மல் இரக்​க​மற்று இருப்​ப​தா​க​வும் உணர்​கி​றாள் ​(ஐங்.141).​
இவ்​வாறு மாறி​வ​ரும் மன நிலை​க​ளின் அழுத்​தத்​தைக் காட்ட,​​ சங்​கப் புல​வர்​கள் இயற்​கை​யைக் கரு​வி​யாக்​கிக் கொண்​ட​னர்.​ இது உணர்வை பலப்​ப​டுத்த இயற்​கை​யைப் பயன்​ப​டுத்​திய நிலை.​ அதே இயற்கை,​​ உணர்வை ஏற்​ப​டுத்​து​வ​தும் உண்டு.​


இ​யற்​கை​யின் வரு​ணனை நம் கண்​முன் காட்​சி​யாய் விரி​யும் வண்​ணம் அமைந்து சிறக்​கி​றது.​ கண்​டும் கேட்​டும் இன்​பு​று​தற்​கான நாட்​டி​யக் கலை​யின் சொல்​லோ​வி​யத்தை அக​நா​னூற்​றுப் பாடல்​க​ளில் காண​லாம்.​ இனி​மை​யும் எழி​லும் கொண்​ட​மைந்த ஆடற்​கலை,​​ சங்​க​கா​லத் தமிழ் மக்​க​ளின் கலை வாழ்க்​கை​யில் உயர்ந்த இடம் பெற்​றுத் திகழ்ந்​தது.​ அவர்​க​ளு​டைய பண்​பா​டு​மிக்க வாழ்க்​கை​யைத் தம் பாடல்​க​ளில் புல​வர்​கள் பாடி,​​ அக்​க​லைச் சிறப்​பைப் போற்​றி​யுள்​ள​னர்.​ மக்​கள் மன்​றத்​தி​லும் மன்​னர் அவை​யி​லும் செல்​வாக்​குப் பெற்​ற​மை​யால்,​​ புல​வர்​கள் நாவி​லும் கற்​ப​னை​யி​லும் அக்​கலை இடம் பெற்​றது.​

அ​க​நா​னூற்​றில் இடம்​பெற்ற கபி​ல​ரின் இக்​கற்​பனை ஓவி​யம்,​​ குறிஞ்சி நில வளத்​தை​யும்,​​ நலத்​தை​யும் குறிக்க எழுந்​த​தா​யி​னும்,​​ தமிழ் மக்​க​ளின் வாழ்​வில் அன்று சிறப்​பி​டம் பெற்​றி​ருந்த இசை​யும்,​​ நாட​க​மும் எய்​தி​யி​ருந்த சிறப்பை அடிப்​ப​டை​யா​கக் கொண்​டும் அமைந்​துள்​ளது.​

கு​றிஞ்சி,​​ எழில் நல​மிக்க நீல​ம​லைச் சாரல்;​ அங்கு நெடிது வளர்ந்து,​​ அசைந்​தாடி நிற்​கும் மூங்​கில்;​ அவற்​றில் வண்​டு​க​ளால் துளைக்​கப்​பட்ட துளை;​ அத​னி​டையே விரைந்து வீசும் காற்று;​ புல்​லாங்​குழ​லின் ஒலி அங்கு தானாய் எழு​கி​றது.​ அரு​கில் பாடிக் குதித்​தோ​டும் பனி​நீர் அருவி எழுப்​பும் "இழும்' எனும் ஓசை,​​ எண்ண இனிக்​கும் வண்ண மலர்​கள்;​ அதில் தேனை உண்ண நாடிப் பறக்​கும் வண்​டு​க​ளின் இன்​னோசை,​​ தோகை விரித்து இனி​மை​யாக ஆடும் மயி​லின் ஆட்​டம்;​ இவற்​றைக் கண்​டும் கேட்​டும் இன்​புற்று வியக்​கும் குரங்​கு​கள்.​ இயற்​கை​யின் இந்த எழிற்​கோ​லத்​தில் ஈடு​பட்ட சங்​கப் புல​வ​ரா​கிய கபி​லர்,​​ இதை அழ​கு​மிக்​க​தொரு நாட்​டிய அரங்​க​மா​கக் கற்​பனை செய்​கி​றார்.​
​
""ஆட​மைக் குயின்ற அவிர்​துளை மருங்​கில்
கோடை யவ்​வளி குழ​லிசை யாகப்
பாடின் அரு​விப் பனி​நீர் இன்​னி​சைத்
தோடமை முழ​லின் துதை குர​லா​கக்
கணக்​கலை இகுக்​கும் கடுங்​கு​ரல் தூம்​பொடு
மலைப்​பூஞ் சாரல் வண்டு யாழாக
இன்​பல் இமி​ழிசை கேட்​டுக் கலி​சி​றந்து
மந்தி நல்​லவை மருள்​வன நோக்​கக்
கழை வளர் அடுக்​கத்து இயலி ஆடும்​ம​யில்
நன​வுப் புகு விற​லி​யில் தோன்​றும்''​
​(அகம்.​ 82: 1}10)

க​வி​ஞர்​தம் கற்​ப​னை​யில் குறிஞ்சி மலைச்​சா​ரல் அழ​கிய ஆடு​க​ள​மா​கி​றது;​ மூங்​கில் துளைக் காற்​றின் இசை குழ​லோசை;​ முழங்கி இறங்​கும் அரு​வி​யின் ஒலி முழ​வோசை;​ மான்​க​ளின் சத்​தம் பெரு​வங்​கிய ஓசை;​ வண்​டு​க​ளின் முரற்சி யாழோசை என அமைந்து,​​ இனி​ய​தொரு குழு​வின் இசை​யாக விளங்​கு​கி​றது.​ மயில் விறல்​பட ஆடும் விற​லி​யா​க​வும்,​​ மந்​தி​கள் பார்​வை​யா​ளர்​க​ளா​க​வும் அமைந்​து​வி​டு​கின்​றன.​ இக்​காட்​சி​யில் ஈடு​ப​டு​ப​வர்​கள் நாட்​டிய அரங்​கம் முழு​வ​தை​யும் தங்​கள் அகக்​கண்​ணால் காண்​ப​தோடு,​​ அரங்​கில் உள்​ளோ​ரில் ஒரு​வ​ராய் அமர்ந்து நாட்​டி​ய​இன்​பம் துய்க்​கும் உணர்​வை​யும் பெறு​கின்​ற​னர்.​

சங்​க​கா​லத் தமிழ் மக்​கள் இயற்​கை​யோடு இயைந்த வாழ்​வி​னர்.​ காடு,​​ மலை,​​ கடல்,​​ வயல் ஆகிய நானில இயற்கை,​​ இள​மை​யில் அவர்​க​ளின் தாய்​ம​டி​யா​க​வும்,​​ வளர்ச்​சி​யில் பள்​ளி​யா​க​வும் திகழ்ந்​தது.​ திங்​க​ளும் தென்​ற​லும்,​​ புல்​லும் பூக்​க​ளும்,​​ மர​மும்,​​ பற​வை​யும் விலங்​கும் அவர்​க​ளுக்கு அறி​வூட்​டும் ஆசி​ரி​யர்​க​ளா​க​வும்,​​ ஆன்ம நலம் காட்​டும் குரு​வா​க​வும் அமைந்​தன.​ இயற்​கை​யின் மெüன மொழி​களை உண​ரும் உள்​ளம் படைத்​தி​ருந்​த​னர் சங்​க​கால மக்​கள்.​ அவற்​றின் அழ​கைக் கண்டு உணர்ந்து துய்க்​கும் திறன் பெற்​றி​ருந்​த​னர்.​ சங்​க​கா​லப் புல​வர்​கள்,​​ இயற்​கை​யின் புறத்​தோற்ற அழ​கில் மட்​டுமே ஈடு​பட்​டுப் பாட​வில்லை.​ மக்​கள்​தம் வாழ்வு நெறிக்​க​மைந்த நல்​ல​தொரு பின்​பு​ல​மா​கவே அப்​பா​டல்​க​ளில் இயற்கை அமைந்​துள்​ள​மை​யைக் காண​மு​டி​கி​றது.​​

நன்றி - தமிழ்மணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக