29/05/2012

தேடல் - சத்யானந்தன்

 முதலில் ஒரு சிறிய நீர்க்குமிழி. திரை முழுதும் அவை ஒன்றோடு ஒன்று மோதி அலைகின்றன. பின் மறுபடி அதே காட்சி. சிவப்பு வண்ணத்தில், பின் பச்சை, பின் மஞ்சள் என மாறிக் கொண்டே இருக்கிறது. செகந்தரபாத் கம்பெனி சரக்குகளை எந்தத் தேதி வரை என்ன விலைக்கு தர சம்மதித்தது என்ற விவரம் கம்ப்யூட்டருக்குள் இருக்கும் இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு நிமிடத்துக்கு மேல்மெளஸை அல்லதுகீபோர்டை இயக்கா விட்டால் திரையில் நீர்க்குமிழிகள் வரும் படி செய்தது ராஜன் தான். வெகு நேரமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். பொடுகும் விரட்டிக் கொண்டிருக்கிறார்.

அவருக்குப் பொடுகு என்று பட்டப் பெயர் வைத்ததே சுந்தர்ராஜன் தான். “ஹெட் க்ளார்க்தலைக்கு மேல் அரித்து எடுக்கும் போது பொடுகு என்னும் பட்டப் பெயர் பொருத்தம் தானே.கிட்டத் தட்ட எல்லா முக்கிய விவரங்களையும் கம்ப்யூட்டரில் அவன் தான் ஏற்றி வைத்திருந்தான். கேட்கும் போது அதை எடுத்துக் கொடுப்பான். அவனது முக்கியத்துவத்தை உதாசீனம் செய்து தனது அதிகாரத்தைக் காட்டுவார் பொடுகு.

ஸார்.. சாய்…” குரல் கொடுத்தப்படியே மேசையை சற்றே உயரமான ஒரு சிறுவன் ஒரு ப்ளாஸ்டிக் குப்பியில் தேனீரை வைத்து விட்டுப் போனான். எடுத்து உறிஞ்சினேன். இது மேசைக்கு வரும் போது தான் காலை பதினோரு மணி ஆனதே தெரியும். விரட்டு விரட்டு என்று விரட்டுவார் பொடுகு. ஒரு உறிஞ்சு உறிஞ்சி இருக்க மாட்டேன். ரப்பர் செருப்புத் தேயும் ஒலியோடு வந்து விட்டார். “கம்ப்யூட்டர் பிரின்ட் அவுட் எடுத்தியா?”

நிறைய சப் டைரக்டரி இருக்கு. ராஜன் என்ன பேருல சேவ் பண்ணியிருந்தான்னு தெரியல

சரி விடு. அந்த கொடேஷ்ன் போன செப்டம்பர்ல வந்தது. செப்டம்பர் மாச கடுதாசி இருக்குமே. 9/04 ஃபைல் அதுல தேடுவந்த வேகத்திலேயே மேனேஜர் அறைக்குப் போய் விட்டார்.
ராஜனைப் படிய வைக்க பொடுகு மேனேஜர் அறையிலிருந்து அவனைக் கூப்பிட்டு அனுப்புவார். கட்டளை தூள் பறக்கும். சில சமயம் அவன் வெளிப்படையாகப் பேசுவதை மேனேஜர் ரசித்து அவனைத் தட்டிக் கொடுத்து அனுப்புவதும் உண்டு.

மதிய உணவு இடை வேளை வரை தேடினேன். 9/04 போட்டு நான்கு ஐந்து பைல்கள் இருந்தன. சொல்லி வைத்த மாதிரி செகந்தரபாத் கம்பெனிக் கடிதம் சிக்கவில்லை.

மதிய உணவை ஒரு வாய் மென்றிருக்க மாட்டேன். “டெஸ்பாட்ச்ஆழ்வார் சாமி வந்தார். “தம்பி, அந்த லெட்டர் மேனேஜர் ரூம்ல அவரோட பீரோல இருக்கணும். அதெச் சொல்றதுக்கு ராஜன் ஒத்தனுக்குத் தான் துணிச்சல் உண்டு. குடுத்து வெச்சவன் காக்கடுதாசி கொடுத்துட்டுப் போயிட்டான்.” என்றார்.

மின்னே ஒரு தடவை அவனைத் தேடினாங்களே ஞாபகம் இருக்கா?” என்றார். கோயம்பத்தூரில் பெரிய தொகை பாக்கி வைத்த ஒரு புது ஏஜண்ட் தீடீரென முகவரி இல்லாமல் காணாமற் போய் விட்டான். மூன்று லட்ச ரூபாய் நிலுவை. அந்த ஆள்ஆர்டர்கொடுத்து சொற்ப தொகை முன் பணமாகக் கொடுத்த ஓரிரு நாட்களில் ராஜன் விசாரித்து விட்டு ஆள் கோயம்பத்தூருக்கே புதுசுஎன்று எச்சரித்தான். நிச்சயம் அந்த ஆள் கிடைக்க மாட்டான் என்று தெரிந்ததும் ராஜனைத் தேடத் துவங்கினார்கள். ராஜனை எப்படியும் தொடர்பு கொள்ளும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. என்னிடம் இருந்த அவனதுமொபைல் எண்தற்போது உபயோகத்தில் இல்லை. நிம்மதி. இத்தோடு விட்டு விடுவார்கள் என்று எண்ணினேன். ஆனால் பொடுகு விடுவதாக இல்லை. மாலதிக்கிட்டே கேட்டுப் பாருஎன்று கண் சிமிட்டினார்.

மதிய உணவு இடை வேளையில் தயங்கி மாலதி இருக்கைக்குப் போனேன். ‘நெட்டில் ஏதோ தமிழ் பத்திரிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள். என்னுடையஹலோவுக்கு அவள் கண்ணசைவில் பதில் சொன்னாள். “வந்த விஷயத்தை நீயே சொல்லுஎன்னும் ஒரு தோரணை பெண்களிடம் தென்படும். எப்படி அதைப் பிடிக்கிறார்கள்? அம்மாவிடமிருந்தா? தோழிகளிடமிருந்தா? “ராஜனைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்?” என்று எரிந்து விழுந்தால்? வாய்ப்பு அதிகமில்லை. ஏனெனில் ஒரு முறை இருவரும் அவனது இரு சக்கர வாகனத்தில் போவதை நான் பார்த்திருக்கிறேன். மதிய உணவு இடைவேளையில் இருவரும் பேசுவதை அடிக்கடி எல்லோருமே பார்த்திருக்கிறோம்.

அவளிடமிருந்து ஒருலேன்ட் லைன்எண் தான் கிடைத்தது. அது ஒரு வீட்டு எண். வெகு நேரம் கழித்து ஒரு நடு வயதுப் பெண் குரல் கேட்டது. ராஜன் இங்கே இல்லையே என்றார், நீங்க அவரோட அக்காவா என்றதற்கு அண்ணி என்று பதில் கிடைத்தது. அந்த அம்மாள் ராஜனுடைய அண்ணனின் அலுவலக எண்ணைக் கொடுத்தார். முதல் முறைஆப்பரேட்டர்ஒருஎக்ஸ்டென்ஷ்னுக்கு இணைப்பு கொடுத்தார். அறுந்து போனது. பிறகு முயல ராஜனின் அண்ணன் இருக்கையில் இல்லை. மறுபடி அவனது அண்ணிக்கே போன் செய்து மொபைல் நம்பரைக் கேட்டேன். நம்பர் என் மொபைல்ல இருக்கு. அதை என் பொண்ணு எடுத்துக்கிட்டுப் போயிருக்குஎன்றார்.

அதற்கு மேல் துரத்த என் பொறுமை இடம் கொடுக்க வில்லை. “கிடைக்கல ஸார்என்று கை கழுவினேன்.

இன்று அந்த அளவு கூட மெனெக்கெட எண்ணமில்லை. எப்படியும் ஒப்பேற்ற வேண்டியதுதான். ராஜன் பொடுகை மட்டும் அல்ல. என்னையும் மதித்து எந்த விவரமும் சொன்னது கிடையாது. அதனால் அவன் ராஜினாமாவுக்குப் பிறகு ஓரிரு விஷயங்கள் இது போல் குழம்பித் தவித்தன.

மதியம் நாலு மணிக்கு வரை தேடுவதாகப் போக்குக் காட்டினேன். நான்கு மணிக்கு மேல் மேனேஜர் அறைக்குப் போன பொடுகு திரும்பி வரவேயில்லை.

அன்று மாலை பேருந்து திருவான்மியூரைத் தாண்டும் போதுபஸ் ஸ்டாண்ட்எதிரில் உள்ள மதுக்கடையில் ராஜன் நுழைவதைப் பார்த்தேன். நான் கூப்பிட்டாலும் கேட்க முடியாத தூரம். வாகன இரைச்சல்.

அன்று இரவு பிடித்த மழை மறு நாள் காலை வரை நன்கு அடித்துப் பெய்ந்தது. அலுவலகம் வர எல்லோருக்குமே தாமதமாகி விட்டது. அன்று மேனேஜர் அலுவலகத்துக்கே வரவில்லை. பொடுகுஉம்மென்று இருந்தார். அலுவலகம் வர எல்லோருக்குமே தாமதமாகி விட்டது. அன்று மேனேஜர் அலுவலகத்துக்கே வரவில்லை. பொடுகு உம்னென்றிருந்தார். எனக்கு அப்படி ஒன்றும் வேலையில்லை. கம்ப்யூட்டரில் ஒவ்வொருஃபைலா திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். “பயோடேட்டாஎன்ற ஒருஃபைலில்ராஜனின் எல்லா விவரங்களும் இருந்தன. புது மொபைல் எண், முகவரி, லேண்ட் லைன் எண் எல்லாமே. நானாக எதற்குப் பொடுகு இடம் இதை சொல்ல வேண்டும்? அப்போதைக்கு என்னை விட்டு வைத்தவரை போதும். அடுத்து வந்த விவரங்களில் அதிக இம்சை எதுவும் இல்லை. பொடுகுக்காகவா அவன் ராஜினாமா செய்தான்? அதிகம்.

ஒரு நாள் காலை 7 மணி போல ஒரு தொலைபேசி அழைப்பு. ராஜன் தான். அவன் உறவினர் ஒருவருக்கு இதய அறுவை சிகிச்சை என்றும் என்னை ரத்த தானம் தரச் சொல்லியும் வேண்டினான்.

நன்றி - புது எழுத்து டிசம்பர் 2005 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக