01/09/2011

நாட்டுப்புறவியல் - வரையறை - ஜி.மஞ்சுளா

Folklore - என்னும் சொல் இரண்டும் சொற்களின் கூட்டுச் சொல்லாகும், Folo என்பது உழைக்கும் மக்களைக் குறித்துப்பின் ஏட்டறிவில்லாத பாமர மக்களைக்குறிக்கும், குறியீட்டுச் சொல்லானது lore என்பது மரபுச் செய்தித் தொகுதி என்ற பொருளைத் தந்து நிற்கிறது.

வழக்காறு என்பது வாய்மொழியாக வரும் oral. பாடல்கள், கதைகள், பழமொழிகள், விடுகதைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது. எனவே நாட்டார் வழக்காற்றியல் என்ற சொல்லோ Folklore - என்ற சொல்லுக்கு இணையானது என்று தே.லூர்து போன்ற நாட்டுப்புறவியல் அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும் பொதுவாக Folklore - என்பதற்கு நாட்டுப்புறவியல் என்ற சொல்லைப் பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

நாட்டுப்புற அல்லது வாய்மொழி இலக்கியம் எவ்வாறு தோற்றம் பெறுகின்றது என்பதை நோக்கும் போது ஒரு நிகழ்ச்சியின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டுகின்ற முறையில் ஒருவரோ அல்லது பலரோ செவி வழியாகப் பாடப்படுகின்ற பாடல்களைக் கதைகளைக் கேட்டுத் தங்களுக்கு ஏற்றவகையில் சூழ்நிலைக்குத் தக்கபடி மாற்றிக் கொண்டு பாடல்களை - கதைகளை உருவாக்குகின்றனர். 1846 ஆம் ஆண்டு வில்லியம் ஜான் தாமஸ் என்ற ஆங்கிலேயர் Folklore என்ற சொல்லை உருவாக்கினர். அதற்கு முன்னர் Poluat literature, Polpular Antiquites என்று பயன்படுத்தினர். Folklore என்ற இச்சொல்லில் Folklore என்ற இரு சொற்கள் இணைந்து காணப்படுகின்றன என்பதற்கு உரிய பொருள், இனம், நாடு, மக்கள் என்பதாகும், என்பதற்குரிய பொருள் மரபுச் செய்தியின் தொகுதி என்பதாகும்.

Folklore என்ற இச்சொல்லுக்கு இணையாகத் தமிழ்மொழியில் ''நாடோடி இலக்கியம்'', ''நாடோடி கலை'', ''நாட்டுப்புறப்பாடல்கள்'', ''நாடோடிப் பாடல்கள்'', ''வாய்மொழி இலக்கியம்'', ''நாட்டுப் பண்பாட்டியல்'', ''நாட்டார் வழக்காறு''. நட்டுப்புற இலக்கியம் நாட்டார் வழக்காற்றியல் என்று பல்வேறு தொடர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில் நாட்டுப்புற இலக்கியத்திற்கு மதிப்பையும். தகுதியையும் தேடித்தந்தவர், பேரா.நா. வானமாமலை ஆவார். Folklore என்ற சொல்லுக்கு முதன் முதலில் நாட்டுப் பண்பாட்டியல் என்ற தொடரை இவர் பயன்படுத்தினார். பின்னர் அத்தொடரில் சிக்கல் இருப்பதை உணர்ந்து நாட்டார் வழக்காறு என்ற தொடரைப் பயன்படுத்தினர்.

வரையறை

நாட்டுப்புறவியலை வரையறுக்கப் பல்வேறு அறிஞர்கள் முயன்றுள்ளனர், இதனால் பல்வேறு கருத்து வேற்றுமைகள் நிலவி வருகின்றன. ''மரியா லீச்'' என்பவர் Standard Dictionary of Folklore - என்ற அகராதியில் 21 வரையறைகள் வெளியிட்டுள்ளார். அவ்வரையறைகளுள் ஒன்று. நாகரிகம் வாய்ந்த மக்களின் மரபு வழி வந்த படைப்புக்களும். நாகரிகமற்ற பழங்குடிமக்களின் (Premetive Peoples) - மரபு வழி வந்த படைப்புக்களும் நாட்டுபுற இலக்கியங்கள் ஆகும். இவை ஒலிகளையும் சொற்களையும் ஒருவித ஓசை அமைப்புக்கு உட்படுத்தி அமைக்கப்பட்டவை. மேலும் மக்களின் நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், நிகழ்த்துக் கலைகள் (Performing Arts), நடனம், நாடகம் முதலியவையும் இவற்றுள் அடங்கும் என்று கூறியுள்ளார். நாட்டுப்புறவியல் என்பது நாட்டுப்புற மக்கள் பற்றிய ஓர் அறிவியல் அல்ல. ஆனால் மரபு சார்ந்த மக்களின் அறிவியல்; மரபு சார்ந்த மக்கள் பாடல் பற்றிய அறிவியலாகும் என்று ''ஜோனாஸ் பாலிஸ்'' என்பவர் கூறுகிறார்.

நாட்டுப்புறவியலை வரையறை செய்வதில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், நாட்டுப்புறவியல் அறிஞர்கள் ஐந்து பண்புகளைத் தொடர்புபடுத்திக் கூறுகின்றனர்.

அவையாவன,

1. வாய்மொழியாகப் பாடப்படுவது (Oral Literature)

2. மரபு வழிபட்டது (Traditional)

3. பல்வேறு வடிவங்களாகத் திரிபடைவது (Versions)

4. ஆசிரியர் அற்றது (No author)

5. ஒரு வித வாய்ப்பாட்டுக்குள் (மெட்டு) அடங்குவது

என்ற பண்புகளில் நாட்டுப்புறவியலை வரையறை செய்யும்பொழுது கருத்து ஒற்றுமை நிலவி வருவதைக் காணலாம்.

புற அளவைகளால் நாட்டுபுறவியலை வரையறை செய்வதைக்காட்டிலும் அக அளவைகளால் வரையறை செய்தலே சிறந்தது என்று தே. லூர்து கூறுகிறார்.

நாட்டுப்புறப்பாடல்

நாட்டுப்புறவியலானது இலக்கியம், கலை, கைவினைப் பகுதி ஆகிய மூன்றையும் உள்ளடக்கியது. நாட்டுப்புற இலக்கியத்தை,

1. பாடல்கள்

2. கதைகள்

3. கதைப்பாடல்கள்

4. பழமொழிகள்

5. விடுகதைகள் என்று ஐந்தாகப் பிரிக்கின்றனர்.

நாட்டுப்புறப்பாடல்களின் தன்மைகள்

1. நாட்டுப்புறப் பாடல்கள் கிராமிய மக்களால் பாடப்படுபவை

2. இவற்றிற்கும் ஆசிரியர் உண்டு, ஆனால் பெயர் தெரியாது.

3. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவை தோன்றியவை

4. ஏட்டிலக்கியங்களுக்கு நாட்டுப்புற இலக்கியங்கள் முன்னோடியாக இருந்தன. இவற்றுள் நாட்டுப்புறப்பாடல்கள் இசையை அடிப்படையாகக் கொண்டவை.

5. நாட்டுப்புற பாடல்களில் வந்த சொற்களே திரும்பத் திரும்ப வருதல் உண்டு, இத்தகைய தன்மை சங்க இலக்கியத்திலும் உண்டு. இதனால் சங்க இலக்கியத்தில் நாட்டுப்புறப் பாடல்களின் தாக்கம் உண்டு என்று கருதுகிறார்கள்.

6. நாட்டுப்புறப் பாடல்கள் எந்த மண்ணில் வழங்கப்படுகின்றனவோ அந்த மண்ணின் மணம், தன்மை, பேச்சு, மொழி போன்றவை அவற்றில் இருக்கும்.

7. எந்த மண்ணில் வழங்கப்படுகிறதோ அந்த இடத்துச் சூழல்கள் நாட்டுப்புறப்பாடல்களில் காணப்படும்.

8. பாடல் பாடும் திறன் கொண்டவர்கள் ஒரு கதையை நிகழ்ச்சியைச்சுட்டிப் பாடுவர்.

9. வாய் மொழியாக வருபவை. மரபு வழிப்பட்டவை.

10. இலக்கண வாய்ப்பாட்டுக்குள் அடங்காது என்பர். (மேலை நாட்டினரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டெழுந்தது இக்கருத்து)

11. இப்பாடல்களில் முருகியல் (அழகியல்) உணர்வு இருக்கிறது.

12. பல்வேறு வடிவங்களாகத் திரியக் கூடியவை, ஒரே பாடுபொருளாக இருந்தாலும், இடமாற்றத்தின் காரணமாக இப்பாடல்களில் திரிபுகள் ஏற்படும்.

13. உள்ளத்து உணர்ச்சிகளை உள்ளபடியே வெளிப்படுத்துவன நாட்டுப்புறப்பாடல்கள். இவை எந்தவிதமான பயன் கருதியும் பாடப்படுவன அல்ல.

14. நாட்டுப்புற மக்கள் பயன்படுத்தும் சொற்களும் தொடர்களும் இவற்றில் பயின்று வரும்.

15. வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகளைக் கூறுவதுடன் உண்மை நிலையைத் தெளிவாக்குவன.

பச்சை வளைய லிட்டேன்

பாங்கான பச்சை குத்தினேன்

சில்லுன்னு பாஞ்சுது சில்லி

ரத்தம் ஆயிடுச்சி

என்று கூறி அழுதாள், ராஜா இதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணி அப்பெண்ணையும் முறைப்படித் திருமணம் செய்து கொண்டார். பின் மூவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர் (தொகுத்தவர் ச. முருகானந்தம்)

நாட்டுப்புறக் கதைப்பாடல்

கதையைப் பாடலாகக் கூறுவது அல்லது பாடலில் கதை பொதிந்து வருவது கதைப்பாடல் என்றழைக்கப்படுகிறது. இது வாய்மொழியாகப் பரப்பப்டுகின்றது. இதை இயற்றியவர் யாராய் இருப்பினும் பாடுபவரின் உரிமையாக மாறி விடுகின்றது. கதைப்பாடல் ஆங்கிலத்தில் ''பாலட்'' என்றும், தெலுங்கில் கிராம கீதம் அல்லது பதம் என்றும் வங்காளத்தில் கீதகதா என்றும் அழைக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட சூழலில் குறிப்பிட்டதொரு பண்பாட்டில், வாய்மொழியாக ஒரு பாடகனோ அல்லது ஒரு குழுவினரோ சேர்ந்து நாட்டார் முன் எடுத்துரைத்து இசையுடன் நிகழ்த்தும் அல்லது நிகழ்த்திய ஒரு கதை தழுவிய பாடல் கதைப்பாடல் ஆகும் என்று நா. இராமச்சந்திரன் கூறுகிறார். தமிழில் ''அன்னைப் பாடல்கள்'' என்று கதைப்பாடல்கள் அழைக்கப்படுகின்றன. மேலும் தமிழில் வில்லுப்பாடல், கதை, கும்மி, பாட்டு, போர், மாலை, ஒப்பாரி, காவியம், சோபனம், தூது, மாம்மியம் என்ற பெயர்களில் கதைப்பாடல்கள் வழங்கி வந்துள்ளன. மூவர் அம்மானை கி.பி. 1575 இல் எழுந்தது. இதுவே தமிழில் உள்ள முதல் கதைப்பாடல்களை என்று முன்னர் தமிழ்க் கதைப்பாடல்களை ஆய்வு செய்தோர்கள் கூறுகின்றனர். ஆனால் இவ்வாறு புலவர்களால் எழுதப்பட்டு ஏட்டில் உள்ளவைகளைப் பாட்டுக்கதைகள் (Story Songs) என்று பின் வந்த ஆய்வர்கள் குறிப்பிடுகின்றனர்.

வகைகள்

கருத்துப்புலப்பாட்டு நோக்கில் கதைப் பாடல்களை ஆராய்ந்து சா. சவரிமுத்து கதைப் பாடல்களை 1. தெய்வமாக மாற்றப்பட்டோர் பற்றிய கதைப் பாடல்கள் (காத்தவராயன், மதுரை வீரன்) 2. தெய்வமாக மாற்றப்படதோர் பற்றிய கதைப் பாடல்கள் (தேசிங்குராஜன், கட்டபொம்மன்) 3. நிகழ்ச்சிக் கதைப்பாடல்கள் (தனுஷ்கோடி புயல்பாட்டு, மிக்கேலம்மாள் கதைப்பாட்டு) என்று மூன்று பிரிவிற்குள் அடக்கிவிடலாம் என்று கூறுகின்றார். ஆனால் கதைப்பாடல்கள் நான்கு வகைப்படும், அவை 1. இதிகாசத் துணுக்குகள் 2. சமூகக் கதைப்பாடல்கள் 3. வரலாற்றுக் கதைப்பாடல்கள் 4. கிராம தேவதைகளின் கதைப்பாடல்கள் என்று நா. வானமாமலை பிரிக்கின்றார்.

1. புராணம் தொடர்பானவை (அல்லி அரசாணி மாலை பவளக்கொடி மாலை, புலந்திரன் களவு மாலை)

2. வரலாறு தொடர்பானவை (இராஜாதேசிங்கு, கட்டபொம்மன் கதை, பூலித்தேவன் சிந்து)

3. சமூகம் தொடர்பானவை நல்லதங்காள் கதை, மதுரைவீரன் கதை, காத்தவராயன் கதை என்று ஆய்வாளர்கள் கதைப்பாடல்களைப் பிரிக்கின்றார்கள்.

புராணம் தொடர்புடையவையாகச் சொல்லப்படுபவை கதைப்பாடல்கள் (Ballads) அல்ல, இவை பாட்டுக் கதைகள் (Story songs) என்று குறிப்பிடத்தக்கது. இதில் ஆய்வாளர்களிடம் பல்வேறு மாறுபட்டக் கருத்துக்கள் நிலவுகின்றன.

கதைப் பாடலில் கதையின் தொடக்கத்திற்கு முன்னர் தெய்வங்கள் மீது காப்பு பாடப்படும். பின்னர் வணக்கமும் அதனைத் தொடர்ந்து அவையடக்கமும் கூறப்படும்.

பாடறியேன் படிப்பறியேன்

பாட்டின் வகை தொகையறியேன்

ஏடறியேன் எழுத்தறியேன் நான்

ஏட்டின் வகை தொகையறியேன்

என்று அமையும். கதையைக் கூறும் மரபான நுதலிப் புகுதல் இடம் பெற்றுப் பின்பு கதை தொடங்கி கதை முடிவில் வாழி பாடடி முடிப்பது கதைப்பாடலின் அமைப்பாக உள்ளது.

தன்மைகள்

1. கதை கேட்கும் மக்களுக்கு ஏற்பக் கதை நிகழ்ச்சிகளை மாற்றி பாடுவார்கள்

2. பாடகர்கள் வணக்கத்தின் போது பல தெய்வங்களை வழிபடுவர்

3. வீரர்கள் மற்றும் ராட்சதர்களின் உயிர்கள் ஏதாவது ஒரு மறைவிடத்தில் இருப்பதாகக் கூறுவது மரபு (எகா.) கான்சாகிபு சண்டை கதைப்பாடலில் கான்சாகிபுவின் உயிர் உச்சிப் பிடரியில் இருக்கிறது என்று பாடுவர்

4. கதைப்பாடல்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டு வருபவை

5. பாட்டாகப்பாடி எடுத்துரைத்து நிகழ்த்தப்படுபவை

6. பொருளாலும், நடையாலும், பெயராலும் மக்களுக்கே உரித்தாக அமையும் தனியொரு நிகழ்ச்சியும் கதைப் பாட்டாகப் பாடப்படும். இரு உண்மை நிகழ்ச்சியாக இருக்கும்.

7. நாடக உத்தி காணப்படும், இலக்கியப் பாதிப்புகள் கதைப்பாடலில் இடம் பெறும், உவமைகளுடன் கதை பாடப்படும்.

8. கதைப் பாடலில் வரும் கனவுகள் நிமித்தங்களாக அமையும். தமிழகத்தில் உள்ள கதைப் பாடல்கள் துன்பியல் முடிவுகளைக் கொண்டு விளங்குகின்றன.

9. வந்த அடிகளே திரும்ப வரும் இயல்பு கதைப் பாடல்களிலும் உண்டு.

10. நாட்டுப்புற மக்களின் நம்பிக்கைகளை இக்கதைப் பாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

11. கனவுகள் பலிக்கும் என்று நம்புதல், சகுனங்களில் நம்பிக்கை, கண்ணேறு கழித்தல், தெய்வங்கள் மீது ஆணையிடுதல், கவுளி (பல்லி) குறி பார்த்தல், மந்திரக்கட்டுப் போடும் வழக்கம் போன்ற நம்பிக்கை, பழக்கங்கள் தமிழகத்தில் இருந்தன என்பதைக் கதைப் பாடல்கள் உணர்த்துவதாக உள்ளன.

12. கதைப் பாடல்கள் வரலாறுகள் அல்ல. அவை வீரகாவியங்கள் இடையே மனிதப் பண்பின் உயர்ந்த அம்சங்களைப் போற்றுபவை, சமூகச் சீர்கேடுகளைக் கேலி செய்பவை, இவற்றைக் கற்பனையால் உருவான நாட்டார் பாடல் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அக்கற்பனைகள் ஆகாசக் கோட்டைகள் அல்ல என்று நா. வானாமாமலை கதைப்பாடல் பற்றிக் கூறுகிறார்.

கதைப்பாடல் வரையறை

1. கதையைக் கூறும் நாட்டுப்புறப்பாடலே கதைப்பாடல் புதிதாக அச்சில் வெளிவந்த பரப்பப்படும் கதைப்பாடல்களினின்று வேறுபட்டு வாய்மொழியாக எடுத்துரைக்கப்பட்டுக் கருத்துப் புலப்பாட்டைச் செய்வதே கதைப் பாடலாகும் - டேவிட்புக்கன்.

2. ஒரே வகையான யாப்பையும் ஓசையையும் கொண்டது, வாய்மொழியாகப் பரவுவது, எளிய சொற்களால் ஆனது, தற்சார்பற்றது உரைநடை மாற்றத்தால் கதை வளர்க்கப்படுவது - பிரித்தானியா கலைக் களஞ்சியம்.

நன்றி: வேர்களைத் தேடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக